இறகுப் பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கிய ஆர்.கே.செல்வமணி

இறகுப் பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கிய ஆர்.கே.செல்வமணி

இறகுப் பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கிய ஆர்.கே.செல்வமணி, விழாவில் பேசினார். "பல யூனியன்களிலும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. சமீபத்தில் டப்பிங் யூனியனின் அலுவலகக் கட்டடம் மீது மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்குக் காரணம் வெளியாள் அல்ல. யூனியனுக்குள்ளேயே உள்ளவர்களின் துரோகம்தான் காரணம். அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். என் மாறாத ஆதரவு என்றுமே யூனியனுக்குத்தான். டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்காக அதன் தலைவர் ராதாரவியின் தலைமையில் இறகுப்பந்து போட்டி, சமீபத்தில் சென்னையில் நடந்தது. ஆர்.கே.செல்வமணி, தீனா, இயக்குநர் ரங்கநாதன் உட்படப் பலர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். ராதாரவி மீது விரோதம் இருந்தால் அவருடன் மோத வேண்டும். எத்தனையோ உறுப்பினர்களின் பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட அலுவலகத்தைப் பாதிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத துரோகச் செயல். இடித்துக் கட்டவிருக்கும் யூனியன் அலுவலகக் கட்டடத்தின் செலவிற்கு என் பங்காக ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக அளிக்கிறேன்" என்றும் பேசினார். பரிசு பெற்றவர்களை ராதாரவி,…
Read More
அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகை பிரபலங்கள் பார்த்த ”மாவீரன் பிள்ளை” படம்

அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகை பிரபலங்கள் பார்த்த ”மாவீரன் பிள்ளை” படம்

தண்ணி நல்லது.. டாஸ்மாக் நல்லதல்ல ; மாவீரன் பிள்ளை படம் பற்றி ராதாரவி பேச்சு தமிழகத்தில் குழந்தைப்பேறு குறைந்ததற்கு காரணம் மது தான் ; மாவீரன் பிள்ளை படம் பார்த்துவிட்டு எச்.ராஜா குற்றச்சாட்டு மதுவிற்கு அடிமையானவர்களுக்கு சித்த மருத்துவம் வேண்டும் ; மாவீரன் பிள்ளை பட நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 21 நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று தமிழ்நாட்டை சீரழித்துக்கொண்டு இருக்கும் மதுவின் கொடுமைகளையும், மதுவிற்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், அப்படி ஒரு போராட்டாம் மீண்டும் எழுந்தால் தான் மதுவில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற…
Read More
திருக்குறளை மையப்படுத்திய புதிய ஆல்பம் ‘ “தூரிகையின் தீண்டல்’!

திருக்குறளை மையப்படுத்திய புதிய ஆல்பம் ‘ “தூரிகையின் தீண்டல்’!

Kanmani Productions சார்பில், மாலா கோபால் தயாரிப்பில், இயக்குநர் கிருஷ்ணன் மாரியப்பன் இயக்கத்தில், கவிஞர் விவேக் வரிகளில், CD அன்புமணி இசையமைப்பில் உருவாகியுள்ள காதல் ஆல்பம் பாடல்  "தூரிகையின் தீண்டல்". திருக்குறளை மையப்படுத்தி ஆண் பெண் உறவை அழகாகச் சொல்லும் இப்பாடலில் ஆதி கோபால், நமீதா கிருஷ்ணமூர்த்தி அற்புதமாக நடித்துள்ளார்கள். இப்பாடலில் நடித்ததோடு ஆதி இப்பாடலை சொந்தக்குரலில் பாடியுள்ளார். இப்பாடலின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர் இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மாலா கோபால் கூறியதாவது..., "பாடலாசிரியர் விவேக் இந்தப் பாடலை எழுத ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியமும், மகிழ்ச்சியையும் அளித்தது.  இசையமைப்பாளர் அன்பு மணியின், பங்களிப்பு அளப்பரியது.  இயக்குநர் கிருஷ்ணன் மாரியப்பன் இந்த குழுவை ஒருங்கிணைத்து, அவருடைய கருவை  மிகச்சரியான படைப்பாக உருவாக்கி இருக்கிறார். இணை தயாரிப்பாளர் பிரியா, எனது இடத்திலிருந்து இந்த பாடலை சிறப்பாக உருவாக்கினார். இந்த பாடலை கேட்டு உங்களுடைய ஆதரவைத் தாருங்கள் நன்றி." ஒளிப்பதிவாளர் விக்ரம்…
Read More
 வானலைகளில் ஒரு வழிப்போக்கன் – புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

 வானலைகளில் ஒரு வழிப்போக்கன் – புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

