29
Nov
JK. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, அஜய் கோஷ், சூப்பர் சுப்புராயன், சுனில், ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சென்ராயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரிவால்வர் ரீட்டா' பாண்டிச்சேரியில் வசித்து வரும் ரீட்டா (கீர்த்தி சுரேஷ்) வீட்டில் அந்த ஏரியா ரவுடியான டிராகுலா பாண்டியன் (சூப்பர் சுப்புராயன்) வந்து எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறார். டிராகுலா பாண்டியனின் மகன் தனது அப்பாவை தேடி அலைவதும், அவரது உயிரிழப்புக்கு காரணமானவர்களை சும்மா விடமாட்டேன் என எதிரி கேங்ஸ்டர்களை எல்லாம் தேடிப் பிடித்து கொல்ல, தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற, ரிவால்வரை எடுத்து ரீட்டா என்ன செய்கிறார் என்பதை, டார்க் காமெடி ஜானரில் செம ஜாலியாக கொடுத்திருக்கும் படம் தான் இந்த ரிவால்வர் ரீட்டா. படத்தின் நல்ல அம்சங்கள் படத்தின் மொத்தக்கதையையும் கீர்த்தி சுரேஷ் தாங்கியிருக்கிறார். ராதிகா அட்டகாசம் கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார்.…
