பாலாஜி சக்திவேலின் யார் இவர்கள்…?!

பாலாஜி சக்திவேலின் யார் இவர்கள்…?!

காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். இவர் ரா..ரா.. ராஜசேகர்' படத்தைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு 'யார் ? இவர்கள்' என பெயரிட்டுள்ளார்கள். லிங்குசாமி தயாரிப்பில் புதுமுகங்கள் நடிக்க 'ரா.. ரா.. ராஜசேகர்' படத்தை இயக்கினார் பாலாஜி சக்திவேல். அப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இதனிடையே தனது அடுத்த படத்தின் பணிகளைத் துவங்கிவிட்டார் பாலாஜி சக்திவேல். இதிலும் புதுமுகங்களே நடிக்கவுள்ளார். 'யார்? இவர்கள்' என பெயரிடப்பட்டுள்ள படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் விஜய் மில்டன் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். கொலை செய்யும் அளவுக்கு கோபப்படும் ஒருவன், கோபமே இல்லாமல் கொலை செய்யும் ஒருவன். இவர்கள் தான் நாயகர்கள். இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக ஜனரஞ்சகமான அம்சங்களுடன் உருவாக்கி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இசக்கி கிஷோர், அஜய், சுபிக்‌ஷா, பாண்டியன்,…
Read More
சுவாதி கொலை வழக்கு பட டைட்டிலை ‘நுங்கம்பாக்கம்-முன்னு மாத்தியாச்சு!

சுவாதி கொலை வழக்கு பட டைட்டிலை ‘நுங்கம்பாக்கம்-முன்னு மாத்தியாச்சு!

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சுவாதி கடந்த ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே பரபரப்பாக்கிய இந்த கொலை வழக்கை மையமாக வைத்து ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் சினிமா எடுக்கப்பட்டு, அதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது.   இதையடுத்து, இந்த படத்துக்கு தடை விதிக்கக்கோரி சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வம், தயாரிப்பாளர் சுப்பையா, கதாசிரியர் ரவி ஆகியோருக்கு எதிராக மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களை போலீசார் கைது செய்யக் கூடும் எனக் கூறி மூவரும் முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி பிரகாஷ் விசாரித்து, 3 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற படத்தின் பெயர் ‘நுங்கம்பாக்கம்’…
Read More