நடிகர் கௌஷிக் ராம் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

நடிகர் கௌஷிக் ராம் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

  ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, 'பிக்பாஸ்' பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், 'சில்மிஷம்' சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து காதல் கதையாக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ லட்சுமி…
Read More
மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு!

மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு!

கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில்,அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர். படம் வெளியாகும் முன்னதாக,நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான்: “ஒரு புரொடக்ஷன் நிறுவனத்துடன் வேலை செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவம். கிராண்ட் பிக்சர்ஸ் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டனர். அபின் கதை சொன்னபோதே வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் செம்ம ஸ்மார்ட்டாகவும் அட்டகாசமாகவும் நடித்துள்ளார். கௌரி கிஷன், அஞ்சு குரியன் இருவரும் கதையின் முக்கியமான பாகங்கள். படம் நன்றாக வந்துள்ளது —…
Read More
ZEE5-ல் ‘கிஸ்’ — வரும் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங்!

ZEE5-ல் ‘கிஸ்’ — வரும் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங்!

  நாட்டின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரொமாண்டிக் தமிழ்த் திரைப்படமான ‘கிஸ்’-யை நவம்பர் 7, 2025 முதல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் தனது அறிமுக இயக்கமாக உருவாக்கியுள்ள இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் VTV கணேஷ், ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘கிஸ்’ திரைப்படம் அர்ஜுன் (கவின்) எனும் திறமையான இசைக்கலைஞரின் கதையைச் சொல்கிறது. அவரிடம் ஒரு வினோதமான சக்தி உள்ளது — ஒரு ஜோடி முத்தமிடும் போதெல்லாம், அவர்கள் உறவின் எதிர்காலத்தை முன்கூட்டியே காண முடியும்! காதலும் விதியும் மீது நம்பிக்கையற்ற அர்ஜுனின் வாழ்க்கை, மீரா (ப்ரீத்தி அஸ்ரானி) என்பவளைச் சந்தித்த பிறகு பெரும் மாற்றத்தை எதிர்கொள்கிறது. அவள் அவனது நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தி, உண்மையான உணர்வுகளை உணரச்செய்கிறாள். காதல், நகைச்சுவை மற்றும்…
Read More
‘லோகா சாப்டர்1: சந்திரா’ திரைப்படம் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில்  ஸ்ட்ரீம் ஆகிறது!

‘லோகா சாப்டர்1: சந்திரா’ திரைப்படம் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது!

  மலையாள சினிமாவில் ரெக்கார்ட் பிரேக்கிங் வெற்றி பெற்ற 'லோகா சாப்டர்1: சந்திரா' திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது என்பதை ஜியோஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்ப்டம் மலையாள சினிமாவின் பிரம்மாண்ட கதை சொல்லல் முறையை மறுவரையறை செய்தது. மேலும், மலையாள சினிமா ஒன்று உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிக வசூல் செய்தது என்ற வரலாற்று சாதனையையும் இந்தத் திரைப்படம் படைத்துள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி மற்றும் உலகளவில் கவனம் ஈர்த்தது மட்டுமல்லாது 2025 ஆம் ஆண்டில் அதிகம் கொண்டாடப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. டொமினிக் அருண் இயக்கி எழுதிய இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சந்திராவாக மாறுபட்ட நடிப்பைக் கொடுத்துள்ளார். அவருடன் நஸ்லென், அஞ்சு குரியன், சந்து குமார் மற்றும் சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில்…
Read More
தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான்,  அபிஷன் ஜீவிந்த்திற்கு  கல்யாண பரிசாக,  கார் வழங்கியுள்ளார்!

தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான்,  அபிஷன் ஜீவிந்த்திற்கு  கல்யாண பரிசாக,  கார் வழங்கியுள்ளார்!

தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த  'டூரிஸ்ட் ஃபேமிலி'  பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP Entertainment  தயாரிப்பாளர்  மகேஷ் ராஜ் பசிலியான். இலங்கை வாழ் மக்களின் கதைக்களத்தில்,  எளிமையான திரைக்கதையில், மனித உணர்வுகளின் குவியலாக, அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக, இந்த ஆண்டில் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினர் என அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி என தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்  படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான்,  இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் கல்யாணத்திற்கு பரிசாக, ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கி  உற்சாகப்படுத்தியுள்ளார். இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த் தற்போது,  Zion Films…
Read More
‘சக்தி திருமகன் ‘ திரைப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது!

‘சக்தி திருமகன் ‘ திரைப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது!

