நூறு இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘வதந்தியின் பின்னணியிசை

நூறு இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘வதந்தியின் பின்னணியிசை

மேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கும் 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'எனும் வலைதளத் தொடரின் பின்னணியிசையை, இந்த தொடருக்கான இசையமைப்பாளர் சைமன் கிங், உள்ளூர் தமிழ் பாடகர் குழு மற்றும் புடாபெஸ்ட் இசைக் குழுவுடன் இணைந்து நூறு இசைக் கலைஞர்களுடன் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியிருக்கிறார். ஒரு கிரைம் திரில்லர் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு, பின்னணியிசை ஒரு முக்கியப் பங்காற்றியிருக்கிறது. தொடரில் இடம்பெறும் திருப்பங்களுக்கும், எதிர்பாராத சுவாரசியமான திடீர் திருப்பங்களுக்கும் உற்சாகப்படுத்தும் வகையில் பின்னணியிசை அமைந்திருக்கிறது. ப்ரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' தொடரின் இசையமைப்பாளரான சைமன் கிங், இந்த தொடரைப் பார்வையாளர்களிடத்தில் பிரத்யேகமாக அடையாளப்படுத்தும் வகையில் முகப்பு பாடலை அமைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார். தொடரின் துவக்கத்தில் இடம்பெறும் இந்தப் பாடல், நாற்பது பாடகர்களால் பாடப்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் சைமன் கிங், இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து நூறு இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து இதை…
Read More
எஸ் ஜே சூர்யாவின் முதல் வெப் தொடர் “வதந்தி” டிரைலர் வெளியீடு

எஸ் ஜே சூர்யாவின் முதல் வெப் தொடர் “வதந்தி” டிரைலர் வெளியீடு

  அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான 'சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வெளியாகவிருக்கும் அசல் தொடரான 'வதந்தி தி…
Read More
டிசம்பர் 2 அன்று வதந்தி  வெப் சீரிஸ் அமேசானில் வெளியாகும்

டிசம்பர் 2 அன்று வதந்தி வெப் சீரிஸ் அமேசானில் வெளியாகும்

பிரைம் வீடியோவின் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ் க்ரைம் த்ரில்லர் திரைப்படமான, வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி, டிசம்பர் 2 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் புஷ்கர் மற்றும் காயத்ரி , ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கிய இந்த அமேசான் ஒரிஜினல் தொடர் ஸ்ட்ரீமிங் வெளியீட்டில் பன்முகத் திரைப்படக் கலைஞர் எஸ்.ஜே. சூர்யா தனது அறிமுகத்தை தொடங்குகிறார். வெலோனி என்ற பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கும் சஞ்சனாவும் இந்தத் தொடரில் முதல் முதலாக அறிமுகமாகிறார், மற்றும் லைலா, எம். நாசர், விவேக் பிரசன்னா, குமரன், மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் அடங்கிய ஒரு நட்சத்திரப்பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிசுகிசுக்கள் என்று பொருள்படும் வதந்தி என்ற தலைப்புக்கு இணங்க, இதன் அறிமுக நடிகையாக சஞ்சனா (Sanjana) ஏற்றுள்ள இளம் மற்றும் அழகு ததும்பும் வெலோனி என்ற கதாபாத்திரத்தின் வதந்திகளால் நிறைந்த ஒரு புதிரான உலகிற்கு…
Read More
டான் திரைப்பட விமர்சனம்

டான் திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, RJ விஜய், பால சரவணன், முனீஸ்காந்த், காளி வெங்கட், சிவாங்கி தயாரிப்பு: லைகா புரொடக்‌ஷன், SK புரொடக்‌ஷன் இயக்குனர்: சிபி சக்ரவர்த்தி இசையமைப்பாளர்: அனிருத் ஒளிப்பதிவு: KM பாஸ்கரன் படத்தொகுப்பு: நாகூரான் ராமசந்திரன் கல்லூரியில் யாருக்கும் அடங்காமல் தன் போக்கில் டானாக சுற்றி கொண்டிருக்கும் ஒருவன், தன்னை எப்படி கண்டுணர்ந்தான் என்பதே கதை. படத்தின் மொத்த பலமும் சிவகார்த்திகேயன் தான். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தனது திரை ஆளுமையால் படத்தை கட்டி இழுத்துள்ளார். காமெடி, செண்டிமெண்ட், காதல் என மூன்றும் கலந்து அமைந்த திரைக்கதையில் ஹீரோவுடைய பங்கு மிகவும் முக்கியமானது. இவை அனைத்தையும் தேவையான இடத்தில் தேவையான அளவு வழங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் கமர்சியல் பார்முலா மறைந்து போய், வேறு பக்கம் திசை திரும்பியிருந்த படங்களுக்கு மத்தியில், மீண்டும் ஒரு முழுக்க முழுக்க கமர்சியல் எலமெண்ட்க்குகளை அள்ளி…
Read More
சினிமா ஏழை பணக்காரன் யாரையும் பார்க்காது – எஸ் ஜே சூர்யா

சினிமா ஏழை பணக்காரன் யாரையும் பார்க்காது – எஸ் ஜே சூர்யா

மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா”.  ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.  கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நடித்துள்ளனர். விஜய் தமிழ்செல்வன் இயக்கியுள்ளார். உலகமெங்கும் 2022 பிப்ரவரி 11 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.  இந்நிலையில் படக்குழுவினர் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.   இவ்விழாவினில்…   எஸ் ஜே சூர்யா பேசியதாவது… ‘அஷ்டகர்மா’ விஜய் அவர்கள் நல்ல கதை செய்து அதை அழகான திரைக்கதையில் சொல்லியுள்ளார். காட்சிகள் பார்க்க நன்றாக இருக்கிறது. எல்லோருமே அவர்கள் மனம் சொல்வதை நோக்கி பயணம் செய்து வருகிறார்கள். கிஷன் செல்வாக்கு மிகுந்தவர்,  அவர் வந்து கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அவர் தன் லட்சியம்…
Read More
எஸ்.ஜே .சூர்யா நடிக்கும் “ கடமையை செய் “  பட பூஜை!

எஸ்.ஜே .சூர்யா நடிக்கும் “ கடமையை செய் “ பட பூஜை!

நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ கடமையை செய் “. பல வெற்றிப்படங்களை இயக்கியதோடு தற்போது பிரபல நடிகராகவும் உள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குனர் சுந்தர்.C தயாரித்து, நாயகனாக நடித்த “ முத்தின கத்திரிக்கா “ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய வேங்கட் ராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு – வினோத் ரத்னசாமி இசை - அருண்ராஜ் கலை – M.G.முருகன் எடிட்டிங் - N.B.ஸ்ரீகாந்த் ஸ்டண்ட் - பிரதீப் தினேஷ் நடனம் – தீனா, சாய் பாரதி தயாரிப்பு மேற்பார்வை – R.P.வெங்கட் மக்கள் தொடர்பு – மதுரை செல்வம், மணவை புவன். தயாரிப்பு - T.R.ரமேஷ்,…
Read More