இசை வெளியீடு விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமுள்ள “சந்திரமுகி 2” படக்குழு!

இசை வெளியீடு விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமுள்ள “சந்திரமுகி 2” படக்குழு!

  லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நட்சத்திர இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனித்திருக்கிறார். ஹாரர் வித் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.…
Read More
உண்மையான கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ”கடத்தல்” படம் ஜுலை மாதம் வெளியாகிறது!

உண்மையான கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ”கடத்தல்” படம் ஜுலை மாதம் வெளியாகிறது!

D.நிர்மலா தேவி நல்லாசியுடன் PNP கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ், தயாரித்துள்ள படம் “கடத்தல்” . கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக M.R தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா,ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சுதா,நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ் வாணன், R.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன், மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குனர் சலங்கை துரை இதனை பற்றி கூறியதாவது… ஒரு முக்கியமான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு காமெடி மற்றும் கிரைம் திரில்லர் திரைப்படமாக இதை உருவாக்கி இருக்கிறோம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இக்கால இளைஞர்களே எடுத்துக்காட்டு தாய்,…
Read More
அரன்மணை படம் போல தொடர்ந்து பல பாகங்களாக வெளியாகும் தலைநகரம்! சுந்தர் சி இன் அறிவிப்பு!!

அரன்மணை படம் போல தொடர்ந்து பல பாகங்களாக வெளியாகும் தலைநகரம்! சுந்தர் சி இன் அறிவிப்பு!!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த காமெடி கலந்த ஆக்சன் படம் தான் தலைநகரம் இந்தப் படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் .. தயாரிப்பாளர் SM பிரபாகரன் பேசியதாவது.. எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமென்று ஒரு ஆசை உண்டு. அவர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு நமக்கு செட்டாகுது, நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா எனக்கு…
Read More
“மாமன்னன்” படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

“மாமன்னன்” படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

  ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். "மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் First Look போஸ்டர் மே 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால் படக்குழுவினர் இன்றே இப்படத்தின் போஸ்டரை வெளியிட முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் "மாமன்னன்" திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More
நாய் சேகர் ரிட்டன்ஸ் எப்படி இருக்கு!

நாய் சேகர் ரிட்டன்ஸ் எப்படி இருக்கு!

நாய் சேகர் கேரக்டரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலுவிற்கு இந்த படம் சிறப்பானதாக அமைந்ததா என்று பார்க்கலாம். நாய் கடத்தல்காரன் என்ற கதாபத்திரத்தில், தனது கேங்க் ஓடு வரும் வடிவேலுவின் அதகளத்தை எதிர்பார்த்து உட்கார்ந்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனால், ஆனந்தராஜின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. மேலும் வடிவேல், ஆனந்த்ராஜ் இருவரின் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தவிர படத்தில் ஈர்க்கும் படி எதுவும் இல்லை. இப்படத்தில் ஷிவானி நாராயணன் வில்லன் மேக்ஸின் சகோதரியாக நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் தான் வருகிறார். ஷிவானியின் நடிப்பு பாராட்டுக்குரியது. படத்தின் திரைக்கதையில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் இயக்குனர் கதைக்களத்தில் தொலைந்துவிட்டார். பின்னணி இசை படத்துக்குக் கைகொடுக்கிறது. விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென இருக்கின்றன. ஆனால், படம் தான் வடிவேலு நினைத்தபடி ஆடியன்ஸ் மனதில் ஒன்றவில்லை. படத்தில் ஒரு சில நகைச்சுவை…
Read More
சோகமான பபூன் நிலைமையில் இருந்தேன் – வடிவேலு உருக்கம்

சோகமான பபூன் நிலைமையில் இருந்தேன் – வடிவேலு உருக்கம்

லைகா நிறுவனம் சார்பில் ‘புரொடக்சன் 23’ என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இயக்குனர் சுராஜ் பேசுகையில்,” கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோக மயமாக இருந்தபோது நானும், வடிவேலுவும் சிரித்து பேசி உருவாக்கிய கதை இது. வடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்தது இல்லை. அவருடைய ரீ என்ட்ரி முழுநீள நகைச்சுவை படமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக இரண்டு ஆண்டுகள் செலவழித்து சிரித்து சிரித்து உருவாக்கிய கதைதான் இது. இதனை தொடங்க நினைத்தபோது ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டது. இறுதியில் ஜி கே எம் தமிழ் குமரன் மூலம் சுபாஷ்கரனிடம் பேசினோம். அவர் வடிவேலுவின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறினார். இதற்காகவே லண்டனிலிருந்து இந்தியாவிற்கு வந்தார். அவர் வாக்குறுதி அளித்தபடி வடிவேலுவின்…
Read More