பிரபுதேவா, வடிவேலு இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று  நடைபெற்றது !!

பிரபுதேவா, வடிவேலு இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று நடைபெற்றது !!

KRG கண்ணன் ரவியின்  பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் “Production no 4”,  படத்தின் பூஜை இன்று துபாயில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ்  (sam rodrigues) எழுதி இயக்குகிறார். இப்படத்தின் பூஜையில் திரைப்பிரபலங்கள், லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன்,   நடிகர் ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். தமிழ் திரையுலகில் மறக்க முடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு கூட்டணியாகும். இவர்கள் ஒன்றிணைந்தாலே திரையரங்கில் சிரிப்பு மழை பொழியும். வயிறு குலுங்க சிரிக்க வைத்து, ரசிகர்கள் மனதில் இன்றளவிலும் நீங்காத இடம் பிடித்த, இந்தக் கூட்டணியுடன்,…
Read More
பஹத் பாசில் – வடிவேலு இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ !!

பஹத் பாசில் – வடிவேலு இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ !!

நடிகர்கள் பஹத் பாசில் - வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் 'மாரீசன்' எனும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாரீசன்' எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். டிராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை…
Read More
சந்திரமுகி 2 திரை விமர்சனம்

சந்திரமுகி 2 திரை விமர்சனம்

இயக்கம் - பி.வாசு நடிகர்கள் - ராகவாலாரன்ஸ் , கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா இசை - கீரவாணி தயாரிப்பு - லைகா நிருவனம் பணக்கார குடும்பம் தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அந்த குடும்பத்தின் பிரச்சனை தீருவதற்கு குல தெய்வ வழிபாடு ஒன்றே தீர்வு என சாமியார் ஒருவர் கூறுகிறார். இதனால் அந்த குடும்பம் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறது. இவர்களுடன் குடும்பத்திற்கு சம்மந்தம் இல்லாத பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) உடன் வருகிறார். அவர்கள் அனைவரும் அந்த ஊரில் உள்ள வேட்டையாபுரம் அரண்மனையில் தங்குகின்றனர். அங்கு அவர்கள் செய்யும் சில விஷயங்களால் எதிர்பாராத அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெறுகிறது, இதன் பின் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை! பொதுவாக பேய் படங்களை பொறுத்துவரை, தனது சொந்த வாழ்க்கையில் பிரச்சினைக்கு உள்ளாகி, இறக்கும் நபர்களே பழிவாங்குவதற்காக பேயாக மாறுவார்கள். ஆனால், சந்திரமுகி படம் இதில் இருந்து வேறுபடுகிறது எந்தவொரு தொடர்பும்…
Read More
ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற ‘சந்திரமுகி 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு ! நடனமாடிய நடிகை கங்கனா !

ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற ‘சந்திரமுகி 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு ! நடனமாடிய நடிகை கங்கனா !

  இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற இப்படத்தின் பிரத்யேக டிரெய்லர் வெளியீட்டு விழாவில், 'சந்திரமுகி 2'…
Read More
ஆஸ்கார் விருது பெற்ற எம். எம். கீரவாணி இசையில் உருவான ‘சந்திரமுகி 2’ பட பாடல்கள் வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது

ஆஸ்கார் விருது பெற்ற எம். எம். கீரவாணி இசையில் உருவான ‘சந்திரமுகி 2’ பட பாடல்கள் வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது

  இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை…
Read More
வெளியானது ‘சந்திரமுகி 2’ படத்தின் இரண்டாவது பாடல் ! வெளியான குறுகிய காலத்தில் இப்படி ஒரு சாதனை படைத்துள்ளது!

வெளியானது ‘சந்திரமுகி 2’ படத்தின் இரண்டாவது பாடல் ! வெளியான குறுகிய காலத்தில் இப்படி ஒரு சாதனை படைத்துள்ளது!

  லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சந்திரமுகி 2' எனும் படத்தில் இடம்பெற்ற 'மோர்னியே..' எனத் தலைப்பிடப்பட்ட இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை காஞ்சனா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம்,…
Read More
சத்யராஜின் ’வெப்பன்’ படத்தை பாராட்டிய வடிவேலு ! படக்குழுவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்!

சத்யராஜின் ’வெப்பன்’ படத்தை பாராட்டிய வடிவேலு ! படக்குழுவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்!

  நடிகர் சத்யராஜின் அடுத்தடுத்த படங்களின் வரிசை என்பது நம்பிக்கைக்குரிய மற்றும் எதிர்ப்பார்ப்புகளை தூண்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் அவருடைய ’வெப்பன்’ என்ற திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. படத்தில் மற்றொரு கதாநாயகனாக வசந்த் ரவியும் நடித்துள்ளார். சஸ்பென்ஸ்- ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலைப் பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெற்றது. புதிய டெக்னாலஜியில் உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் தயாரித்திருக்க, குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். படத்தை வாழ்த்தி நடிகர் வடிவேலு பேசியதாவது, "என் அன்பு அண்ணன் சத்யராஜ் 'வெப்பன்' படத்தில் நடித்திருக்கிறார். உலக அளவில் செல்ல வேண்டும் என்பதற்காக பான் இந்திய அளவில் படத்தைத் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் எடுத்திருக்கிறார். முதன் முதலாக ஏஐ டெக்னாலஜியை உபயோகப்படுத்தி இருப்பது எனக்கு பெருமையாக…
Read More
மாமன்னனின் 50வது நாள் வெற்றி விழா! படக்குழுவிற்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர் !

மாமன்னனின் 50வது நாள் வெற்றி விழா! படக்குழுவிற்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர் !

  ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். மக்களின் பேராதரவால் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படம் திரையரங்குகளில் 50வது நாளை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் நேற்று பிரமாண்ட விழா நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.  இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் AR ரஹ்மான், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்குப் பரிசுகள் வழங்கினர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் M.செண்பகமூர்த்தி, அர்ஜூன்துரை ஆகியோர் உடனிருந்தனர்.   இவ்விழாவினில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது . படம் வெற்றி பெறக்…
Read More
ஓடிடி தளத்தில் 1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த மாமன்னன் திரைப்படம்!

ஓடிடி தளத்தில் 1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த மாமன்னன் திரைப்படம்!

  ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்ததோடு, உலகளவில் 1.2 மில்லியன் பார்வைகளைக் குவித்து சாதனை படைத்துள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜின் அற்புதமான உருவாக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளில் கோலாகலமான வரவேற்பைப் பெற்றது. காமெடி நடிகராக கொண்டாடப்பட்ட வடிவேலு முதன்முறையாக மாறுபட்ட வேடத்தில் மாமன்னனாக வாழ்ந்திருந்தார். பகத் பாசில் ரத்னவேலு வாக வாழ்ந்து காட்ட உதயநிதி மக்களின் மனசாட்சியின் உருவத்தை தன் பாத்திரம் மூலம் அழகாக பிரதிபலித்தார். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல்,  விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரிடமும் இப்படம் பாராட்டுக்களை குவித்தது. தேனி ஈஸ்வரின் கண்கவர் ஒளிப்பதிவு, செல்வா RK வின் எடிட்டிங், மனதை உருக்கும் இசைப்புயல் ஏ…
Read More
ராஜ நடைபோட்டு மன்னராக நடந்து வரும் ராகவா லாரன்ஸ்! வெளியானது ‘சந்திரமுகி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ராஜ நடைபோட்டு மன்னராக நடந்து வரும் ராகவா லாரன்ஸ்! வெளியானது ‘சந்திரமுகி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

  தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திகில்- காமெடி திரைப்படமான 'சந்திரமுகி 2' படத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில், ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது. பன்முக திறமையுள்ள கலைஞரான ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' இந்த ஆண்டின் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தை பி. வாசு இயக்கியிருக்கிறார். மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களை வழங்கிய பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக இந்த திரைப்படம் தயாராகிறது. இதில்…
Read More
error: Content is protected !!