இயக்குனர் லிங்குசாமி கலந்து கொண்ட பரிசு வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா

இயக்குனர் லிங்குசாமி கலந்து கொண்ட பரிசு வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா

  கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி - 2023, சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள சர்.பி.டி.தியாகராசர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (02.06.2023) மாலை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமானின் நினைவைப் போற்றும் விதமாகவும் இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையினர் மற்றும் இலக்கிய உலகினர் பெருமளவில் கலந்து கொண்டனர். தமிழ் படைப்புலகில் பெரும்புகழ் பெற்று மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான், ’ஹைக்கூ’ என்று அழைக்கப்படுகின்ற குறுங்கவிதை வடிவத்திலும் முத்திரை பதித்து, அக்கவிதை வடிவின் மிகச் சிறந்த ஆய்வாளராகவும் விளங்கினார். அவரது நினைவாக ஹைக்கூ கவிதை வடிவத்தை தமிழ் இலக்கிய உலகில் மேலும் பரவச் செய்யும் வகையில், ‘கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி’ தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முயற்சிக்குப் பெருமளவில் அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் கவிதைகளை அனுப்பியிருந்தனர். வெவ்வேறு நடுவர்…
Read More
வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி இணைந்து திறந்து வைத்த இயக்குனர் அமீரின் ஹோட்டல்

வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி இணைந்து திறந்து வைத்த இயக்குனர் அமீரின் ஹோட்டல்

‘மெளனம் பேசியதே’ படம் மூலமா கோலிவுட்டில் டைரக்டரா அறிமுகமானவர் இயக்குநர் அமீர். அதன் பின்னர் நடிகர் ஜீவாவை வைத்து ‘ராம்’ படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அந்தத் திரைப்படத்தை தயாரித்ததின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார்.அதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை அறிமுகப்படுத்தி ‘பருத்தி வீரன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் 300 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்ட அமீர் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். இதனிடையே ‘யோகி’ படத்தில் நடிகராக களம் இறங்கிய அமீர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக வடசென்னையில் இவர் ஏற்று நடித்த ராஜன் கதாபாத்திரம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கடைசியாக இவரது இயக்கத்தில் ‘ ஆதி பகவன்’ என்ற திரைப்படம் வெளியானது. ஜெயம்ரவி இரட்டை வேடங்களில் நடித்த இந்தத்திரைப்படம் தோல்வி அடைந்தது . தற்போது வெற்றிமாறன் மற்றும் தங்கம் எழுதிய ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற திரைப்படத்தை…
Read More
மலையாள இயக்குநருடன் கை கோர்க்கும் பிரபுதேவா, மீண்டும் களமிறங்கும் வேதிகா!

மலையாள இயக்குநருடன் கை கோர்க்கும் பிரபுதேவா, மீண்டும் களமிறங்கும் வேதிகா!

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் 'பேட்ட ராப்' . டி இமான் இசையில் உருவாகவுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த 'பேட்ட ராப்' திரைப்படத்தில் வேதிகா நாயகியாக நடிக்கிறார் நடிகர்-நடன இயக்குநர்-இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் 'பேட்ட ராப்' என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. ஜூன் 15, 2023 அன்று புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். 'தேரு' (2023) மற்றும் 'ஜிபூட்டி' (2021) போன்ற மலையாளப் படங்களை எஸ் ஜே சினு இயக்கியுள்ளது…
Read More
இந்தியன் சூப்பர் ஹீரோ படமான ”வீரன்” படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

இந்தியன் சூப்பர் ஹீரோ படமான ”வீரன்” படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று (29/05/2023) நடைபெற்றது   இந்த நிகழ்வில் நடிகை ஆதிரா பேசியதாவது, "படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி ஃபிலிம்ஸ்கும், இந்த படத்தில் என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சரவன் சாருக்கும் நன்றி. ஆதி சார் சிறந்த கோ- ஸ்டார். எனக்கு படத்தில் நிறைய விஷயங்களில் உதவி செய்தார். அனைவருக்கும் நன்றி. படம் ஜூன் 2 வெளியாக இருக்கிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்". நடிகர் காளி வெங்கட் பேசியதாவது, 'முண்டாசுப்பட்டி' படத்திற்கு பிறகு நானும் முனிஷ்காந்தும் இந்த படத்தில் நல்ல நகைச்சுவை தந்திருக்கிறோம் என நம்பிக்கையோடு சொல்லுகிறேன். இந்த படம் குழந்தைகளோடு குடும்பமாக தியேட்டரில் பார்த்து ரசிக்கக்கூடிய கூடிய வகையில் இருக்கும். ஆதி சாரோடு வேலை பார்த்தது மகிழ்ச்சி. தமிழில் இது போன்ற முதல் நேட்டிவிட்டி சூப்பர் ஹீரோ கதையை தயாரித்த…
Read More
பழ.கருப்பையா கலந்து கொண்ட ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!!

