ஜெய்லர் பட வெற்றியை படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த் !

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் தற்போது 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கடந்த சில நாட்களில் 160 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் ரஜினிகாந்தின் ஸ்டைலிஷ் நடிப்புதான் என்று பலரும் கூறி வருகின்றனர். வயதான தோற்றத்தில் மிகவும் ஸ்டைலாக நடித்து மாஸ் காட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

அதோடு அனிரூத்தின் பின்னணி இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக உருவாகியுள்ளார் இயக்குனர் நெல்சன். இப்படி படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்தும் ரசிகர்கள் கொண்டாட காரணமாக உள்ளது. இந்த படத்தல் ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், மோகன்லால், சுனில், தமன்னா, யோகிபாபு, ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்ட பல மொழி நடிகர்கள் நடித்துள்ளார். மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக மிரட்டியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான இப்படம் மூன்று வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்.இந்நிகழ்வில் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டாய்ங்க

error: Content is protected !!