கல்லூரி வாழ்க்கையை பிரதிபலிக்கும்  பிரைம் வீடியோவின் புதிய தமிழ் தொடரான “எங்க ஹாஸ்டல்”

கல்லூரி வாழ்க்கையை பிரதிபலிக்கும் பிரைம் வீடியோவின் புதிய தமிழ் தொடரான “எங்க ஹாஸ்டல்”

மிகவும் அதிகளவில் விரும்பப்பட்ட  இளைஞர்களின்  பிரபலமான நகைச்சுவை ஹிந்தி தொடரான ஹாஸ்டல் டேஸின் தமிழ் பதிப்பான எங்க ஹாஸ்டல் தொடரின் வெளியீட்டை பிரைம் வீடியோ சமீபத்தில் அறிவித்தது. TVF ஆல் உருவாக்கப்பட்ட இந்தத் தொடரில், மாணவர்கள் தங்களின் அடையாளம், நட்பு, காதல், வாழ்க்கை மற்றும் கல்வி போன்ற பல்வேறு வாழ்க்கை போராட்டங்களை எதிர்கொண்டு போராடிவரும் வாழ்க்கையினூடே அதுதொடர்பான வேடிக்கையான சூழ்நிலைகளை காட்சிப்படுத்தியிருக்கிறது. பிரைம் வீடியோ தொடர் வெளியிடப்படும் நாள் நெருங்கி வரும் இந்த வேளையில் இதன் ட்ரெய்லர் வெளியீடு,  பார்வையாளர்களின் ஆர்வத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது. எங்க ஹாஸ்டலின் விசித்திரமான மற்றும் உற்சாகமளிக்கும் பைத்தியக்காரத்தனமான ரசிக்கத்தக்க கொண்டாட்டங்களில் ஒரு சிலவற்றை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். அவினாஷ் ரமேஷ் ஏற்றிருக்கும் சித்தப்பு என்ற பாத்திரம் ஒரு , குறும்புத்தனமான, கவலையற்ற அடக்குமுறையையாளர் என்றாலும் கூட அவரிடம் பல ரகசியங்கள் அடங்கியுள்ளன. வயதில் மூத்தவர், ஆனால் புதிய மாணவர்களின் அதே வகுப்பில் பயின்றுவருபவர், அவரது…
Read More