மகாராஜா தமிழ் சினிமாவின் பொக்கிஷம் !!

மகாராஜா தமிழ் சினிமாவின் பொக்கிஷம் !!

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, விஜய்சேதுபதியும் இயக்குநர் நிதிலனும்.. இந்தப்படம் உங்களுக்கு ஒரு அனுபவம் தரும், பல சர்ப்ரைஸ்கள் படத்தில் இருக்கிறது, தயவு செய்து அதை வெளிப்படுத்தி விடாதீர்கள், முதல் முறை பார்க்கும் அனைவருக்கும் அந்த அனுபவம் கிட்டட்டும் என்றனர். இந்தப்படம் பார்த்த போது கிடைத்தது ஒரு பேரனுபவம்.. எனக்கு விருமாண்டி பார்த்த போது அதன் உருவாக்கத்திலும், அபிராமி இறப்பு முதலாக பல காட்சிகளில் எனக்கேற்பட்ட பாதிப்பும், இந்தப்படத்திலும் பல இடங்களில் கிடைத்தது. சமீபத்தில் தமிழ் சினிமா பழைய மாதிரி இல்லையே என்று ஏற்பட்ட அத்தனை ஏக்கத்தையும், போக்கியிருக்கிறான் மாகாராஜா. கதை திரைக்கதை எல்லாம் எப்படி இருக்க வேண்டும். ஒரு திரைப்படத்தில் ஒவ்வொரு பாத்திரங்களும் எப்படி அணுகப்பட வேண்டும். அதை எல்லாம் எப்படி ரசிகனுக்கு தர வேண்டும் என்றெல்லாம் பாடமெடுத்திருக்கிறது. இந்தப்படம். இதற்குமேல் படிக்காதீர்கள்.. தனது மகளை காப்பாற்றிய குப்பைதொட்டியை திருடர்கள் திருடிவிட்டதாக போலீஸுக்கு போகிறான் ஒரு சாதாரண சவரத்தொழிலாளி. அவனை பைத்தியமாக…
Read More