“காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

“காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

  ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் வழங்கும், நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படம் உலகமெங்கும் 2023 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் கிருபாகரன் பேசியதாவது… இந்த படத்தின் டிரெய்லரை முன்னதாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, எனக்கு மட்டுமில்லை எங்களின் சென்னை குழு அனைவருக்கும் பிடித்திருந்தது, அதுமட்டுமில்லை மும்பையில் எங்கள் தலைமை நிறுவனத்திற்கும் இதனை அனுப்பினோம் எங்களுக்கு ஏற்பட்ட அதே உற்சாகம் அவர்களுக்கும் இருந்தது அன்றே இந்த படத்தை ஜூன் மாதம் 2…
Read More
ஸ்பைடர் மேன்: அகிராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் ஒரு நாள் முன்னதாக வெளியாகிறது !!

ஸ்பைடர் மேன்: அகிராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் ஒரு நாள் முன்னதாக வெளியாகிறது !!

இந்தியாவில் உள்ள அனைத்து ஸ்பைடர் மேன் ரசிகர்களுக்கும் சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா ஒரு ஆச்சரியத்தை அறிவித்துள்ளது! ஸ்பைடர் மேன்: அகிராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் 1 ஜூன் 2023 அன்று, அமெரிக்காவில் வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படும்!* இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில் குரல் கொடுத்த பவித்ர் பிரபாகரின் இறுதி டிரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது. ஸ்பைடர் மேன்: ஸ்பைடர் வசனம் முழுவதும் படத்தின் டிரெய்லர் வெளிவந்ததில் இருந்து இந்திய ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில், படத்தின் இந்தி மற்றும் பஞ்சாபி பதிப்புகளுக்கு இந்திய ஸ்பைடர் மேன், பவித்ர் பிரபாகரின் குரலை பிரபல கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில் வழங்குவார் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர், மேலும் இந்த அறிவிப்பு பார்வையாளர்களின் உற்சாகத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது. ரசிகர்களின் ஆர்வத்தின் காரணமாக, படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜூன் 1, 2023 அன்று வெளியிட தயாரிப்பாளர்கள்…
Read More
விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய விஜய் ஆண்டனி, “டிஷ்யூம் படத்தில் நீங்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் என்னால் வந்திருக்க முடியாது. அதேபோல ‘பிச்சைக்காரன்’ படம் நீங்கள் எனக்கு போட்ட பிச்சை. இனி எத்தனை படங்களில் நடித்தாலும் ‘பிச்சைக்காரன்’ போல ஒரு படம் எனக்கு கிடைக்காது. அந்த கதையை நீங்கள் சொல்லும்போது எந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக சொன்னீர்கள் என்பது எனக்குத் தெரியும். படம் கொடுத்ததற்கு நன்றி. ‘பிச்சைக்காரன் 2’ படத்தை நீங்கள்தான் இயக்க வேண்டும் என காத்திருந்தேன். அதன்பிறகு வேறு வழியில்லாமல் படத்தை ஆரம்பித்தேன். ஆரம்பித்து 10 நாட்கள் படம் என் கைக்குள் வரவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படம் கைவசமானது. இந்தப் படத்தின் மூலமாகத்தான் டைரக்‌ஷனை கற்றுக்கொண்டேன். ‘பிச்சைக்காரன்’ படத்தின் காப்பியாகத்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். நிறைய…
Read More
பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியின் அறிமுக விழாவில் கலந்து கொண்டார்

பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியின் அறிமுக விழாவில் கலந்து கொண்டார்

பிரபல நடன இயக்குநர் ஷெரீஃப் மற்றும் வின்சென்ட் அடைக்கலராஜ் இணைந்து வழங்கும் ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியின் அறிமுக விழாவில் பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், நடிகர் ஜோ மல்லூரி, நடிகர் அஷ்வின் உள்ளிட்டோர் பங்கேற்பு 'சூது கவ்வும்' தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார். தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் துவக்கி வைத்து பாராட்டிய நிலையில் அதன் அறிமுக விழா மற்றும் செயல்முறை விளக்கம் சென்னையில் நடைபெற்றது. பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், நடிகர்…
Read More
வள்ளலார் இயற்றிய “திருவருட்பா” வை சேர்க்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார் மஹாவிஷ்ணு

வள்ளலார் இயற்றிய “திருவருட்பா” வை சேர்க்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார் மஹாவிஷ்ணு

தமிழகப் பாடநூல்களில் திருவருட்பா : அரசுக்கு பரம்பொருள் அறக்கட்டளை மஹாவிஷ்ணு வேண்டுகோள்! தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் பரம்பொருள் அறக்கட்டளை என்னும் சமூகத் தொண்டு நிறுவனத்தை குருஜி மஹாவிஷ்ணு அவர்கள் நடத்தி வருகிறார்.தனது இந்தப் பரம்பொருள் அறக்கட்டளை மூலம் ஏராளமான அறப்பணிகளைச் செய்து வருகிறார். தினமும் 300 நபர்களுக்கு மதிய உணவு வழங்குதல், ஏழை எளிய மாணாக்கர்களின் கல்விக்கு உதவுதல், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி, அரசுப் பள்ளி கட்டடங்களைச் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்தல் போன்ற சேவைகளை இந்தப் பரம்பொருள் அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து குருஜி மஹாவிஷ்ணு, பள்ளிக் குழந்தைகள் உள்ளத்தில் அறக்கருத்துகளை விதைக்கும் நோக்கத்தில், தமிழகப் பாடநூல்களில் வள்ளலார் அவர்கள் இயற்றிய “திருவருட்பா” வை சேர்க்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும், தமிழ்நாடு…
Read More
ஆலியா பட் , ரன்பீர் கபூர் திருமணத்திற்கு 40 பேர் மட்டுமே வந்திருந்தனர்

