சாய் அபயங்கர் உடன் நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி”  !!

சாய் அபயங்கர் உடன் நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி” !!

  நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது இசைத்திறமைக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதைய இளைஞர்கள் பெரிதும் கொண்டாடும் இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து அவர் பாடியுள்ள “பவழ மல்லி” பாடல் தற்போது இசை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “பவழ மல்லி” பாடல் பாரம்பரியத்தின் மணமும், நவீன இசையின் அதிரடியும் ஒன்றாக கலந்த தனித்துவமான இசை அனுபவமாக உருவாகியுள்ளது. இண்டி இசை உலகில் தனித்துவமான பாணிக்காக அறியப்படும் சாய் அபயங்கர் இந்த பாடலுக்கு இசைமைத்துள்ளார். இந்த பாடலின் மிகப்பெரிய சிறப்பாக அமைந்துள்ளது ஸ்ருதிஹாசனின் குரல். அவரது குரல் பாடலுக்கு ஒரு தனித்துவமான கவர்ச்சியையும் ஆழமான உணர்ச்சியையும் அளிக்கிறது. மணமகன்–மணமகள் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான ஊடலை மையமாகக் கொண்டு, கேள்வி–பதில் பாணியில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மணமகளின் பதில்கள் ஸ்ருதிஹாசனின் குரலில் இனிமையாக ஒலித்து பாடலுக்கு மேலும் உயிரூட்டுகின்றன. காதல் வளர வளர, இந்தப் பாடலின் இசையும் பல…
Read More
“கான் சிட்டி” (Con City)பட அதிரடி டைட்டில் டீசர் வெளியானது!!

“கான் சிட்டி” (Con City)பட அதிரடி டைட்டில் டீசர் வெளியானது!!

புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டைட்டில் டீசர் மூலம் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நகர வாழ்க்கையில் கடனில் போராடும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையோடு ஆரம்பிக்கும் டைட்டில் டீசர், அடுத்தடுத்து ஆச்சரியம் தரும் காட்சிகளால் அதிர வைக்கிறது. அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பண மிஷின், பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என கண்கள் விரிய ஒரு புதுமையான கதைக்களத்திற்குள் நம்மை இழுத்து செல்கிறது. உணர்வுப்பூர்வமாக ஆரம்பிக்கும் இந்த டைட்டில் டீசர் காமெடி டிராக்கில் மாறி, வெகு சுவாரஸ்யமாக நிறைவு பெறுகிறது. இந்த படத்தில் முன்னணி இளம் நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாளத்தின் பிரபல நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த…
Read More
டாக்ஸிக் திரைப்படம் வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம் !!

டாக்ஸிக் திரைப்படம் வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம் !!

கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations நிறுவனங்கள் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்-டிராமா திரைப்படமான 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டின் மறுதேதியை நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளனர். முதலில் 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தற்போது மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பிராந்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி 2026 ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்களின் முக்கிய விநியோக கூட்டாளிகளில் ஒருவரான Phars Films வழங்கிய ஆலோசனையின் பேரில், கல்‌ஃப் பகுதிகளில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அதன் விளைவாக அங்குள்ள திரையரங்குகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல மொழிகளில் உலகளாவிய அளவில் வெளியாகும் இந்த படத்திற்கு கல்‌ஃப் நாடுகள் முக்கிய…
Read More
‘மேட் இன் கொரியா’ டிரெய்லர் வெளியீடு !!

‘மேட் இன் கொரியா’ டிரெய்லர் வெளியீடு !!

நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நெட்ஃபிலிக்ஸின் ’மேட் இன் கொரியா’ குழுவினர் எம்சிசி கல்லூரி மாணவர்களுடன் கொரியன் வார்த்தை விளையாட்டை (Korean Word Game) கலகலப்பாக விளையாடினர்! இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில், ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘மேட் இன் கொரியா’ படக்குழுவினர் இன்று சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்களை சந்தித்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் கொரிய மொழி வார்த்தை விளையாட்டு மற்றும் ’திஸ் ஆர் தட்’ (This or That) போன்ற ஃபன் விளையாட்டுகள் விளையாடி மாணவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடினர். ரா. கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது.
Read More
லாக்கப் மரணங்களை  பேசும் ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படம். மார்ச்-13ல் வெளியாகிறது.

லாக்கப் மரணங்களை பேசும் ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படம். மார்ச்-13ல் வெளியாகிறது.

சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது.. அப்படி செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு மன்னிக்கும் மனதுக்கு எப்போது மாறுகிறானோ அன்று தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதை மையக்கருத்தாக கொண்டு இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ படம் உருவாகியுள்ளது... ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் (On The Table Productions) சார்பில் மலைச்சாமி ஏஎம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. சஸ்பென்ஸ் கிரைம்…
Read More
‘Vowels’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘Vowels’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

  ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. ராஜு ஷெரேகர் தயாரிப்பில், இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். மார்ச் 13 அன்று இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்களுகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் படத்தொகுப்பாளர் ஹரிஷ் கொம்மே பேசியதாவது, "இந்தப் படத்தில் பணிபுரிந்தது எனக்கு வித்தியாசமான அனுபவம். பார்வையாளர்களும் படம் பார்க்கும்போது அதை உணர்வார்கள்" என்றார். கலை இயக்குநர் மதி, "படத்தின் தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. ஐந்து இயக்குநர்கள் ஒன்றாக பணியாற்றிய படத்தில் நான் பணிபுரிந்திருப்பது இதுதான் முதல்முறை. என்னுடைய டீம்…
Read More
செ. ஹரி உத்ரா இயக்கும் ‘மாஸ்டர் பிளான்’ பட பூஜை இன்று கோலகலமாக நடைபெற்றது!!

செ. ஹரி உத்ரா இயக்கும் ‘மாஸ்டர் பிளான்’ பட பூஜை இன்று கோலகலமாக நடைபெற்றது!!

  உத்ரா புரொடக்ஷன்ஸ் & டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர் பிளான்’ படத்தின் பூஜை இன்று எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இப்படம் கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைப் போல அனைவரும் ரசிக்கும் வகையில் கலகலப்பான பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளது. இன்று நடைபெற்ற பூஜை விழாவில் தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், P.L. தேனப்பன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். புதிய முயற்சியாக உருவாகும் இந்த திரைப்படம், அரசியலைச் சேர்ந்த ஆட்களால் ஏற்படும் பிரச்சனையில் நாயகன் நாயகியின் குடும்பம் சிக்கிக் கொள்வதும், அந்த குடும்பம் வில்லன்களிடம் இருந்து, எவ்வாறு மீண்டு வருகின்றது என்பதையும் நகைச்சுவை மற்றும் டார்க் ஹூமர் கலந்த அணுகுமுறையில் சொல்லவுள்ளது. இந்தப் படத்தில் தருண் விஜய் மற்றும் சாயாதேவி நாயகன்–நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் திவ்யா ஜெகத், அப்புகுட்டி,…
Read More
ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட   ‘அன்பே டயானா’ (Anbe Diana) பட  லுக் !!

ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட   ‘அன்பே டயானா’ (Anbe Diana) பட லுக் !!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து தயாரித்துள்ள  'அன்பே டயானா' படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை,   முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார். யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடிக்க,  ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக் களங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ‘ஜமா’ படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பாரி இளவழகன், இப்படத்தில் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’…
Read More
ஏ படம் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தொல் திருமாவளவன் !

ஏ படம் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தொல் திருமாவளவன் !

மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் சதீஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் ஏ படம்.. இப்படம் விவசாய புரட்சியையும், கார்ப்பரேட்டின் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்ற மையக்கருத்தையும் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ள திரைப்படம்தான் இந்த ஏ படம் இப்படத்தில் ராஜகணபதி கதையின் நாயகனாக நடித்துள்ளார் கதாநாயகியாக மேகா ஸ்ரீ இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சந்திர போஸ், இயக்குனர் கேஷ்லெஸ் ஷிவாகோ, மஸ்காரா அஸ்மிதா, சுஷ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி மற்றும் ஏற்காடு பகுதியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது... இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் ராஜ கணபதி கூறுகையில் நாங்கள் திரைப்படத்தை அழகாக எடுத்தோம் ஆனால் தணிக்கைச் சான்றிதழ் வாங்கும்போது தான் மிகவும் சிரமத்திற்கான சுமார் 45க்கும் மேற்பட்ட காட்சியில் வெட்டுகொடுத்தார்கள்.. இதனால் நாங்கள் சுமார் 18 மாதங்கள் கோர்ட் வாசலில் அலைந்து மிக சிரமப்பட்டு தணிக்கை சான்றிதழ்…
Read More
‘அந்தோனி’ பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி!

‘அந்தோனி’ பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி!

  ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அந்தோனி'. இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத் , கலை இயக்கம் கலா மோகன். தயாரிப்பு : கலைவளரி சகா. ரமணதாஸ், சுகந்தினி. இணைத் தயாரிப்பாளர்கள் : விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி. மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர் சீனுராமசாமி, லெனின் பாரதி, 'உலக சினிமா' பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இணைத்தயாரிப்பாளர் விக்கி பேசும்போது, " இந்திய -இலங்கை கூட்டுத் தயாரிப்பில்1980 வரை பல படங்கள் வந்துள்ளன. போர் தொடங்குவதற்கு…
Read More