விஜய் சேதுபதியின் அடுத்த படைப்பு ‘காந்தி டாக்ஸ்’,

விஜய் சேதுபதியின் அடுத்த படைப்பு ‘காந்தி டாக்ஸ்’,

Zee Studios நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘காந்தி டாக்ஸ்’, வசனமில்லா மௌனப் படமாக உருவாகிறது. ப்ளாக் காமெடி ஜானரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் படத்தில், விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்கின்றனர். Zee Studios, தொடர்ந்து மாறுபட்ட களங்களில் வித்தியாசமான திரைப்படங்களை தந்து, இந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் அறிமுக ப்ரோமோ படத்தின் மையத்தை பார்வையாளர்களுக்குக் கொடுத்தது. ஒரு மௌனப் படமாக இருப்பதால், காந்தி டாக்ஸ் அனைத்து ‘மொழி’ தடைகளையும் உடைத்து, மறந்து போன கடந்த கால மௌனப் பட சகாப்தத்தை - நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் என்பது உறுதி. இப்படத்தில் பிரபல முன்னணி திரைபிரபலங்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குநர் கிஷோர் P பெலேகர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின்…
Read More
மணிரத்னம் தவிர யாராலும் இப்படம் எடுக்க முடியாது – கார்த்தி

மணிரத்னம் தவிர யாராலும் இப்படம் எடுக்க முடியாது – கார்த்தி

லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், தமிழ் திரைவரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வருகிறது, பொன்னியின் செல்வன் திரைப்படம். தமிழ் திரையுலகம் இது வரை கண்டிராத வகையில் பெரும் நடசத்திர கூட்டணியில் பிரமாண்ட படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் “பொன்னி நதி” இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், இன்று பிரமாண்ட விழாவில், எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில், ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவினில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது.., இங்கு இந்த இடத்தில் ரசிகர்களுடன் இந்த பாடலை வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சி. இது தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம். இந்த படத்தின் கதை அனைவருக்கும் தெரியும், ஆனாலும் படம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கான ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது. இந்த படம் எடுத்தது…
Read More

சிங்கிள் ஷாட்யை தாண்டி இரவின் நிழலில் என்ன இருக்கு?

இரவின் நிழல் நந்து என்னும் 55 வயது இருக்க கூடிய ஆள் ஒரு வழக்கிற்காக போலீஸிற்கு பயந்து பதுங்கி இருக்க, அவனது வாழ்கையை ஒரு முறை பின்னோக்கி பார்த்து, அவன் கடந்து வந்த பாதையை நினைப்பதே இந்த கதை. உலகத்தின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட், 350 பேரின் உழைப்பு, தமிழ் சினிமாவின் பெருமை மிகு தருணம், பார்த்திபனின் புது முயற்சி என இந்த படத்தின் மேல் இருக்கும் அற்புத அம்சங்களை விலக்கி, ஒரு பார்வையாளனுக்கு படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மிகவும் டார்க் ஆன கதையை, டார்க் ஆன திரைக்கதை மூலமாக சொல்லியிருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை நேராக சொல்வதை விட நான் லீனியர் முறையில் சொல்வதே புத்திசாலி தனம் என நினைத்து திரைக்கதை அமைத்த எழுத்தாளர் பார்த்திபனுக்கு பாராட்டுகளை கொடுக்கலாம். ஆனால் திரைக்கதை அவ்வளவு நேர்த்தியாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும். சுவாரஷ்யமான காட்சிகள்…
Read More
சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ பட பாடல்கள் வெளியீடு*

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ பட பாடல்கள் வெளியீடு*

  ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ்சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.   நிகழ்ச்சியில் 'கோப்ரா' படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின்பாடல்களை அறிமுகப்படுத்தி,…
Read More
லைகா நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு

