கிச்சா சுதீப் நடிப்பில், உருவாகும்   “விக்ராந்த் ரோணா” படத்தில், ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்!

கிச்சா சுதீப் நடிப்பில், உருவாகும் “விக்ராந்த் ரோணா” படத்தில், ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்!

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்டமாக உருவாகும் “விக்ராந்த் ரோணா” திரைப் படத்தில், பாலிவுட் நாயகி ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் ஒப்பந்தமாகியுள்ளார் ! நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும், “விக்ராந்த் ரோணா” திரைப்படம் பற்றிய ஒவ்வொரு செய்தியும், மிகப்பெரும் ஆச்சர்யங்களையும், பெரும் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது ரசிகர்களின் கனவு நாயகி, பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் “விக்ராந்த் ரோணா” படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மிக சமீபத்தில், நடிகர் பாட்ஷா கிச்சா சுதீப் அவர்கள் திரைத்துறையில் நுழைந்து 25 ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் “விக்ராந்த் ரோணா” படத்தின் டைட்டில் லோகோ மற்றும் 180 நொடிகள் கொண்ட ஸ்நீக் பீக் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் காலிஃபாவில் பிரமாண்டமாக வெளியிடபட்டது. இந்நிகழ்வு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பாலிவுட் முன்னணி நாயகி இப்படத்தில் பங்கு…
Read More
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைப்பற்றிய கேஜிஎஃப் 2 தமிழ்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைப்பற்றிய கேஜிஎஃப் 2 தமிழ்!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி கன்னடத் திரையுலகில் 2018ல் வெளியான படம் ‘கேஜிஎஃப்: சேப்டர்1’. இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் வசூல் வேட்டை தென்னிந்திய சினிமா வட்டாரங்களை ஆச்சரியப்பட வைத்தது. இப்படத்தின் மேக்கிங், பவர்ஃபுல் வசனங்கள், ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை தியேட்டர்களை அதிரச் செய்தன. இதனால் ‘கேஜிஎஃப்’&ன் அடுத்த பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.   இந்த ‘கேஜிஎஃப்: சேப்டர்2’ல் ஹீரோ யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன்  போன்ற பாலிவுட் பிரபலங்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் நடித்திருக்கிறார். யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியான ‘கேஜிஎஃப்: சேப்டர்2’ படத்தின் டீஸர் 200 மில்லியன் களுக்கு மேல் பார்வையிடல்களைப் பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவில் இதுவொரு சாதனையாக பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவை எடுத்துக்கொண்டால் பாலிவுட் படங்களுக்குதான் இந்தியா முழுமைக்கும் ரசிகர்கள் இருந்தனர். ஆனால், இதனை…
Read More
அல்லுசிரிஷின் புதிய ஃபிட்நஸ் சீரிஸ் -ட்ரெயினிங் டே!

அல்லுசிரிஷின் புதிய ஃபிட்நஸ் சீரிஸ் -ட்ரெயினிங் டே!

அல்லுசிரிஷ் என்றாலே சிக்ஸ் பேக் உடல் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் தனது உடலை வலுப்படுத்தி இருக்கிறார். அண்மையில் அவர் வெளியிட்ட அவரது உடற்பயிற்சி புகைப்படம் அனைவரையும் ஈர்த்தது. இந்நிலையில், தனது கட்டுக் கோப்பான உடல் பாங்குக்கு காரணமாக இருக்கும் உடற்பயிற்சிகள் அடங்கிய வீடியோக்களை தனது ஃபேஸ்புக் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் அல்லு சிரிஷ். இதற்காக 'ட்ரெயினிங் டே' எனத் தலைப்பில் அன்றாடம் தனது ஃபிட்நஸ் வீடியோக்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள 'ட்ரெயினிங் டே' சீரிஸின் முதல் வீடியோ அல்லு சிரிஷ் ஜிம்மில் எப்படி அன்றாட பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்பதை விளக்கியிருக்கிறது. அந்த வீடியோவில், அல்லு முதலில் வார்ம் அப் பயிற்சிகளைச் செய்கிறார். அதன் பின்னர் ஒரு கையில் டம்பிள்ஸ் தூக்குகிறார். அதை முடித்துக் கொண்டு ஸ்டெர்னம் புல் அப் எனப்படும் பயிற்சியை செய்கிறார். வைட் க்ரிப் லேட் புல்டவுன் பயிற்சி என…
Read More
அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ இரண்டு பாகங்களாக வெளியாகிறது

