“ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது!!

“ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது!!

  BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில், “மான் கராத்தே” இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் “ரெட்ட தல”, வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் அறிவிப்பு வெளியாகிய தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில், அருண் விஜய் மாறுபட்ட இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளார். அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய…
Read More
“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் கலக்கும்  திரைப்படம்

“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் கலக்கும் திரைப்படம்

  சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப் பெற்றுள்ளது. நமது பறை இசையின் அடையாளத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற…
Read More
மாஸ்க் திரைப்பட இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா !!

மாஸ்க் திரைப்பட இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா !!

    The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் மாஸ்க்.     2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.     இவ்விழாவினில்..,   நடிகை ருஹானி சர்மா பேசியதாவது..,   எல்லோருக்கும் வணக்கம், இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் டே, இந்த நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். வெற்றிமாறன் சார் முன்னால் பேசக் காத்திருந்தேன். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. இன்னும் சில நாட்களில் படம் வரப்போகிறது. மகிழ்ச்சியாக…
Read More
எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு படத்திலிருந்து பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !

எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு படத்திலிருந்து பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !

பாகுபலி மற்றும் RRR என இரண்டு உலகளாவிய பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு, மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரியதாக உருவாகி வரும் புதிய படம் — “Globe Trotter”. நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது! ரசிகர்களின் மனதை மயக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, மகேஷ் பாபு நடிப்பில், உருவாகும் மாபெரும் படைப்பிலிருந்து பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள கும்பா (KUMBHA) கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே – தீவிரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும், சினிமா அழகியலோடும் அமைந்துள்ளது. இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் முதல் அம்சமாக, வில்லனாக நடிக்கும் பிரித்விராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் “Globe Trotter” எனும் உலகில் “கும்பா”வாக மாறியுள்ளார். இந்தப் படத்தில் அவர் இதுவரை நாம் பார்த்ததற்கு மாறாக, கொடூரமான,…
Read More
லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் திரைப்படம் ‘பிரமயுகம்’!

லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் திரைப்படம் ‘பிரமயுகம்’!

நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் உருவான 'பிரமயுகம்' (மலையாளம்- 2024) திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியூம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸில் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் திரையிடல் பிப்ரவரி 12, 2026 அன்று அகாடமி அருங்காட்சியகத்தில் ஜனவரி 10 - பிப்ரவரி 12 வரையிலும் நடைபெறும் நிகழ்வில் திரையிடப்படும். ராகுல் சதாசிவன் எழுதி இயக்கிய 'பிரமயுகம்' திரைப்படம் கேரள நாட்டுப்புறக் கதைகளின் இருண்ட காலங்களின் பயம், சக்தி மற்றும் மனித பலவீனம் பற்றிய கதையாகும். கருப்பு & வெள்ளையில் (Black & White) வெளியான இந்தத் திரைப்படம் அதன் ஆளுமைத்திறன், கதைசொல்லல் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்பட்டது. ‘பிரமயுகம்’ திரைப்படத்தில் கொடுமோன் போட்டி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் நடிகர் மம்முட்டி. அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஷெஹ்னாத் ஜலால் (ISC) ஒளிப்பதிவு,…
Read More
‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

ஸ்பிரிட் மீட்யா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கலை இயக்குநர் ராமலிங்கம், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செல்வமணிக்கு நன்றி. தமிழில் தொடர்ச்சியாக நான் பீரியட் படங்கள்தான் செய்து கொண்டிருக்கிறேன். இயக்குநருடைய ஒரு டாக்குமெண்ட்ரி பார்த்து ஆச்சரியமடைந்து அவருடன் வேலை செய்ய ஆர்வமாக இருந்தேன். சினிமாவுக்குள் சினிமாவை பீரியட் கதையாக காட்டியிருப்பதுதான் ‘காந்தா. சவாலாக இல்லாமல் மிகுந்த ஈடுபாடோடு இந்தப் படத்தில் வேலை செய்தேன். சினிமாவை காதலிக்கும் இயக்குநர் செல்வமணியிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்…
Read More
ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட்ர்  வெளியானது !

ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட்ர்  வெளியானது !

கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்! 'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' மற்றும் 'என் ஆளோட செருப்ப காணோம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் கே பி ஜெகன் கூறியதாவது : ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தில் மூன்று கதைகள் ஓர் நேர்கோட்டில் பயணிப்பது தான் திரைக்கதையின் சுவாரஸ்யம். ஒவ்வொரு கதை…
Read More
கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

  டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும், இயக்குநர் பிரபு சாலமனின் – கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் பொத்தி பொத்தி உன்ன வச்சு பாடல் வெளியீடு. டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “கும்கி 2” படத்திலிருந்து, “பொத்தி பொத்தி உன்ன வச்சு” எனும் முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் “கும்கி”. 13 வருடங்களைக் கடந்தும், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அப்படத்தின் மையத்தை வைத்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 படத்தை உருவாக்கி வருகிறார். ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றியும், அன்பை பற்றியும் இப்படம் பேசுகிறது. இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மென்மையான மெலடி இசை…
Read More
பேய்க் காதலைச் சொல்லும் ‘மெஸன்ஜர்’ எப்படி இருக்கிறது ?

பேய்க் காதலைச் சொல்லும் ‘மெஸன்ஜர்’ எப்படி இருக்கிறது ?

  நடிகர்கள் : ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா, பாத்திமா, வைசாலி ரவிச்சந்திரன், ஜீவா ரவி, லிவிங்ஸ்டன் இசை : அபுபக்கர்.எம் ஒளிப்பதிவு : பால கணேசன்.ஆர் இயக்கம் : ரமேஷ் இளங்கமணி தயாரிப்பு : பிவிகே பிலிம் பேக்டரி – பி.விஜயன்   ரமேஷ் இளங்காமணி இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடித்துள்ள ஹாரர் திரைப்படம் ‘மெஸன்ஜர்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம். காதல் தோல்வியால் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தொடர்ந்து மெசஜ் வந்துக் கொண்டிருக்கிறது. அதை திறந்து பார்க்கிறார். அதில், “தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருப்பார்கள்” என்ற செய்தி இருக்கிறது. அதை விட அதிர்ச்சி என்னவென்றால், அந்த செய்தியை அனுப்பிய பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார், என்பது தான். இறந்தவர் எப்படி மெசஜ் அனுப்பு முடியும், அவர் உண்மையில்…
Read More
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 கொண்டாடும், ஆங்கில ஆந்தம் பாடலை பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரேமியா !!

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 கொண்டாடும், ஆங்கில ஆந்தம் பாடலை பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரேமியா !!

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025ற்கான அதிகாரப்பூர்வ கீதமான “ப்ரிங் இட் ஹோம் (Bring It Home)” பாடலின் ஆங்கில பதிப்பை புகழ்பெற்ற இந்திய பின்னணிப் பாடகி, நடிகை மற்றும் கலைஞர் ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளார். வலிமையான குரல், உணர்ச்சிபூர்வமான நடிப்பு மற்றும் பன்மொழி இசை திறமைக்காக பெயர் பெற்ற ஆண்ட்ரியா, இந்த உலகளாவிய கீதத்துக்கு தனது குரல் மூலம், தனித்துவமான ஆன்மீகத் தொனி, உற்சாகம் மற்றும் நவீன மெருகை வழங்கியுள்ளார். பெரும் ஆற்றல், அசத்தும் ராகம் மற்றும் உணர்ச்சி கலந்த இந்த “ப்ரிங் இட் ஹோம்” பாடல், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஒருமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தைரியம், ஆர்வம் மற்றும் விடாமுயற்சியை கொண்டாடுகிறது. பாடலை நகுல் அபயங்கர் (Nakul Abhyankar) இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் நஸீப் முகம்மது எழுதியுள்ளனர். ஆங்கில வரிகளுடன் இணைந்த “தரிகிட்ட தரிகிட்ட…
Read More