லைகா நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு

    ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல், உருவாக சாத்தியமேயில்லை என்பது இப்படத்தின் டீஸர் மூலம் தெரியவருகிறது. 'பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் இது போன்ற வரலாற்று கதைகள் தமிழ் மொழியில் வெளியாகாதா..? என்ற எண்ணம் ஏற்பட்டது. அதிலும் அமரர் கல்கி உலகம் போற்றும் சோழ சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ராஜ ராஜ சோழன் பற்றிய வரலாற்றை உரிய கல்வெட்டு ஆதாரங்களுடன் 'பொன்னியின் செல்வன்' என்ற நாவலாக படைத்திருக்கிறார். இந்நிலையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படங்களை தயாரித்து, அதனை சர்வதேச அளவிலான தமிழர்களுக்கும், ரசிகர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதில் அலாதியான பெருவிருப்பம் கொண்டு தயாரிப்பாளர் சுபாஷ்கரன் லைகா ப்ரொடக்ஷன்ஸ் என்னும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் நோக்கத்தை துல்லியமாக அவதானித்த தமிழ்…
Read More
‘கபடதாரி’ -டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது!

‘கபடதாரி’ -டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது!

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன் தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. G. தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் நவம்பர் 13 ஆம் தேதி டீசர் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ‘கபடதாரி’ டீசரை வெளியிடுகிறார். திரைப்பட ‌வெளியீடு மற்றும் தயாரிப்பு என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் தயாரிப்பாளர் G. தனஞ்ஜெயனின் தயாரிப்பில் கடந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற ‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு ‘கபடதாரி’ வெளியாக உள்ளதால் ரசிகர்களிடமும், திரையுலகிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ‘கபடதாரி’ படத்தின் டீசரை வெளியிடுவதால், அப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ‘கபடதாரி’ தரத்துடன் மற்றும் வித்தியாசமான திரைக்கதையோடு ரசிகர்களை…
Read More
’99 சாங்க்ஸ்’ படத்தின் நிலை என்ன? – ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

’99 சாங்க்ஸ்’ படத்தின் நிலை என்ன? – ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம் '99 சாங்க்ஸ்' இப்படத்தை தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் தயாரிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தின் தற்போதைய நிலை குறித்து, ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அன்பார்ந்த இசை ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளே, உங்களில் பலர் '99 சாங்க்ஸ்' படத்தின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள். சரியான நாயகன் மற்றும் நாயகியைக் அடையாளம் காண, கடந்த சில வருடங்களாக தேவையான நேரமெடுத்து கிட்டத்தட்ட 1000 பேரை நாங்கள் பரிசீலித்துள்ளோம். திரையில் புத்துணர்ச்சியையும், திறமையையும் பிரதிபலிக்கும் அந்தச் சரியான, விசேஷமான நடிகர்களை நாங்கள் தேடிப்பிடித்துவிட்டோம். முதன்மை நடிகர்கள், கடந்த ஒரு வருடமாக கே.எம்.மியூஸிக் கன்சர்வேடரியில்,அவர்கள் கதாபாத்திரத்துக்கு தேவையான இசை வாத்தியங்களை வாசிக்க பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் ஹாலிவுட்டில் நடிப்புக்கான பிரத்யேக பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொண்டுள்ளனர். இந்த வருடம் இந்தியாவில் படப்பிடிப்பு…
Read More
“ஒன் ஹார்ட் மியூசிஷியன்ஸ் பவுண்டேஷன்” தூதரானார் ஏ.ஆர்.ரஹ்மான்

“ஒன் ஹார்ட் மியூசிஷியன்ஸ் பவுண்டேஷன்” தூதரானார் ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமை வெளிகொண்டுவருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைப்படமாக. ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி "தி இஸ் இட்" என்ற பெயரில் இசைத்திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமேரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. YM மூவிஸுடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள "ஒன் ஹார்ட்" இசைத்திரைப்படம் பிப்ரவரி 5ம் நாள் கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. "ஒன் ஹார்ட்" இசை படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தியதாகவும், மிகவும் ரசித்து பார்த்ததாகவும் கூறினர். "ஒன் ஹார்ட்"…
Read More