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ இரண்டு பாகங்களாக வெளியாகிறது

அனைத்திந்திய படமான புஷ்பாவின் முதல் பார்வையான 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து) தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர், இரண்டு பாகங்களாக புஷ்பா வெளிவரும் என்று தற்போது அறிவித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும். முதல் பார்வையில் காட்டப்பட்டுள்ள படத்தின் உலகத்தால் கட்டுண்டுள்ளவர்களுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் என்பதில் ஐயமில்லை. இப்படத்திற்காக முதல் முறையாக ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் கைகோர்த்துள்ளனர். இயக்குநர் சுகுமார் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உடன் மீண்டும் இணைந்துள்ள அல்லு அர்ஜுன், இந்த அகில இந்திய திரைப்படத்தின் முதல் பார்வை மூலம் தனது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளார். படப்பிடிப்பு…
Read More
RAPO19 படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டி-லிங்குசாமி இயக்கம்!

RAPO19 படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டி-லிங்குசாமி இயக்கம்!

தெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிகளால் அசத்தி வரும், துறுதுறுப்பான இளம் நடிகரான, ராம் பொதினேனி, தமிழ் சினிமாவின் மாஸ் கமர்ஷியல் கிங், சண்டக்கோழி (Pandemakodi), பையா ( Awara ), வேட்டை ( Thadaka ) படப்புகழ் இயக்குநர் லிங்குசாமியுடன் புதிய படத்தில் இணைந்திருக்கிறார். ஒரு சில வாரங்களுக்கு முன் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இன்று படக்குழு படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரபல இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் நடிகர் ராம் பொதினேனி ஜோடியாக நடிக்கிறார். #RAPO19 திரைப்படம் முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ் ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. கமர்ஷியல் படங்களின் கிங் இயக்குநர் லிங்குசாமி தன் தனித்த முத்திரையில், ஸ்டைலீஷ் மாஸ் மசாலா படமாக இப்படத்தை உருவாக்குகிறார். மிகப்பெரும் பட்ஜெட்டில் பெரும் ஆளுமைமிக்க தொழில்நுட்ப கலைஞர்களுடன் மாஸ் ஆக்சன் படமாக #RAPO19 படம் உருவாகிறது. தயாரிப்பாளர் சித்தூரி ஶ்ரீனிவாசா Srinivasaa Silver Screen நிறுவனத்தின்…
Read More
பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை முடித்த நடிகர் நாகர்ஜுனா !

பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை முடித்த நடிகர் நாகர்ஜுனா !

நடிகர் நாகர்ஜீனா,  இந்தியாவில்  இது வரை இல்லாத வகையில் மிகப்பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில்  தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் வெகு விரைவில் முடிவடையவுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நாகர்ஜுனா, ரன்பீர் கபூர், அலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி ஆகியோருடன், எடுத்து கொண்ட செல்ஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரமாண்டமான “பிரம்மாஸ்த்ரா” படத்தின் படப்பிடிப்பு, பொது முடக்க காலத்திற்கு பிறகு கடந்த வருட இறுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து வகையான முன்னெச்செரிக்கை மற்றும் பாதுகாப்பு  நடவடிக்கைகள், மிக தீவிரமாக கடைபிடிக்கப் பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடையவுள்ள நிலையில் இப்படம் தமிழ், இந்தி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. படத்தின் உலகளாவிய வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜினா, மற்றும் மௌனி ராய் போன்ற…
Read More
இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்!

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்!

ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகிய வற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது…
Read More
பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படமான Liger செப்டம்பர் 9 அன்று வெளியாகிறது!.

பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படமான Liger செப்டம்பர் 9 அன்று வெளியாகிறது!.

ப்ளாக்பஸ்டர் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில்,இளம் நாயகன் விஜய் தேவர கொண்டாவுடைய முதல் பன்மொழி திரைப்படமாக உருவாகும் LIGER ( saala Crossbreed ) மிகப் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமாக உருவாகிவருகிறது. Puri connects நிறுவனம் இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து தயாரிக்கிறது. liger படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் இன்று துவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வியாழன்று படக்குழுவினர் படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை அறிவித்தனர் என்பது குறிப்பிடதக்கது. ஆம்.. பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படமான Liger செப்டம்பர் 9 அன்று வெளியாகிறது. இதையொட்டிய அறிவிப்பு போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கையில் ஒரு தடியுடன், மிக வித்தியாசமான தோற்றத்தில் அழுத்தாமான பார்வையுடன் காட்சி தருகிறார். பாக்ஸிங் ரிங்கில் ஒருவருடன் சண்டையிடுகிறார் விஜய் தேவரகொண்டா பின்னணியில் பார்வையாளர்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்று வதோடு, இப்படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ்…
Read More
தெலுங்கு ரசிகர்களை குதூகலப்படுத்திய “க்ராக்”- தமிழில் பிப்ரவரி 5ல் ரிலீஸ்!

தெலுங்கு ரசிகர்களை குதூகலப்படுத்திய “க்ராக்”- தமிழில் பிப்ரவரி 5ல் ரிலீஸ்!

சங்கராந்தி சிறப்பு திரைபடமாக வெளியாகி பம்பர் ஹிட்டடித்த “க்ராக்” தெலுங்கு திரைப்படம் பிப்ரவரி 5முதல் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் வெளி வரவுள்ளது. தெலுங்கு திரையுலகில் மாஸ் மகராஜா என கொண்டாடப்படும் நடிகர் ரவிதேஜா நடிப்பில், தயாரிப்பாளர் B. மது தனது சரஸ்வதி ஃபிலிம்ஸ் டிவிஷன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள தெலுங்கு படம் “க்ராக்”. நீண்ட பொதுமுடக்க காலத்திற்கு பிறகு சங்கராந்தி சிறப்பு திரைப்படமாக 2021 ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழில் ‘மாஸ்டர்’ படம் போல் திரையரங்குகளுக்கு அலைஅலையாக பெரும் கூட்டத்தை கூட்டி வந்தது இப்படம். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மாஸ்,கிளாஸ் கமர்ஷியல் படமாக வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களின் கோலாகல வரவேற்பில், பம்பர் ஹிட்டடித்தது. பல முன்னணி நடிகர்களின் இது வரையிலான பல்வேறு வசூல் சாதனையை முறியடித்து, சாதனை படைத்திருக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்களை திருவிழாக்கோலம் காண வைத்தது இப்படம். படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரவேற்பால்…
Read More
தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் ஆர் ஆர் ஆர் (RRR)  ரிலீஸ்!

தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் ஆர் ஆர் ஆர் (RRR) ரிலீஸ்!

இந்தியாவெங்கும் ஆவலாக எதிர்பார்க்கப்படும், நட்சத்திரங்கள் நிறைந்த திரைப் படமான RRR, தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் வெளியாகிறது. என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள் அணிவகுக்கும் RRR, சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை கற்பனை கலந்து காட்சிப்படுத்துகிறது. திரைப்படத்தின் வெளியீடு குறித்து பேசிய தயாரிப்பாளர் டி வி வி தனய்யா, “RRR-ன் படப்பிடிப்பு நிறைவை எட்டியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மூலம் விருந்து படைப்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம். தசரா பண்டிகை போன்ற இத்திரைப்படத்தை திரையரங்கில் ரசிகர்களோடு கொண்டாடுவதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார். டி வி வி தனய்யாவின் தயாரிப்பில், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான எஸ் எஸ் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR, தெலுங்கு, தமிழ்,…
Read More