ஆலியா பட் , ரன்பீர் கபூர் திருமணத்திற்கு 40 பேர் மட்டுமே வந்திருந்தனர்

நடிகை ஆலியா பட் நடிகர் ரன்பீர் கபூரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் குறித்து தகவவல்கள் அனைத்துமே ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. திருமணம் எங்கு நடக்கிறது என்ற தகவல் கூட மர்மமாகவே இருந்தது. இறுதியில் பாந்த் ராவில் உள்ள ரன்பிர் கபூர் இல்லத்தில் இத்திருமணம் நடந்தது. திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலரே அழைக்கப்பட்டனர். தனது திருமணம் குறித்து ஆலியா பட் முதல் முறையாக நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் எனது திருமணத்திற்கு 40 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இது தொடர்பாக ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது. நான் சோசியல் நிகழ்ச்சிகளை அதிகமாக விரும்பமாட்டேன். அதனால் மிகவும் அபூர்வமாகவே வெளியில் பார்ட்டிகளுக்கு செல்வேன். யாரிடமும் அதிகமாக பேசவும் மாட்டேன். கலகலப்பாகவும் இருக்க மாட்டேன். அதனால் தான் எனது திருமணத்திற்கு 40 பேர் மட்டுமே வந்திருந்தனர். எனக்கு உண்மையாக மிகவும் விரிவாக பேசவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில்…
Read More
இயக்குநர் நந்தா பெரியசாமி, சமுத்திரக்கனி இணையும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

இயக்குநர் நந்தா பெரியசாமி, சமுத்திரக்கனி இணையும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம்   தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைக்களங்களில் மக்கள் மனதைக் கவர்ந்த இயக்குநர் "நந்தா பெரியசாமி" இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக ஒரு பரபரப்பான திரில்லர் படமாக இத்திரைப்படம் உருவாகிறது. கேரள எல்லையில் மேகமலை, குமுளி, மூணாறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் நடைபெறவுள்ளது.கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே சமுத்திரக்கனி மொத்தமாக தேதிகள் தந்து முழு ஈடுபாட்டுடன் இந்த படத்தில் முதன்மை கதா பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நாயகி அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகை அனன்யா நாடோடிகள் படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'சீதா ராமம்' படப்புகழ் விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.சினேகன், இயக்குநர் ராஜூமுருகன்,…
Read More
ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்

ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்

பிரபல நடன இயக்குநர் ஷெரீஃப்பின் புதிய முன்னெடுப்பான ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார் எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை மேம்படுத்தும் ஜூபாப் செயலியை குழந்தைகள் முதல் பெரியவர் வரை பயன்படுத்தலாம், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களிலும் உபயோகப்படுத்தலாம் 'சூது கவ்வும்' தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார். தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். இந்த செயலியின் செயல்முறை விளக்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் நாளை…
Read More
‘மறக்குமா நஞ்சம்’  எனும் திரைப்படத்தில் ரக்ஷன் அறிமுக ஹீரோவாக நடிக்கிறார்

‘மறக்குமா நஞ்சம்’ எனும் திரைப்படத்தில் ரக்ஷன் அறிமுக ஹீரோவாக நடிக்கிறார்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் விஜே ரக்ஷன். இவர் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சின்னத்திரையில் வலம் வந்துகொண்டிருந்த ரக்ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் கால்பதித்தார்.இந்நிலையில் தற்போது ஹீரோவாகவும் களமிறங்கிவிட்டார். ஆம், யோகத்திறன் என்பவரின் இயக்கத்தில் உருவாகும் மறக்குமா நஞ்சம் எனும் திரைப்படத்தில் ரக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கப்போவது யார் தீனா நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.   https://www.youtube.com/watch?v=TPIdm2t7Bis
Read More
நடிகர் விஷால் ‘சென்னையில் ஒரு கிராம விழா’ என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

நடிகர் விஷால் ‘சென்னையில் ஒரு கிராம விழா’ என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

  இன்று(05/05/2023) சத்யபாமா ப‌ல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற 'சென்னையில் ஒரு கிராம விழா' நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் விஷால் அவர்கள், சமீபத்தில் மறைந்த நடிகர் மனோபாலா அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தினார். விழாவுக்கு வந்தவர்களும் விஷாலுடன் மௌன அஞ்சலியில் பங்கேற்றனர். அதன்பிறகு பேசிய விஷால், "விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். சென்னையில் ஒரு கிராமம் விழா நிழச்சியில் வரும் வருவாய் அனைத்தும் நலியுற்ற விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்பதாலேயே நான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். விவசாயி 'சேற்றில் கால் வைத்தால் தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்!' என்பது உண்மையானது. என்னுடைய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் விற்பனையாகும் டிக்கட்டுகளில் ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறேன். கல்வியால் எப்போதும் இந்த உலகத்தை ஆள முடியும், அந்த கல்விக்காக நான் யாரிடமும் பிச்சை எடுக்க தயங்கியது கிடையாது. எனக்காக இல்லை, படிக்க முடியாத எத்தனையோ…
Read More