‘ஜுங்கா’வைப் பற்றிய எதிர்பார்ப்பினை எகிற வைத்த டீசர்!!

‘ஜுங்கா’வைப் பற்றிய எதிர்பார்ப்பினை எகிற வைத்த டீசர்!!

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் டீஸர் இன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் கலையரங்கில் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி முற்றிலும் புதிய கெட்டப்பில் தோன்றுகிறார். இவருடன் சயீஷா சைகல், யோகி பாபு போன்றவர்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சித்தார்த் விப்பின் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கோகுல். இதைப் பற்றி இயக்குநர் கோகுலிடம் கேட்ட போது,‘ படத்தின் டைட்டிலுக்காக டீஸர் வெளியிடப்பட்டது இது தான் முதன்முறை. ‘ஜுங்கா ’ என்ற டைட்டில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வைக்க எடுக்கப்பட்ட புதிய முயற்சி இது. விஜய் சேதுபதியின் திரையுலக பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த டீஸரில் அவரின் உடல்மொழி மற்றும் தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவரும் என்று நினைக்கிறோம்.’ என்றார். இந்த டீஸர் வெளியான சில…
Read More
ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிக்கிறேன்-ன்னு சொன்னப்போ யாரும் நம்பலை!- ஜெயம் ரவி

ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிக்கிறேன்-ன்னு சொன்னப்போ யாரும் நம்பலை!- ஜெயம் ரவி

நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  இதற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.    இவ்விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, ஜெயப்ரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன், பாலாஜி வேணுகோபால், நடிகைகள் நிவேதா பெத்துராஜ், ரித்திகா சீனிவாஸ், இசையமைப்பாளர் டி இமான், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ். எஸ், படத்தொகுப்பாளர் ப்ரவீண் ராகவ், கலை இயக்குநர்…
Read More
பா. விஜய் இயக்கி நடிக்கும் – ‘ஆருத்ரா ’ ஒரு எமோஷனல் வித் க்ரைம் திரில்லர்!

பா. விஜய் இயக்கி நடிக்கும் – ‘ஆருத்ரா ’ ஒரு எமோஷனல் வித் க்ரைம் திரில்லர்!

வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடும் திரைப்படம் தான் ‘ஆருத்ரா’. இதில் நடிகர் பா. விஜய், கே பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மும்பையை சேர்ந்த மாடலிங் மங்கை தக்ஷிதா, கொல்கத்தாவைச் சேர்ந்த மேகாலீ, ஹைதராபாத்தைச் சேர்ந்த சோனி ஆகிய மூன்று பேர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் நடிகர் விக்னேஷ், ஒய் ஜி மகேந்திரன், மயில்சாமி, அபிசேக், கண்ணன், பேராசிரியர் ஞானசம்பந்தம், இயக்குநர் ஏஸ் ஏ சந்திரசேகர், மீரா கிருஷ்ணா, சஞ்சனா சிங், பேபி யுவா, ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு ‘இளைஞன்’ படப்புகழ் பி எல் சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய, ‘மெலோடி கிங் ’ வித்யாசாகர் இசையமைக்கிறார். ‘ஸ்ட்ராபெர்ரி’ படப்புகழ் ஷான் லோகேஷ் எடிட்டிங் மேற்கொள்ள, சண்டை பயிற்சியை கணேஷ் கவனிக்கிறார். படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ‘வித்தக கவிஞர் ’ பா விஜய். படத்தைப் பற்றி…
Read More
பப்ளிக் ஸ்டார் லவ்வர் ஆனார் ஜல்லிக்கட்டு ஜூலி!

பப்ளிக் ஸ்டார் லவ்வர் ஆனார் ஜல்லிக்கட்டு ஜூலி!

ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதனையடுத்து ஜூலி பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது ஜூலி ‘K7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு, “இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்த படம் என் வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்” என நம்புவதாக…
Read More
ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ‘ இரவுக்கு ஆயிரம் கண்கள்’

ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ‘ இரவுக்கு ஆயிரம் கண்கள்’

திரில்லர் ஜானர் என்பது சரியான முறையில் உருவாக்கப்படும் போது ரசிகர்களுக்கு ஒரு தலைசிறந்த அனுபவமாக அமையும். அந்த வகையில் ஒரு சிறந்த நடிகரான அருள்நிதி, அவருடைய கதை தேர்வும், கதாபாத்திர தேர்வும் ரசிகர்களாலும், திரைத்துறையிலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவருடைய அடுத்த ரிலீஸான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படமும் முழுக்க முழுக்க திரில்லர் படம். பத்திரிக்கையாளர் பின்னணியிலிருந்து வந்திருக்கும் மாறன் இயக்கியிருக்கிறார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார். . இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனர் மாறன் படத்தை பற்றி பேசும்போது, “இந்த மொத்த படத்தின் கதையும் இரவில் நடக்குமாறு திரைக்கதை அமைந்திருக்கிறது.  கால் டாக்ஸி டிரைவரான அருள்நிதி ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ள, அதை தொடர்ந்து எதிர்பாராத களத்தில் திரைக்கதை பயணிக்கும். அதை தொடர்ந்து நடக்கும் விஷயங்கள், எங்கு போய் முடிகிறது என்பதே திரைக்கதையின் முடிச்சு. படத்தின் ஹைலைட்டே திரைக்கதை தான், சரியான இடங்களில் திருப்பங்கள் அமைந்திருக்கும். ரசிகர்களை…
Read More
காதல் காமெடி ஆக்‌ஷன் திகில் கலந்த படம் -’ பார்க்கத் தோணுதே’

காதல் காமெடி ஆக்‌ஷன் திகில் கலந்த படம் -’ பார்க்கத் தோணுதே’

வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.k.மாதவன் தயாரிக்கும் படத்திற்கு பார்க்கத் தோணுதே என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ஹர்ஷா கதானாயகனாக நடிக்கிறார்.  கதாநாயகியாக சாரா நடிக்கிறார். மற்றும் பாண்டு, அப்பு இவர்களுடன் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.  பாடல்கள்     –      ஓஞ்சியப்பன்  ஒளிப்பதிவு           –        G.ரமேஷ் இசை                    –        மனீஷ் எடிட்டிங்               –       லெனின் சந்திரசேகரன் தயாரிப்பு          –       V.k.மாதவன்                                                                                                                                        எழுதி இயக்குகிறார் ஜெய் செந்தில்குமார்                                                                                                                                         படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது… வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஹர்ஷாவும் அவனது நண்பர்களும் காமெடி செய்து கொண்டு ஜாலியாக அந்த கிராமத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறவர்கள். அப்படிப் பட்ட ஹர்ஷா அதே கிராமத்தில்  இருக்கும் பெண் சாரா மீது காதல் கொள்கிறான். இருவரும் காதலர்களாக வலம் வருகிறார்கள். கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் சாராவுக்கு பேய் பிடித்துக் கொள்கிறது. அவள் மீதிருந்த…
Read More
குழந்தைகளே பேயை மிரட்டும் படம் தான் ‘சங்கு சக்கரம்’.

குழந்தைகளே பேயை மிரட்டும் படம் தான் ‘சங்கு சக்கரம்’.

குழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அதிலும் பேய்ப்படங்கள் பார்ப்பது என்றாலே குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இதுநாள்வரை குழந்தைகளை மிரட்டிய பேய்ப் படங்கள் தான் வந்திருக்கின்றன. இந்த முறை குழந்தைகளே பேயை மிரட்டும் புதுமையான விதமாக வரும் டிச-29ஆம் தேதி வெளியாக உள்ள படம் தான் மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சங்கு சக்கரம்’. இந்த சங்கு சக்கரம்’ படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தைப்போலவே இந்தப்படம் இருப்பதையும் உணர முடிகிறது. “நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” போன்ற நகைச்சுவையும் கிண்டல் கேலியும் நிறைந்த படங்களை;j தயாரித்த லியோ விஷன் வி.எஸ்.ராஜ்குமார் மற்றும் சினிமா வாலா பிச்சர்ஸ் கே.சதீஷ் ஆகியோர் இணைந்து இந்த சங்கு சக்கரம் படத்தை தயாரித்துள்ளார்கள். திலீப் சுப்பராயன், கீதா, ஜெர்மி ரோஸ்…
Read More
என் மகன் நடித்த படம் ‘ மதுரவீரன்’ – விஜயகாந்த் ஹேப்பி!