பழ.கருப்பையா கலந்து கொண்ட ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!!

  JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார்.மேலும் இந்த படத்தில் ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார். படத்தின் மூன்று பாடல்களையும் ஏ.இரமணிகாந்தன் எழுதியுள்ளார். கலை - சிவா. எடிட்டர் ஆண்டனியின் சிஷ்யையான வெரோனிகா பிரசாத் இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார்.   தயாரிப்பாளர் T.சிவா பேசியதாவது , “இந்த நிகழ்வை பார்க்கும் போது இசை வெளியீட்டு விழா போல தெரியவில்லை. முன்னாள் நண்பர்கள் ஒன்று சேரும் விழா போல தான் தெரிகிறது. இந்த படத்தின்…
Read More
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட “UNSTOPPABLE” என்ற சுயசரிதை புத்தகம்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட “UNSTOPPABLE” என்ற சுயசரிதை புத்தகம்

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது. மீனா சாப்ரியா பற்றிய சிறு விவரங்கள் 17 வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளை பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து அவரின் கார்ப்பரேட் வாழ்க்கையை INOX நிறுவனத்தின் மூலம் ஆரம்பித்து. PVR குழுமத்தின் தலைவரை சந்தித்தபின், PVRன் உதவி மேலாளராகிறார் மீனா சாப்ரியா. அதனைத் தொடர்ந்து, “UNSTOPPABLE ANGELS” என்ற இயக்கத்தின் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சிறப்பிக்க உதவி வருகிறார் மீனா சாப்ரியா.   எழுத்தாளர் மீனா சாப்ரியா பேசியதாவது, நடிகை ஐஸ்வர்யா…
Read More
‘தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

‘தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

  லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் மோகன்ராஜா பேசியதாவது இந்தப்படத்தில் 'உசுராங்கூட்டில்..' என்ற பாடலை எழுதியுள்ளேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சித்து குமாருக்கு நன்றி. பாடலாசிரியரைப் படுத்தி எடுப்பதில் முதன்மையானவர் சித்து தான். பல முறை விவாதத்திற்குப் பின் 'உசுராங்கூட்டில்..' என்ற வார்த்தை பிடித்து, அதில் பாடல் எழுதினோம். அவருடன் எப்போதும் நிறைய விவாதத்திற்கு பிறகே பாடல் முடிவாகும். கடைசியில் என்னை நம்புங்கள் என்பேன் நம்பி வருவார். இந்தப்படம் இலக்கணம் மீறா தலைப்பு, இலக்கணம் மீறத் துடிக்கிற கதை. மிக அற்புதமாக இயக்கியுள்ளார். கல்யாணமானவர்கள் எல்லோரும் இந்தப்படத்தைப்…
Read More
ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா இன்று படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் பிரதீப் பேசியதாவது… நண்பர்களால் தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டவன் நான். இந்த இடத்தில் நான் நிற்க காரணம் அவர்கள் தான். அப்ஷா மைதீன் இன்று வர முடியவில்லை. அவருக்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களால் தான் இந்தப்படம் செய்துள்ளேன் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது… ஒரு பத்திரிக்கையாளர் வந்தவுடனே நல்ல கண்டண்ட் தாருங்கள் என்றார் என்ன கண்டண்ட் எனத்…
Read More
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

அபுதாபியில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) சார்பில் நடக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் வரும் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் நடக்குது. இந்த விழாவை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிசேக் பச்சன் இருவரும் தொகுத்து வழங்குகின்றனர். இதில் சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன், அனில் கபூர், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபங்கள் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்திய திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த விருதை வழங்குவதாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி தெரிவித்துள்ளது . நடிகை ஜெனிலியா…
Read More
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

*சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் 'மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!* நிகழ்வில் கலந்து கொண்ட கதாநாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது, "ஆதி சார் பயங்கர ஃப்ரண்ட்லி மற்றும் சப்போர்ட். காட்சிகளில் ஏதாவது குழப்பம் இருந்தால் அவரிடம் கேட்பேன். நடிப்பதற்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருந்தார். இயக்குநர் சரவணனும் அப்படித்தான்". நடிகர் வினய் பேசியதாவது, "இந்தப் படம் எனக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்தது. சில வருடங்களுக்கு முன்பு சத்ய ஜோதி பிலிம்ஸில் நான் ஒரு படம் நடித்து இருந்தேன். ஹிப்ஹாப் ஆதி குறித்தும் எனக்கு தெரியும். அதுவும் இல்லாமல் இது ஒரு சூப்பர் ஹீரோ படம். முதல் நாள் நான் படப்பிடிப்பிற்கு சென்றபோது இயக்குநர் சரவணன் மற்றும் ஆதிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரியை பார்த்தேன். அப்போதே இந்த படம் சூப்பர் ஹிட் என எனக்கு தெரிந்து விட்டது. இது…
Read More