பிரபல தொகுப்பாளரும், சர்வதேசளவில் புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் அறிவிப்பாளருமான முனைவர் B.H.அப்துல் ஹமீத் அவர்களது வாழ்நாள் அனுபவங்களை உள்ளடக்கிய 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' எனும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியில், "பிளாக் ஷீப் டிவி" இணைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் புத்தக வெளியீடு நிகழ்ச்சி, டிசம்பர் 18 ஆம் தேதியன்று மாலை 05:30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நிகழ உள்ளது. அரை நூற்றாண்டு காலமாக நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் கோலோச்சிய ஆளுமையான அப்துல் ஹமீது அய்யாவின் இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் RJ விக்னேஷ்காந்த். மேலும், முந்தைய தலைமுறை மேதைகளைத் தேடி ஓடிக் கொண்டாடி மகிழும் பிளாக்‌ஷிப் டிவி நிறுவனம்,  இந்த நிகழ்ச்சியின் தலைமை நல்கையாளராக (Title Sponsorship), பொறுப்பேற்றுக் கொண்டு, தன்னையும் இந்த வரலாற்றுப் பதிவில் இணைத்துக் கொண்டுள்ளது என்பதையும் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். முறையே இந்த கான்சர்ட் (concert) மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்வு…
Read More
புதிய சுவைகளை அறிமுகப்படுத்தும் 601 Multi Cuisine Restaurant

புதிய சுவைகளை அறிமுகப்படுத்தும் 601 Multi Cuisine Restaurant

2002-ஆண்டிலிருந்து , The Park Chennai நட்சத்திர ஹோட்டலில் இயங்கி வரும் 601 Multi Cuisine Restaurant புத்தம் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி நாவின் சுவைக்கு சுகமானதொரு சேவை ஆற்றி வருகிறது! இப்போது பிரத்தியேகமான Dim Sum மற்றும் Sushi என புதியதொரு முகவரியை அறிமுகப்படுத்துகிறது. விரைவான மற்றும் இலகுவாக ஜீரணமாகும் மதிய உணவு அல்லது நிதானமாக உண்டு களைப்பாற முற்படும் இரவு உணவாகட்டும்-அனைத்திற்குமே ஏற்ற வகையில் உணவு வகையறாக்கள் இங்கே உண்டு! கலையும் கற்பனையும் கலந்த கலவையாக இங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் கண்ணுக்கும் கருத்திற்கும் விருந்தளிப்பதோடு நாவின் சுவைக்கும் நல்விருந்தளிக்கும்! ஆர்வம், துல்லியம் மற்றும் திறமையை மட்டுமே துணையாகக் கொண்டு, Executive Chef, Ashutosh Nerlekar மற்றும் அவரது குழுவினர், சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அசைவ உணவு உண்பவர்களுக்கு ஒரே மாதிரியாக ஒரு அற்புதமான மெனுவைத் தயாரித்துள்ளனர். மெனுவில் சில பரிச்சயமான சில உணவு வகைகள்…
Read More
சினிமாவிலும் சாதனை புரியும் சிக்னேச்சர் ஸ்டுடியோ

சினிமாவிலும் சாதனை புரியும் சிக்னேச்சர் ஸ்டுடியோ

  சிக்னேச்சர் ஸ்டுடியோ யுனிசெக்ஸ் சலூன் மற்றும் அகாடமி, நாங்கள் முன்னணி அழகு நிலைய வணிகத்தில் இருக்கிறோம். அனைத்து சர்வதேச பிராண்ட் தயாரிப்புகள் பற்றிய அறிவைப் பெற்ற தரமான சேவை வழங்கக்கூடிய பணியாளர்களைக் கொண்டுள்ளோம். அவர்கள், உலகின் மிகச் சிறந்த அழகுக் கலை நிபுணர்களிடம் பயிற்சி பெற்றவர்கள். எங்களிடம் ஒரு வாடிக்கையாளர் பெறும் மிகச் சிறந்த அனுபவம், அவரை எங்களது நீண்ட கால வாடிக்கையாளராக மாற்றிவிடும் என்பதை உறுதிப்படுத்துகிறோம். எங்கள் நிர்வாக இயக்குநர் முஜீபா நாஸ். நிறுவனர் ஜபீன் மெஹமூத். அவர், ஒப்பனைத் துறையில் 22 வருட அனுபவமுள்ளவர். சிறந்த ஒப்பனைக்காக பல விருதுகள் வாங்கிய ஜபீன், சிறந்த ஒப்பனையாளர் என்பதோடு சிறந்த ஒப்பனைக் கல்வியாளராகவும் திகழ்கிறார். ஓர் அழகுநிலையத்தை நடத்துவதற்கான, தொழில் முனைவோருக்குரிய ஊக்கமும் திறனும் ஒருங்கே பெற்றவர். அவருடைய சிறப்பு அம்சம், அழகு மற்றும் ஒப்பனைத் தொழில் பற்றிய பரிபூரண அறிவைப் பெற்றவர். சிக்னேச்சர் ஸ்டுடியோவில் அனைத்து வகையான…
Read More
கேன்ஸ் திரைப்பட விழாவில் உரையாற்றிய  மத்திய அமைச்சர்

