“ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

“ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

  ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா- பா. ரஞ்சித் - அஸ்வத் மாரிமுத்து - ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'கிங்ஸ்டன் ' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். உரையாடல்களை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க,…
Read More
ஹாலிவுட் நிறுவனமான MOB SCENE ஐ கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !!

ஹாலிவுட் நிறுவனமான MOB SCENE ஐ கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !!

  இளையராஜா பயோபிக்கை தயாரிக்கும் கன்நெக்ட் மீடியா நிறுவனம், ஹாலிவுட் நிறுவனமான மாப் சீன் நிறுவனத்தைக் கைப்பற்றியது !! ஆவதார், ட்யூன், பாஸ்ட் & ஃப்யூரியஸ், ஜுராசிக் வேர்ல்ட், பார்பி, மற்றும் ‘ஏ கம்ப்ளீட் அன்நோன்' ஆகிய ஹாலிவுட் வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்த MOB SCENE நிறுவனத்தைக் கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !! ஆசியாவின் வேகமாக வளர்ந்து வரும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான CONNEKKT மீடியா, ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான மார்க்கெட்டிங் ஏஜென்சியான மாப் சீனை தற்போது கைப்பற்றியுள்ளது. ஹாலிவுட்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் மற்றும் சீரிஸ்களின் பாராட்டைப் பெற்ற மார்க்கெட்டிங் விளம்பரங்களை உருவாக்குவதில் மாப் சீன் கடந்த இருபது ஆண்டுகளாக முன்னணி சக்தியாக இருந்து வருகிறது. மாப் சீன், ஆவதார், ட்யூன், ஜுராசிக் வேர்ல்ட், பஸ்ஸ் இன் பூட்ஸ், தி லாஸ்ட் ஆஃப் அஸ், மார்வலஸ் மிஸ்ஸஸ் மைசெல் மற்றும் ‘‘ஏ கம்ப்ளீட் அன்நோன்'…
Read More
மோகன்லால் நடிக்கும் ‘L2 : எம்புரான்’ படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட நடிகர் !!

மோகன்லால் நடிக்கும் ‘L2 : எம்புரான்’ படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட நடிகர் !!

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' L 2: எம்புரான்' எனும் திரைப்படத்தில் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' மற்றும் 'ஜான் விக் சாப்டர் 3 ' போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜெரோம் ஃபிளின் நடித்திருக்கிறார் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்திருக்கிறார்கள். இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள 'L 2 எம்புரான் ' எனும் திரைப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாறன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் , சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன், கிஷோர் ,சாய்குமார், சச்சின் கடேக்கர் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஹாலிவுட்டில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற 'கேம் ஆப் த்ரோன்ஸ்' பட புகழ் நடிகர் ஜெரோம் ஃப்ளின்- இப்படத்தில் இடம்பெறும் போரிஸ் ஆலிவர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.…
Read More
வேற லெவல் அனுபவம் கொடுக்கும் மர்மர் டிரெய்லர் !!

வேற லெவல் அனுபவம் கொடுக்கும் மர்மர் டிரெய்லர் !!

தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் படத்தொகுப்பாளர் ரோஹித் பேசும் போது, "இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்-க்கு இந்த மேடையில் வைத்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் நாங்கள் மேடையேறுவதற்கு காரணம் தயாரிப்பாளர் பிரபாகரன் தான். அவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி…
Read More

‘ரன்னர் ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!

சிலம்பரசன் TR வெளியிட்ட பாலாஜி முருகதாஸின் ‘ரன்னர் ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - மகாசிவராத்திரி சிறப்பு தினத்தில் ரசிகர்களுக்கு பரிசு ! நடிகர் பாலாஜி முருகதாஸ் தனது திறமையான நடிப்பின் மூலம் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான 'ஃபயர்’ திரைப்படத்தில் எவ்வித தயக்கமும் இல்லாமல் எதிர்மறையான காசி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது தனது புதிய திரைப்படமான ‘ரன்னர்’ மூலம் ரசிகர்களை ஈர்க்கத் தயாராகி வருகிறார்.. விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட (Sports Drama) கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தை சிதம்பரம் A அன்பழகன் இயக்க, ரைனோஸ் ராம்பேஜ் பிலிம்ஸ் சார்பில் காலெப் மற்றும் கெல்வின் தயாரிக்கின்றனர். இதற்கு முன்பு இத்தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய ‘ பாக்சர்’ மற்றும் ‘கொட்டேஷன் கேங்’ போன்ற திரைப்படங்கள் திரையுலகில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மகாசிவராத்திரி நாளை முன்னிட்டு, மாஸ் நடிகர் சிலம்பரசன் TR, ' ரன்னர்…
Read More
மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரௌபதி 2’!

மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரௌபதி 2’!

சிவாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்கரவர்த்தி, ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரௌபதி 2'! ‘திரௌபதி’யை பெரிய திரைகளில் வரவேற்கும் நேரம் இது. இயக்குநர் மோகன் ஜி மற்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஆகியோர் இணைந்த 'ருத்ர தாண்டவம்' மற்றும் 'திரௌபதி' படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது. இப்போது இவர்கள் மீண்டும் 'திரௌபதி 2' படத்தில் இணைந்துள்ளனர். இம்முறை, 14 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து ஒருபோதும் மறைந்துவிடாத தீவிரமான போர்வீரர்களைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து சிவாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் வெளியான சிறிது நேரத்திலேயே ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கவனத்தைக் கவர்ந்தது. இதுபற்றி இயக்குநர் மோகன் ஜி…
Read More
50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, விருந்து வைத்த “தனம்” சீரியல் குழு !!

