மழையில் அலைந்து திரியும் சினிமா பத்திரிக்கையாளனின் மனக்குமுறல்! – From The Dsek of ✍️கட்டிங் கண்ணையா!

கோலிவுட் பீஃல்டில் உலா வரும் பத்திரிக்கையாளர் பற்றி இந்த சினிமா பீ ஆர் ஓ பெரிசுகளுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா ? அவர்களுக்கு என்று சங்கம் ஒன்று எதற்கு இருக்கிறது எப்படி, எப்போது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தருகிறார்கள் !

தொடர்ந்து நாலு நாட்கள் எந்த நிகழ்ச்சியும் வைப்பதில்லை. நிகழ்ச்சி வைத்தால் ஒரே நாளில் 5 நிகழ்ச்சிகள் .. இதில் எதைப்பற்றி அவர்கள் ரிப்போர்ட் செய்வது?கேட்டால் புரொடியூசர் சொல்வதைத்தானே கேட்க முடியும் என்ற பதில் வருகிறது.

இப்போதெல்லாம் 100க்கும் அதிகமான YouTube ல் உடனுக்குடன் நிகழ்ச்சியை போட்டு விடுகிறார்களே அது போய்ச் சேர்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள்.
அவர்களையும் ஒரு மனிதர்களாக மதிப்பதே இல்லை. உண்மையில் நீங்கள் சினிமா மீடியத்தில்தான் இருக்கிறீர்களா ? சக மனிதனை ஒரு மனிதனாக மதிக்கக் கற்றுக் கொள்ளவே மாட்டீர்களா?

ஒரு விஷயத்தில் உண்மையை சொல்ல முடியுமா? உங்களால் உங்கள் குடும்பத்துடன் ஒரு நாளை செலவிட திட்டமிட முடியுமா?..

இப்போதெல்லாம் நாளைக்கு நிகழ்ச்சிக்கு என்றால் இன்று இரவு தான் தகவல் வரும் போக்கு அதிகரித்துக் கொண்டே போனது.  ஆனால் இப்போது அதையெல்லாம் தாண்டி இப்போதெல்லாம் நிகழ்ச்சிக்கு 2 மணி நேரத்துக்கு முன் வாட்ஸ் அப்பில் ஒரு மெசெஜ்.. அம்புட்டுத் தான்.!

முடிஞ்ச அளவு கன்வேயன்ஸை கவரில் வைத்து கொடுக்கிறோம், .. நீயூஸ் லிங், YouTube லிங் வருதா.. என்ன பிறகென்ன கவலை என்று நினைப்பதா மனிதம் !

அதிலும் YouTube க்கு வருபவர்கள் , பிரஸ் மீட்டுக்கு வரணும் படத்துக்கும் வரணும். அவனும் மனுசந்தானே!

உதாரணமாக இன்று காலை ..

9 மணிக்கு மன்சூர் அலிகான் பிரஸ் மீட்,
11 மணிக்கு கலைஞர் விழா தயாரிப்பாளர்கள் மீட்
12.30 க்கு ஜோ படம்
4 மணிக்கு லாக்கர் பிரஸ் மீட்
5.30க்கு லாக்கர் படம்
இனி 8 மணிக்கு 6மணிக்கு என சொன்ன சூரகன் பிரஸ் மீட்

இது அத்தனையும் ஒருத்தன் அட்டென்ட் பண்ணி வீடியோ போடணும், வெப்சைட்டில் நியூஸ் போடனும்

இதற்காக அவன் சொந்த காசில் பெட்ரோல் போட்டு மழையில் அலைந்து நாயாக வந்து அலைந்து அப்டேட் பண்ணணும். பேர் மட்டும் கவர் வாங்குற பத்திரிக்கை யாளன்தானே ?அதிலும் இப்போதெல்லாம் இந்தி மற்றும் தெலுங்கு, கன்னடப் படச் செய்திகளை நாளொன்றுக்கு ஆறேழு அனுப்பி `லிங்க் ப்ளீஸ்` என்று கேட்டு வாங்கிய படத்தின் பிரிவியூ ஷோ-வைக் கூட போட மனசில்லாதபீ ஆர் ஓ-க்கள்தான் இப்போது கெத்தாக அலைகிறார்கள்

எவர் தான் தட்டி கேட்பது!? அல்லது சுட்டிக் காட்டுவது?! டெய்லி ரிப்போர்ட்டர்கள் என்ற முகமுடியுடன் வந்து போவோர் சினிமா பிரபலங்களின் ரசிகர்களாக செலிப்பரிட்டியுடன் செல்ஃபீ எடுத்துக் கொண்டு கணிசமான கன்வேயன்ஸ் வாங்கிக் கொண்டு போவதால் வாய் மூடி வந்து போய் கொண்டிருப்பதையும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் வந்து விட்டது.

©️இப்படிக்கு

தமிழ் சினிமா பிரஸ் கிளப் யூனியன் மெம்பர்✍️  கட்டிங் கண்ணையா