17
Sep
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான , ‘ஃபால் ‘( Fall ) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது ! ‘வெர்டிஜ்' (Vertige) என்ற விருது பெற்ற கனடிய மினி வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலை, பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார். சென்னை (செப்டம்பர் 16, 2022): டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக வரவிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான ‘ஃபால்’ ( Fall ) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வெப் சீரிஸில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி, எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர். ஃபால் தொடரின் கதையானது, தென்னிந்தியாவின் கோயம்புத்தூர் நகரை மையமாக வைத்து, ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான வெப் சீரிஸாக எடுக்கப்பட்டுள்ளது.…