உண்மையில் யார் – ‘டெவில்’ !!

சவரக்கத்தி படம் இயக்கிய ஜி ஆதித்யா இயக்கத்தில், மிஷ்கின் இசையமைப்பில் வந்திருக்கும் படம் டெவில்.

மனித மனதிற்குள் இருக்கும் டெவிலை அடையாளம் காட்டும் படம்

நடிகை பூர்ணா விதார்த் பிரிக்கும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

தமிழில் பொதுவாக சிறுகதைகள் இலக்கியங்கள் படமாக்கப்படாது, அதை மாற்றும் விதத்தில் ஒரு சிறுகதையிலிருந்து இப்படத்தை எடுத்திருக்கிறார் ஆதித்யா.

ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் திருமணம் தாண்டி வெளித்தொடர்பு இருக்கும் நிலையில், இருவரும் அதை விட்டு வெளியே வருகின்ற வேளையில், ஏற்படும் பிரச்சனை, அதற்கு இருவரும் எடுக்கும் முடிவு இதுதான் படத்தின் மையம்.

விதாரத்துக்கும் பூர்ணாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்குள்ளும் ஒரு புரிதலே ஏற்படவில்லை. நெருங்கி நெருங்கி வரும் பூர்ணாவை விலகி விலகி செல்கிறார் விதார்த். இதனால் விரக்தியடைந்த பூர்ணா ஒரு விபத்தில் இன்னொரு நாயகன் திரிகுன்னை சந்திக்க நேர்கிறது. இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத உறவு மேம்படுகிறது. அது நாளடைவில் காதலாக மாறுகிறது. இதற்கிடையே விதார்த் இன்னொரு நாயகி சுபஸ்ரீ உடன் காதல் தொடர்பில் இருக்கிறார். ஒரு நாள் விதார்த் தன் காதலியுடன் இருக்கும் பொழுது பூர்ணாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இன்னொரு புறம் பூர்ணா தன் காதலன் உடன் இருக்கும் பொழுது விதார்த்திடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இதையடுத்து இருவருக்குள்ளும் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பதை டெவில் படத்தின் கதை.

மொத்தமே நான்கு கதாபாத்திரங்கள் தான் மற்றவர்கள் எல்லாம் அங்கங்கே வந்து போகிறார்கள் அவ்வளவுதான். கதாபாத்திரங்களின் பின்னணியும், படத்தின் பிரச்சினையும் என எதுவுமே நம்பும்படியாக சொல்லப்படவில்லை. படம் நடப்பது தமிழ்நாட்டில் தானா ? இந்த கேள்விக்குறி படத்தின் காட்சிகளில் வெளிப்படையாக தெரிகிறது. படம் முழுக்க லாஜிக் பொத்தல்கள் முதலிரவு என்று வெளியில் எவனாவது வெளியில் செல்வானா ? அங்க ஆரம்பிக்கும் கேள்வி நம்மை படத்தை விட்டு வெளியே தள்ளி விடுகிறது

உண்மையிலேயே சவரக்கத்தி எடுத்த இயக்குனர் தானா? இப்படம் எடுத்தார் நம்ப முடியவில்லை. அத்தனை தடுமாற்றம் படம் முழுக்க தெரிகிறது. படத்தின் இறுதி பதினைந்து நிமிடங்களை நம்பி மொத்தக் கதையையும் எடுத்திருக்கிறார்கள். அந்த இறுதி பதினைந்து நிமிடங்கள் உண்மையில் கொஞ்சம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஆனால் அது மட்டும் படத்திற்கு போதுமா ?

மிஷ்கின் முதன்முதலாக இசையமைத்திருக்கும் படம், இசையை வயலின் வைத்து ஒப்பேற்றி விட்டால் போதும் என்று நினைத்திருக்கிறார். இனிமேல் இசையை விட்டுவிட்டு , இயக்கத்தில் கவனம் செலுத்தலாம்

படத்தின் உருவாக்கம் ஒரு டிவி நாடகத்தை பார்ப்பது போன்றே எடுக்கப்பட்டு இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இக்காலத்திலும் இவ்வளவு பின்தங்கிய படத்தை மிஷ்கின் குழுவில் இருந்து எதிர்பார்க்கவில்லை.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் இடைவேளைக்கு பிற்பாடு நடக்கும் கொலையும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் தான். இதை படத்தின் ஆரம்பத்திலேயே காட்டி, அதிலிருந்து கதையை கதையை கொண்டு சென்றிருந்தால் படம் வேறொரு தளத்தில் இயங்கி இருக்கும், இன்னும் நன்றாக இருந்திருக்கும்

டெவில் நம்மை சோதிக்கிறது