50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, விருந்து வைத்த “தனம்” சீரியல் குழு !!

விஜய் டிவி வழங்கும், “தனம்” தமிழ் சின்னத்திரையை அலங்கரிக்க வரும் அடுத்த மெகாத்தொடர் !! தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், அடுத்ததாக, மக்களுக்கு விருந்தாக வெளிவரும் நெடுந்தொடர் “தனம்”. ஆட்டோ ஓட்டும் பெண்ணை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியலை, விளம்பரப்படுத்தும் விதமாக, 50 பெண் ஓட்டுநர்களை அழைத்து, அவர்களை பாராட்டி விருந்தளித்துள்ளனர் படக்குழுவினர். தமிழ் சின்னத்திரையுலகில் தொடர்ந்து பல புதுமையான படைப்புகளை வழங்கி, மக்களை கவர்ந்து வரும், விஜய் தொலைக்காட்சியில், அடுத்ததாக இந்த பிப்ரவரி 17 முதல் ஒளிபரப்பாகி வருகிறது “தனம்” சீரியல். ஒரு குடும்பத்தில் திருமணமாகி வரும் புதுப்பெண், எதிர்பாரா விதமாக கணவனை இழந்த பின், அந்த மொத்தக் குடும்பத்தையும், ஆட்டோ ஓட்டி காப்பாற்றுகிறாள், மொத்தக் குடும்பத்தின் சுமைகளையும் தன் தோளில் சுமக்கிறாள். ஆட்டோ ஓட்டும் தனத்தை மையப்படுத்தி, இந்த சீரியலின் கதை பயணிக்கிறது. தனம் கதாப்பாத்திரத்திரத்தில் சத்யா நடிக்க, ரூபஸ்ரீ, ஐஸ்வர்யா, Vj கல்யாணி, கிஷோர்,…
Read More
“தமிழ் சினிமாவின் ஹல்க் என்றால் அது ஆர்யா தான்” – கவுதம் கார்த்திக் பிரமிப்பு !!

“தமிழ் சினிமாவின் ஹல்க் என்றால் அது ஆர்யா தான்” – கவுதம் கார்த்திக் பிரமிப்பு !!

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X). வெற்றிப் படமான எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சுவாரியார், அனகா, அதுல்யா ரவி, ரைஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் ஆர்யா பேசும்போது, “இந்த படத்துக்கு எனக்கு சிபாரிசு செய்ததே தயாரிப்பாளர் S. லஷ்மன் குமார் தான். இந்தக் கதையைக் கேட்டுவிட்டு இது மிகப்பெரிய பட்ஜெட் ஆகுமே என…
Read More
டிராகன்   உண்மையில் நன்றாக இருக்கிறதா ?

டிராகன் உண்மையில் நன்றாக இருக்கிறதா ?

ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு, "When Unstoppable Force meets an Immovable Object" இதில் Unstoppable Force ஆக அறம் என்ற ஒன்றே இல்லாமல், அனைவரையும் ஏமாற்றி, எல்லோரையும் மிதித்துவிட்டு மேலே ஏறும் ஒருவனையும், Immovable Object ஆக அவன் செய்து வைத்த தவறுகளின் ஒட்டுமொத்த சங்கம சுவரையும் எடுத்து கொண்டால், அது தான் டிராகன். பிரதீப் ரங்கநாதன் என்ற பெயருக்கே இப்போது பல டிக்கெட்டுகள் வித்து தீருகின்றன. ஆனால் வித்து தீரும் டிக்கெட் தகுதியானதாக இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை சொல்லும் விதமாக தான் டிராகன் இருக்கிறது. தான் ஒரு One film Wonder அல்ல என்பதை பிரதீப் நிரூபித்து இருக்கிறார். கல்லூரி காலத்தில் படிக்காமல் அரியர் வைத்து சுற்றி கொண்டு இருந்த இளைஞன் பொய் பேச்சு, போலி சான்றிதழ் என குறுக்கு வழியின் மூலமாக தனது கோட்டையை கட்டி கொண்டு செல்ல, அவன் இதுவரை செய்த தவறின்…
Read More
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்- விமர்சனம் !!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்- விமர்சனம் !!

இந்த படத்தின் மீது இரண்டு விஷயங்களுக்காக நம்பிக்கை இருந்தது. ஒன்று, தனுஷின் மூன்றாவது இயக்கம் என்பதனால், மற்றொன்று பருவ வயது மனிதர்களை நாயகர்களாக திரையில் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டது என்பதனால். ஆனால் படம் முடிந்த பிறகு, இந்த நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று தெரிய வந்தது. உணர்வில்லாத கதைக்கு, உயிர் கொடுக்க உயிரோடு இருக்கும் எந்த மனிதனாலும் முடியாது. அது தான் இந்த படத்தின் நிலையும். தனுஷின் பேப்பரிலயே இல்லாத ஒன்று, எப்படி திரையில் வரும். Gen Z காதல் கதை என்ற பெயரில் தனுஷ் கதை உருவாக்க நினைத்தது, அற்புதமான யோசனை. தமிழில் எந்த இயக்குனரும் இந்த genre- யை தொடாதது தமிழ் சினிமாவிற்கு பெரும் காலமாக இழப்பாக இருந்து வந்தது. ஆனால் இதை பார்த்த பிறகு தான் அவர்கள் ஏன் தொடவில்லை என்று புரிந்தது. காதல், நட்பு, காதல் பிரிவு, தவறான புரிதல் என காதல் கதையில் நிறைந்து…
Read More