என் மகன் நடித்த படம் ‘ மதுரவீரன்’ – விஜயகாந்த் ஹேப்பி!

மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கேப்டன் விஜயகாந்த் , திருமதி. பிரேமலதா விஜயகாந்த் , L.K. சுதீஷ் , இயக்குநர் வெங்கட்பிரபு , படத்தின் தயாரிப்பாளர் சுப்புநாராயணன் , இயக்குநர் / ஒளிப்பதிவாளர் P.G. முத்தையா , கவிஞர் யுகபாரதி , இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி , படத்தொகுப்பாளர் பிரவீன் K.L , நடிகர் சமுத்திரகனி , எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தி , Stunner ஷாம் , நடன இயக்குநர் சுரேஷ் , நடிகர் மைம் கோபி , தயாரிப்பாளர் / நடிகர் தேனப்பன் , நடிகர் மாரிமுத்து , நடிகர் தம்பிராமையா , நாயகி மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். கேப்டன் விஜயகாந்த் பேசியது :-  வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய மகன் சண்முகபாண்டியன் நடித்த படம் என்பதால் அவரை பற்றி நான் நிறைய பேச விரும்பவில்லை. என்…
Read More
சாய் பல்லவி காட்டில் மழை!

சாய் பல்லவி காட்டில் மழை!

விக்னேஷ் சிவன்-சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் `தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளிவரவுள்ள நிலையில், அதற்கான இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்தப் படத்தையடுத்து செல்வராகவனின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 36ஆவது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் நாயகிக்கான பேச்சு வார்த்தை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் சாய் பல்லவி கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இது குறித்த அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவிருக்கிறது. அடுத்த வருடம் தீபாவளியன்று படத்தை வெளியிடத் திட்டமிட்டுவருகின்றனர். பிரேமம் படத்தின் மூலம் தமிழ், மலையாள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சாய் பல்லவி, தெலுங்கு சினிமாவுலகிலும் கவனம் செலுத்தி அங்கும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தமிழில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் `கரு’ படம் வெளிவருவதற்கு முன்பே தனுஷின் `மாரி 2’ மற்றும் சூர்யாவின் 36 ஆவது படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.…
Read More
வட்டிக்கு கடன் வாங்கி துன்பத்தில் தவிக்கும் மீனவர்களின் கதைதான் ‘உள் குத்து;

வட்டிக்கு கடன் வாங்கி துன்பத்தில் தவிக்கும் மீனவர்களின் கதைதான் ‘உள் குத்து;

‘P.K.Film Factory’ சார்பில் தயாரிப்பாளர்கள் G.விட்டல் குமார், G.சுபாஷினி தேவி இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘உள் குத்து’.தினேஷ் மற்றும் நந்திதா இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கியிருக்கிறார். ‘திருடன் போலீஸ்’ படம் மூலம் ஹிட் கொடுத்த இயக்குநர் கார்த்திக் ராஜு, நடிகர் தினேஷோடு இணைவதும், ‘அட்டகத்தி’ படத்திற்கு பிறகு நடிகர்கள் தினேஷும் நந்திதாவும் இணைவதும் இது இரண்டாவது முறையாகும். இந்த ‘உள் குத்து’ படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் கார்த்திக் ராஜூ, “என்னுடைய அடிப்படையே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்வதுதான். சென்னையில் கிராபிக்ஸ் படித்துவிட்டு வேலைக்கு சேர்ந்தேன். படையப்பா, முதல்வன், அந்நியன், பாய்ஸ், சச்சின், எந்திரன், தசாவதாரம் , சந்திரமுகி, கில்லி, போக்கிரி போன்ற படங்களில் வேலைப்பார்த்தேன். என் வேலை படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இரட்டை வேடங்கள் பற்றி நடிகர்களுக்கு சொல்லிகொடுப்பது. இதன் மூலம் தான்…
Read More