இயக்குனர் பாரதிராஜாவின் 83ஆவது பிறந்தநாள் இன்று 💐

இயக்குனர் பாரதிராஜாவின் 83ஆவது பிறந்தநாள் இன்று 💐

இது சர்டிபிகேட்படி. ஆனா அவரது ரியல் பர்த் டே ஆகஸ்டு 23 ஆம். ஆனா இரண்டு பிறந்தநாளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக்கும்.)🥰 அல்லிநகரம் என்றொரு வில்லேஜில் பிறந்து கோலிவுட் சினிமாவின் ஆளுமையாக மாறிய இந்த மாபெரும் கலைஞன், ஒரு டிரெண்ட் செட்டராகவும் திகழ்ந்து வருகிறார். ஸ்டூடியோக்களுக்குள் சுழன்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை கிராமங்களை நோக்கி படையெடுக்க வைத்தவர் பாரதிராஜா தான். இன்று உச்சத்தில் இருக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் இவரின் படங்கள் தான் முன்மாதிரியாக இருக்கின்றன. ”என் இனிய தமிழ் மக்களே. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன் …" இந்த அறிமுக வார்த்தைகளுக்குக் கிடைக்கும் கரவொலி 35 வருடங்களுக்கு மேலாக இன்றைக்கும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருப்பதே, இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனைகளுக்குச் சான்று. மாறி வரும் காலச்சூழலில், தொலைந்து கொண்டிருக்கும் தமிழர் நாகரீகத்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் காட்டக்கூடிய வரலாற்று பொக்கிஷங்களாக பாரதிராஜாவின் படங்கள் உள்ளன. மண்வாசனையின் சொந்தக்காரரான இவர், தமிழ்நாட்டு கிராமங்களின் வாழ்வியலை…
Read More