28
Jul
தமிழ் சினிமா இன்று தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக, அரசியல் மற்றும் சமூக தளங்களில் வலுவாக நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த மகத்தான வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சினிமா உலகம் மறந்தாலும் வரலாறு ஒருபோதும் மறக்காது. அவர்களில் மிக முக்கியமானவர், தமிழ் சினிமாவை ஒரு பெரிய ஆலமரமாக வளர்க்க அன்றே அஸ்திவாரமிட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார் எனும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மனிதர். அவர் இல்லையென்றால், இன்று ஒரியா அல்லது போஜ்புரி படங்களைப் போலத்தான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியும் இருந்திருக்கும்; அவர்தான் அதை மாற்றினார். செட்டியார்களின் கலை உணர்வும் தொழில் பக்தியும் பொதுவாக நகரத்தார் எனப்படும் செட்டியார்களின் இயல்பு அல்லது தர்மம் காலத்திற்கேற்ற தொழில்களை மேற்கொள்வதும், அதனை கலை உணர்வுடன் ரசிக்கும்படியாகச் செய்வதும்தான். செட்டியார்களின் பெருவாழ்வுக்குக் காரணம் தொழில்பக்தி என்றாலும், எல்லாவற்றையும் கலை உணர்வுடன் செய்வது அவர்களின் பெருமைக்கு முக்கியக் காரணம். அது வீடு, உணவு, நகை என்றல்லாமல், வழிபாட்டிலும் கோயில்களிலும் கூட ஒரு…
