முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளத்தை கேட்கிறாரா லோகேஷ் கனகராஜ்

முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளத்தை கேட்கிறாரா லோகேஷ் கனகராஜ்

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குனராக மாறியுள்ளவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் 2017 -ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து மாஸ் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் அடுத்த நிலைக்கு சென்றிருக்கிறார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் அன்பு-அறிவு இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க போவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டது. மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தும் லீட் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு இப்படத்திற்காக ரூபாய் 10 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
ஜீனியர் NTR படத்துக்கு அனிருத் இசை

ஜீனியர் NTR படத்துக்கு அனிருத் இசை

ஆச்சார்யா படத்தை இயக்கிய டோலிவுட்டின் பிரபல இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் தான் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளார் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படம் பான் இந்திய படமாக வெளியாக போகிறது. இந்த படத்திற்கு கோலிவுட்டின் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார். அவரது பின்னணி இசையில் உருவாகி உள்ள மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தீபிகா படுகோனே, ஆலியாபட் என முன்னனி நடிகைகளை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஆர் ஆர் ஆர் படத்திற்கு பிறகு ஜீனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ரத்னவேலு ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார், ஸ்ரீகர் பிரசாத் படதொகுப்பு, சாபு சிரில் என பலமான தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தில் இணைந்துள்ளனர்.
Read More
திரைக்கதையில் என்னுடைய பங்களிப்பும் உள்ளது –  கமல்ஹாசன்

திரைக்கதையில் என்னுடைய பங்களிப்பும் உள்ளது – கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஊடகம் ஒன்றிற்கு இன்று அளித்த பேட்டி ஒன்றில், “லோகேஷ் கனகராஜ் முதலில் படத்தின் ஒரு வரி கதை சொன்னபோதே பிடித்துவிட்டது. அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் கதையை டெவலப் செய்தார். திரைக்கதையில் என்னுடைய பங்களிப்பும் உள்ளது. சூர்யாவின் கதாபாத்திரத்திற்காக கடைசி நேரத்தில் தான் அவருக்கு அழைப்பு விடுத்தோம் ஆனால், அவர் உடனே ஒத்துக்கொண்டு இந்தப் படத்தில் நடிச்சுக் கொடுத்தார். அவருடைய கதாபாத்திரம் தான் 'விக்ரம்' படத்தின் மூன்றாம் பாகத்திற்கான ஒரு தொடக்கமாக அமையும்” என்று கூறினார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என திறமையான நடிகர்கள் இருக்கும்போது உங்களுக்கு போட்டி இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், "நிச்சயமாக திறமையானவர்கள் யார் என்னுடன் நடித்தாலும் அவர்களை என்னுடைய போட்டியாக தான் பார்ப்பேன்” அப்படீன்னு கூறினார். பழைய 'விக்ரம்' படத்திற்கும் இந்தப் படத்திற்கும்…
Read More
கலிஜு, கொய்யால’ – வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லையா ‘வேலைக்காரன்’ ?

கலிஜு, கொய்யால’ – வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லையா ‘வேலைக்காரன்’ ?

இன்றைய இளைஞர்களிடம் ஒரு விஷயம் சீக்கிரம் சென்றடைய வேண்டும் என்றால் அதை சினிமாவில் பாடலாக வெளியிட்டால் போதும். அவர்கள் அதை உடனே ‘கப்’ என்று பிடித்துக் கொள்வார்கள். இளைஞர்கள் மட்டுமல்ல சிறுவர்கள், சிறுமியர்கள் கூட பாடலின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் அதில் இருக்கும் வார்த்தைகளுக்கும் அர்த்தம் புரியாமல் அவர்களாகவே பாட ஆரம்பித்துவிடுவார்கள். சில வருடங்களுக்கு முன்பு அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடி வெளிவந்த ‘பீப்’ பாடல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. ஆனால், அனிருத் அந்தப் பாடலுக்கு தான் இசையமைக்க வில்லை என்று சொல்லிவிட்டார். அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது. இப்போது, சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்ற பாடல் நேற்று ஆடியோ வடிவில் வெளியிடப்பட்டது. அந்தப்  பாடல் கருப்பானவர்களுக்கு ஆதரவான பாடல் என்பது தெரிகிறது. இருந்தாலும் அந்தப் பாடலில் ‘கலீஜு, கொய்யால’ என்ற வார்த்தைகள் இடம் பெற்று பாடலின் தரத்தை,…
Read More