கேன்ஸ் திரைப்பட விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர்

கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்திய அமைப்பில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் உரையாற்றினார். 6000 ஆண்டு பழமை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் 130 கோடி மக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ள அமைச்சர், இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படத்துறையினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இடையே சிறப்புரை ஆற்றினார். திருமிகு வாணி திரிபாதி அமர்வை நெறியாள்கை செய்தார். அந்த அரங்கில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலர் திரு அபூர்வ சந்திரா, எழுத்தாளரும், கவிஞரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவருமான திரு பிரசூன் ஜோஷி, திரைப்பட நடிகர், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் திரு மாதவன், திரைப்பட நடிகர், மற்றும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவர் திரு சேகர் கபூர், திரைப்பட தொகுப்பாளர், ஹாலிவுட் நிருபர் திரு ஸ்காட் ராக்ஸ்பரோ, தயாரிப்பாளர் திரு பிலிப் அவ்ரில் ஆகியோர் கலந்து கொண்டனர். கேன்ஸ் படவிழாவின் முக்கியத்துவம் குறித்து…
Read More
விமல் நடிப்பில் வெளியாகும் இணைய தொடர், ஜீ5 தமிழ் ஒரிஜினல் “விலங்கு” !

விமல் நடிப்பில் வெளியாகும் இணைய தொடர், ஜீ5 தமிழ் ஒரிஜினல் “விலங்கு” !

  ஜீ5 தளமானது, அசத்தலான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களின் விருப்பமான தளமாக இருந்து வருகிறது. ஜீ5 உடைய அடுத்த ஒரிஜினல் வெளியீடாக வெளியாகிறது ‘விலங்கு’ இணைய தொடர். ரசிகர்களுக்காக பிரத்யேகமாக, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள "விலங்கு" என்ற ஒரிஜினல் இணைய தொடர், பிப்ரவரி 18, 2022 வெளியாகிறது. இதன் வெளியீட்டை ஒட்டி இன்று படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் நடிகர் பாலசரவணன் பேசியதாவது… நான் நடித்த படங்களில் என்னை பற்றி எழுதி ஆதரவளித்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. விலங்கு தொடர் எனக்கு முக்கியமானது. பிரசாந்த் எனக்கு உயிர் நண்பன், அவனிடம் காமெடியனாக நடிக்கிறேன், குணசித்திரத்தில் நடிக்க வேண்டும் என சொன்னேன், அப்போது தான் இந்தக்கதை சொல்லி இதில் வரும் கதாப்பாத்திரத்தில் நடிக்க சொன்னான். ஒரு பெரிய நடிகர் நடிக்க வேண்டிய பாத்திரம் என்னை நம்பி கொடுத்த…
Read More
ப்ளூ சட்டை மாறனை தவிர, எல்லோருமே படம் நன்றாக இருக்கிறது என சொல்லிட்டாங்க – இயக்குநர் வெங்கட் பிரபு !

ப்ளூ சட்டை மாறனை தவிர, எல்லோருமே படம் நன்றாக இருக்கிறது என சொல்லிட்டாங்க – இயக்குநர் வெங்கட் பிரபு !

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் இயக்குனர் வெங்கட்பிரபு பேசும்போது, “இந்த படத்தின் கதையை சொன்னபோது உடனே ஒப்புக் கொண்ட சிம்பு, இந்த படத்தை பிரஷ்ஷா புது டீமோட வொர்க் பண்ணலாம்ன்னு சொன்னார்.. இந்த படத்தோட கதைய முதல்ல டைம் லூப் இல்லாமல்தான் தயார்…
Read More
முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு விருதுகள் வழங்கியது Directors Club !

முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு விருதுகள் வழங்கியது Directors Club !

Directors Club என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக உதவி இயக்குநர் சக்தி அவர்களால் வாட்ஸ் ஆப் செயலியில் இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுவில் தமிழ் சினிமாவின் உதவி இயக்குநர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர். இயக்குனர்கள மணிரத்னம், SS ராஜமௌலி, ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், ரவிவர்மன், கதாநாயகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் என சினிமாவின் அனைத்து துறையினரும் இக்குழுவில் வந்து உதவி இயக்குநர்களோடு கலந்துரையாடி வருகின்றனர், உதவி இயக்குனர்களுக்கு ஒரு அரிய களமாகவும், அவர்களுக்கு இலவச பயிற்சி பட்டறையாகவும் விளங்கும் Directors Club குழுமம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. Directors Club நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் 17.12.2021 வெள்ளிக்கிழமை அன்று சென்னை ராணி சீதை…
Read More