11
Jul
இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து ஜூலை 21 அன்று வெளியாகவுள்ள ஸ்பை த்ரில்லர் படம் ''கொலை''. இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் , ரித்திகா சிங்க் மற்றும் மீனாக்ஷி சௌத்ரி போன்றவர்கள் முக்க்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், இந்தப் படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்,சென்னையில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது, இதில் படக்குழு மற்றும் பல முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் கிரீஷ் பேசியதாவது, "இந்தப் படம் என் கரியரில் மிக முக்கியமானது என நினைக்கிறேன். வெளிநாடுகளில் சென்று இசையமைப்பது, பாடகர்கள் என அனைத்தையும் கேட்டவுடனே யோசிக்காமல் தயாரிப்பு தரப்பு செய்து கொடுத்தது. இசை, இயக்கம், தயாரிப்பு என விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. பாலாஜி குமாருடன் எனக்கு இரண்டாவது படம். என்னுடைய திறமையான தொழில்நுட்பக்குழு அனைவருக்கும் நன்றி". கலைப்புலி…