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் வாகை சந்திரசேகர், சுனில் கிரிபலானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ்நாடு அரசியலை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் கதை கிட்டுவின் (விஜய் ஆண்டனி) எழுச்சியை காட்டுகிறது. தனிப்பட்ட இழப்பில் இருந்து மீண்ட ஒருவன் ஒரு குறிக்கோளை நோக்கி பயணப்படுகிறான். வாழ்க்கை அவனை அரசியல், நேர்மை மற்றும் அதிகாரத்தின் வழியில் பயணப்பட வைக்கிறது. நீதி, லட்சியம் மற்றும் ஊழலால் பிணைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் மாற்றத்தின் விலை பற்றிய கேள்விகளை இந்தப் படம் ஆராய்கிறது. தனது திறமையான நடிப்பால் 'சக்தி திருமகன்' கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. அருண் புருஷோத்தமன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் சிறப்பான ஒளிப்பதிவும் இசையும் பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கிறது. பல அடுக்குகள் கொண்ட இந்தக் கதை சிறப்பான அரசியல் ஆக்ஷன் டிராமா என…
Read More
விவசாயத்தை விட சினிமா எடுப்பது தான் கஷ்டமாக இருக்கிறது – அறிவழகன் முருகேசன் !! !!

விவசாயத்தை விட சினிமா எடுப்பது தான் கஷ்டமாக இருக்கிறது – அறிவழகன் முருகேசன் !! !!

  காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணாபாபு நடிப்பில், 1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் " தடை அதை உடை ". இத்திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., இசையமைப்பாளர் சாய் சுந்தர் பேசியதாவது.., இது என் முதல் படம், முதல் மேடை.என்னுடைய பாடல்கள் இசை உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தத் திரைப்படத்தில் பாடிய சின்னப்பொண்ணு அக்கா, காளிதாஸ், சர்வேஷ் அண்ணன் உட்பட அனைவருக்கும் நன்றி. இயக்குநர் அறிவழகன் தான் எல்லாப்பாடல்களையும் எழுதினார். மிக அழகாகவே எழுதியுள்ளார். என் நண்பன் சூர்ய தேவன் ஒரு பாடல் எழுதியுள்ளான். இந்த வாய்ப்பு தந்த…
Read More
இப்படி ஒரு அழகான படத்தைக் கொடுத்த கீர்த்திக்கு நன்றி  -பிரதீப் ரங்கநாதன் !!

இப்படி ஒரு அழகான படத்தைக் கொடுத்த கீர்த்திக்கு நன்றி -பிரதீப் ரங்கநாதன் !!

  மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டியூட்'. படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் ரவி, நவீன், "'டியூட்' படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கீர்த்தீஸ்வரன் ரொம்ப சென்சிபிளான விஷயத்தை சரியாக சொல்லியுள்ளார். பிரதீப், மமிதா மற்றும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது" என்றனர். எடிட்டர் பரத் விக்ரமன், "உலகம் முழுவதும் 'டியூட்' படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் கீர்த்திக்கு நன்றி. பிரதீப், மமிதா, சரத் சார், ரோகிணி மேம்…
Read More
ரசிகர்களையும், திரையுலகினரையும் வியக்க வைக்கும் சிலம்பரசன் TR ன்  ‘அரசன்’ !

ரசிகர்களையும், திரையுலகினரையும் வியக்க வைக்கும் சிலம்பரசன் TR ன் ‘அரசன்’ !

சிலம்பரசன் TR - இயக்குநர் வெற்றிமாறன் - பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு - ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் 'அரசன்' படத்தின் ஐந்து நிமிட ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்கிலும், 17 ஆம் தேதி இணையத்திலும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, புதிய சாதனையை படைக்க உள்ளனர். சிலம்பரசன் TR நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு, 'அரசன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக்கும் கடந்த வாரம் வெளியானது. இதில் சிலம்பரசனின் தோற்றம் மற்றும் டைட்டில் ரசிகர்களை வெகுவாக வசீகரித்ததுடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற செய்தது. அத்துடன் படத்தை பற்றிய புது தகவல்களுக்காக ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் படக் குழுவினர் ப்ரோமோ வீடியோ குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை பகிர்ந்துள்ளனர். 'அரசன்' படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் ஐந்து நிமிட அளவிலான காணொலியை அக்டோபர் 16ஆம் தேதி அன்று மாலை ஆறு மணியளவில்…
Read More
ஆண்டனி வர்கீஸ் அதிரடி மாஸ் லுக்கில் மிரட்டும் “காட்டாளன்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஆண்டனி வர்கீஸ் அதிரடி மாஸ் லுக்கில் மிரட்டும் “காட்டாளன்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

  க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷரீஃப் முஹம்மது தயாரிக்கும் மாபெரும் ஆக்‌ஷன் திரில்லர் படமான “காட்டாளன்” படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகைபிடிக்கும் சிகார் — இப்படியாக ஆண்டனியின் அதிரடி லுக், ஒரு கடும் ஆற்றல் கொண்ட மாஸ் அவதாரமாக காட்சி தருகிறது. ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்‌ஷன் களத்தை வெளிப்படுத்தி, இதுவரை கண்டிராத மிரட்டலான நிறைந்த தோற்றத்தை ரசிகர்களுக்கு வழங்கி விருந்தளிக்கிறது. பான்-இந்தியா ஹிட் ஆக்‌ஷன் திரில்லர் *“மார்கோ”*விற்கு பின், “காட்டாளன்” படம் க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஷரீஃப் முஹம்மது தயாரிக்கும் மற்றொரு மிகப்பெரும் முயற்சியாக அமைந்துள்ளது. புதிய இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் “காட்டாளன்”, மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட…
Read More