‘நம்பிக்கை குளாபல் லான்ச்’ நிகழ்வு!

‘நம்பிக்கை குளாபல் லான்ச்’ நிகழ்வு!

மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “கட்சி சார்புடைய அல்லது தலைவர்கள் கையில் இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையாக என் போன்றவர்கள் இந்த ‘நம்பிக்கை’யை தான் பார்க்கிறோம். நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல! சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ’நம்பிக்கை’ கிளை பரப்புகிறது என்றார்கள். அது ஆழமான வேர் பரப்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தேர்தல் வருகிற காலக்கட்டத்தில் நேர்மையும் உண்மையுமாக செய்திகளை ‘நம்பிக்கை’ கொண்டு போய் சேர்க்கும் என்பது என் நம்பிக்கை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின்…
Read More
தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள் !

தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள் !

  திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்று தயாரிப்பாளர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்தனர். முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’, 2026 பிப்ரவரி…
Read More
தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு துவங்கியது!

தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு துவங்கியது!

தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக கொண்டாடப்படும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘பாக்கெட் நாவல்’. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்களும் சினிமா வட்டாரமும் இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் கன்னட முன்னணி நட்சத்திரம் ராஜ் B ஷெட்டி, நடிகர் கிஷோர், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவரது இசை இந்த படத்திற்கு ஒரு முக்கியமான பலமாக அமையும் எனக் கூறப்படுகிறது. பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். தற்போது படத்தின் இசைப்பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக தகவல்கள்…
Read More
“லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” LSS பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

“லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” LSS பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”. வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்... இசையமைப்பாளர் அஷ்வமித்ரா பேசியதாவது.., எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாடலாசிரியர் சினேகன் அவர்கள் மிக அழகான பாடல் வரிகள் தந்தார். அருண் பாரதி அவர்களும் அற்புதமான பாடல் வரிகள் தந்தார். மிக நல்ல படம், அனைவரும் திரையரங்கில் வந்து படம் பாருங்கள். அனைவருக்கும் நன்றி. ப்ரமோ பாடல் இசையமைப்பாளர் அகத் மகேந்திரன் பேசியதாவது.., இந்த பாடலை தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த…
Read More
‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது !!

‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது !!

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியுள்ள முதல் படத்திற்கு 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' படத்தின் முதல் பார்வையை காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல இயக்குநரும் கோயம்புத்தூர் மண்ணின் மைந்தருமான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராட்டிய அவர், படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ‍பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை 'நாய் சேகர்' திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார். 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். திரைப்படத்தின் இசை…
Read More
Moonwalk பாடலுக்கு நடனமாடிய ஆப்பிரிக்கன குழந்தைகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு !!

Moonwalk பாடலுக்கு நடனமாடிய ஆப்பிரிக்கன குழந்தைகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு !!

மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாக கலந்து கொண்டு, பாடலின் உணர்வை காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். Yethu பாடல் வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும், சர்வதேச விமர்சகர்கள் Yethu பாடலை பார்த்து ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் “Yethu” பாடலை கொண்டு செய்யப்பட்ட ரீல்கள் 100 மில்லியன் பார்வைகளை கடந்து படுவைரலாகி வருகிறது. ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், இன்றளவும் சற்றும் குறையாமல் தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. நடனக் கலைஞர்களைத் தாண்டி, இசைக்கலைஞர்கள் மற்றும் வாத்தியக்கலைஞர்களும் “Yethu”…
Read More
ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய “மை லார்ட்” படக்குழு!

ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய “மை லார்ட்” படக்குழு!

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில்,  பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மை லார்ட் படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது.., மை லார்ட் ரசிகர்களுக்கு  ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இருக்கும். ஒரு சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு  என்ன ஒரு திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குமோ, அதுபோல தான் இந்த மை லார்ட் திரைப்படம். சாப்பாட்டில் சுவை முக்கியம் தான், ஆனால்…
Read More
இரண்டு மொழிகளில் வெளியாகும் மகேந்திரனின் “நீலகண்டா” !

இரண்டு மொழிகளில் வெளியாகும் மகேந்திரனின் “நீலகண்டா” !

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, "மாஸ்டர் மகேந்திரன்" என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கொரோனா காலக்கட்டத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் இளம் வயது வில்லன் கதாபாத்திரம் (பவானி) மகேந்திரனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு பல திரைப்படங்கள், இணையத் தொடர்கள் என கதையும், நல்ல கதாபாத்திரமும் போதும் என்ற வகையில், திரை பயணத்தை மாற்றியுள்ளார். இதுதவிர, சமீப காலங்களில் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய அளவில் மற்ற மொழி திரைப்படங்களிலும் மகேந்திரன் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் "நீலகண்டா" திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது. நீலகண்டா திரைப்படத்தை M ஸ்ரீனிவாசுலு மற்றும் D…
Read More
தமிழக அரசின் 2 விருதுகளைப் பெற்ற ‘தாய்நிலம்’ படம் கோடை வெளியீட்டிற்குத் தயாராகிறது

தமிழக அரசின் 2 விருதுகளைப் பெற்ற ‘தாய்நிலம்’ படம் கோடை வெளியீட்டிற்குத் தயாராகிறது

நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய்நிலம்’. இப்படத்தை அபிலாஷ் ஜி.தேவன் இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இசையமைப்பாளர் திரு அவுசப்பச்சன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் இவர் இசையமைக்கும் முதல் படம் இது. அப்பா, மகள் பாசப் பின்னணியில் இலங்கைப் போரின் கோர தாண்டவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் கவிஞர் தாமரை எழுதி, வர்ஷா ரஞ்சித் பாடியுள்ள ‘ஆகாயம் மேலே’ என்கிற பாடல் ஈழத் தமிழ் மக்களின் இழப்புகளையும் வலியையும் அனாதையாகத் தவிக்கும் மக்களின் வாழ்க்கையையும் பற்றி கூறும் விதத்தில் அமைந்திருக்கிறது. ‘தாய்நிலம் திரைப்படம்’ மாஸ்கோ, டோராண்டோ, ஸ்வீடன், பெங்களூரு இன்டர்நேஷனல், உட்பட 12 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டது. அதில் சிறந்த திரைப்படம், சிறந்த புதுமுக இயக்குநர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு உட்பட ஒன்பது விருதுகளை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழக…
Read More
ZEE5 தளத்தில் ‘பராசக்தி’ வரும் பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராகிறது !

ZEE5 தளத்தில் ‘பராசக்தி’ வரும் பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராகிறது !

இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொலிடிகல் ஆக்ஷன் டிராமாவான "பராசக்தி" திரைப்படத்தை 2026 பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராக வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், Dawn Pictures நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ்நாட்டின் சமூக-அரசியல் வரலாற்றிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அத்தியாயத்தை திரையில் உயிர்ப்பிக்கிறது. 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பராசக்தி, அடையாளம், சுயமரியாதை மற்றும் எதிர்ப்புப் போராட்டம் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்டு, அந்த காலகட்டத்தின் முக்கிய இயக்கத்தில் இழுத்துச் செல்லப்படும் இரண்டு சகோதரர்களின் உணர்ச்சிபூர்வமான கதையை சொல்லுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடும், கொள்கைநிலையுள்ள இளைஞரான செழியன் என்ற கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தின் பின்னணி குறித்து பகிர்ந்த இயக்குநர்…
Read More