தமிழ் சினிமாவின் தந்தை  என்று கூறப்படும் R நடராஜ முதலியார்!

தமிழ் சினிமாவின் தந்தை என்று கூறப்படும் R நடராஜ முதலியார்!

தமிழகத்திற்கு 5 முதலமைச்சர்களைக் கொடுத்த தமிழ் சினிமாவின் தந்தை யார் என்றே நம்மில் பலருக்குத் தெரியாது. அவர் பெயர் R நடராஜ முதலியார்!  இந்தியாவின் முதல் மவுனப் படமான ‘ஹரிச்சந்திரா’ துண்டிராஜ் கோவிந்த பால்கே என்ற மராட்டியரால் 1913-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதை வாங்கி பாம்பே காரனேஷன் தியேட்டரில் வெளியிட்டவர் இந்திய சினிமாவின் தந்தை எனப் புகழப்படும் தாதா சாகிப் பால்கே. பம்பாயில் திரையிடப்பட்ட அடுத்த ஆண்டே மதராஸுக்கு வந்த ‘ஹரிச்சந்திரா’, கெயிட்டி தியேட்டரில் 1914-ம் ஆண்டு திரையிடப்பட்டது. அதைக் காண வந்தார் 29 வயதே நிரம்பிய இளைஞரான ஆர். நடராஜ முதலியார். புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலையில் கார் கம்பெனி நடத்திவந்த அவரை அந்தப் படம் பெரிதும் பாதித்தது. ஆங்கிலேய வியாபாரிகள் நடத்திவந்த ‘அடிசன் & கம்பெனி’ என்ற கார் விற்பனை கடை மட்டுமே அன்று மதராஸில் இருந்த நிலையில் ஆங்கிலேயர் அல்லாத ஒருவரால் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கார் ஷோரூம் நடராஜ…
Read More
‘ தீரன் அதிகாரம் ஒன்று’  விஷுவல் ட்ரீட் – சொல்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்  !!!

‘ தீரன் அதிகாரம் ஒன்று’ விஷுவல் ட்ரீட் – சொல்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் !!!

நேற்று வெளியான காற்றுவெளியிடை திரைப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று சாதனைகளை ஒரு பக்கம் படைத்து வரும் வேளையில், கார்த்தி “சதுரங்க வேட்டை“ புகழ் வினோத் இயக்கிவரும் “தீரன் அதிகாரம் ஒன்று“ திரைப்படத்தின் படபிடிப்பில் கார்த்தி கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இப்படத்தின் படபிடிப்பு “ ஜெய்சல்மர் “ பகுதியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து “பூஜ்“ பகுதியில் தொடர்ந்து 20 நாட்கள் படபிடிப்பு நடைபெறும். யதார்த்தமான லோக்கேஷனாக இருப்பதால் இப்பகுதியில் படபிடிப்பு நடத்துவதாக ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் கூறினார். எங்கள் கதைக்கு என்ன தேவையோ அது எங்களுக்கு இங்கே சரியாக கிடைத்துள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வருகிறது. “பூஜ்” பகுதியில் ஆக்சன் காட்சிகளை பரபரப்பாக படமாக்கவுள்ளோம். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயனின் ஸ்டன்ட் அமைப்பில் “ஹை வே“ ஆக்சன் காட்சி ஒன்றும் “பூஜ்” பகுதியில் நடைபெறவுள்ள படபிடிப்பில் படமாக்கப்படவுள்ளது. மொத்தம். இங்கே 40 நாட்கள்…
Read More
பேயுடனும், நாயுடனும் ரொமான்ஸ் செஞ்சவன் ஐஸ்வர்யாவுடன் ரொமான்ஸ்! – சிபி மகிழ்ச்சி

பேயுடனும், நாயுடனும் ரொமான்ஸ் செஞ்சவன் ஐஸ்வர்யாவுடன் ரொமான்ஸ்! – சிபி மகிழ்ச்சி

சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும்  'கட்டப்பாவ காணோம்'. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி,  'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று  வெளியாகின்றது. இந்த படத்தை 'ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. சாந்தினி  தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, திருமுருகன், ஜெயக்குமார், லிவிங்ஸ்டன், சித்ரா லக்ஷ்மன், 'டாடி' சரவணன், பேபி மோனிக்கா மற்றும் சேது ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கட்டப்பாவ காணோம்' படத்தில், ஒளிப்பதிவாளராக ஆனந்த் ஜீவா, இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, கலை இயக்குநராக எம் லக்ஷ்மி தேவ், பாடலாசிரியர்களாக…
Read More
“விழித்திரு படத்தை விடியல் ராஜு எப்படி வாங்கினார் தெரியுமா? – இயக்குநர் மீரா கதிரவன் நெகிழ்ச்சி!

“விழித்திரு படத்தை விடியல் ராஜு எப்படி வாங்கினார் தெரியுமா? – இயக்குநர் மீரா கதிரவன் நெகிழ்ச்சி!

கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம்   'விழித்திரு'. ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இயக்குநர் மீரா கதிரவன் உருவாக்கி  இருக்கும் இந்த விழித்திரு படத்தை 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.  விழித்திரு படத்தின் விநியோக உரிமையை 'சவுந்தர்யன் பிச்சர்ஸ்' சார்பில் வாங்கி இருக்கும் விடியல் ராஜு, இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. 'விழித்திரு' திரைப்படத்தில்  டி.ராஜேந்தர், சுப்ரமண்ய நந்தி மற்றும் தமயந்தி எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம். அது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் முதல் முறையாக  டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி,ஜி.வி. பிரகாஷ்குமார், சந்தோஷ் நாராயணன், எஸ்.எஸ்.தமன்,சி.சத்யா,அல்ஃபோன்ஸ் என ஏழு இசையமைப்பாளர்கள்  இந்த 'விழித்திரு' படத்தில்  ஆறு பாடல்களைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.   விஜய் மில்டன், ஆர்.வி,சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த…
Read More
புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடி திருட்டுக் கும்பல்! -ஏமாந்த தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை!

புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடி திருட்டுக் கும்பல்! -ஏமாந்த தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை!

தனது கே.3 சினி கிரியேஷன்ஸ் சார்பில் 'திட்டிவாசல்' என்கிற படத்தை எடுத்து முடித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ்ராவ். இப்படத்தை அறிமுக இயக்குநர் மு.பிரதாப் முரளி இயக்கியுளார். நாசர், மகேந்திரன், தனிஷ்ஷெட்டி, வினோத்குமார், தீரஜ் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாகூட அண்மையில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பாடல்களை வெளியிட்டார். யூடிவி' தனஞ்ஜெயன், நடிகர் எஸ்.வி.சேகர் பெற்றுக் கொண்டனர். காடும் காடு சார்ந்த நல்ல கதை என்பதால் நடிகர் நாசர் சிரமப்பட்டுத் தேதி கொடுத்து நடித்ததாக இப்படத்துக்குப் பாராட்டு வழங்கியுள்ளார். அப்படிப் பட்ட ஒரு படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளரைப் பண மோசடி செய்து ஏமாற்றியிருக்கிறார் மோசடி ஆசாமி ஒருவர். இதோ தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ்ராவ் அதைப் பற்றிப் பேசுகிறார். ''என் பெயர் ஸ்ரீனிவாஸ்ராவ் .நான் கன்னடத்தில் தெலுங்கில் சில படங்களைத் தயாரித்திருக்கிறேன்.தமிழ்ப்படங்கள் பற்றி எனக்கு மரியாதை உண்டு. எனவே தமிழ்த் திரையுலகில் கால்பதிக்க ஆர்வமாக இருந்தேன் . தமிழில்…
Read More
பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & ஜோதிகா நடிக்கும் “நாச்சியார்” பட பூஜை ஆல்பம்!

பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & ஜோதிகா நடிக்கும் “நாச்சியார்” பட பூஜை ஆல்பம்!

ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கும் ‘நாச்சியார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியாகி, சமூக வலைத்தளங்களை பரபரப்புக்கு ஆளாக்கியது. இந்நிலையில்,  நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.  படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை யடுத்து, இப்படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ‘நாச்சியார்’ என்ற கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க விருக்கிறாராம். முழுக்க முழுக்க அவரை மையப்படுத்தியே இந்த கதை நகரவுள்ளதாம். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விரைவில், இப்படத்தில் நடிக்கவுள்ள மேலும் நடிகர், நடிகையர் விவரங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.
Read More
கோலிவுட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’

கோலிவுட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’

தமிழ் சினிமாவின் கருவறை ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’. சென்னையில் மையம் கொண்டு இன்று ஆஸ்கர் வரை ஆழப்பாய்ந்து புதுமைகளால் வியக்க வைப்பதில் தமிழ் சினிமாவுக்கு தனி இடம் உண்டு. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சினிமாத்துறையின் அத்தனை புதுமைகளையும் அரை நூற்றாண்டுக்கு முன்பே பரீட்சித்துப் பார்த்தது. முதல் பேசும் படம், முதல் ஜாவா கலர் படம், முதல் திகில் படம், முதல் சமூகப் படம், முதல் இரட்டை வேடம், முதல் விளம்பரப் படம், தமிழகத்தின் முதல் ஆங்கிலப் படம் என்று அத்தனை சாதனைகளுக்குமான முதல் விதை இங்குதான் விதைக்கப்பட்டது. இன்றைய சினிமா பெண்ணை வணிகப் பொருளாக பயன்படுத்தி வரும் நிலையில் சினிமாவின் துவக்க காலம் வேறு மாதிரியாக இருந்தது. பெண்கள் சினிமாவில் கால் பதிக்க வருவதே சாதனையாக பார்க்கப்பட்ட அந்தக் காலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் பெண்களுக்கு சம உரிமை அளித்தது. பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து கண்ணியம் போற்றி பெருமை சேர்த்துள்ளது. சேலம்-ஏற்காடு சாலையில் 1935ல்…
Read More
காதலை கவித்துவமாக கூறும் “ஏனோ வானிலை மாறுதே”

காதலை கவித்துவமாக கூறும் “ஏனோ வானிலை மாறுதே”

வெளியான நாள் முதல் யூ டியுபில் தொடர்ந்து முதல் #10 Trendingக்குள் வலம் வந்த Youthful Magic "ஏனோ வானிலை மாறுதே" குறுத்திரை படத்தை வெள்ளித்திரை தரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி ரசனையாக இயக்கியுள்ளார் இயக்குனர் புனித். ஒவ்வொரு  Shotம்  Sweetஅஹ் Cuteஅஹ் கண்ணுக்கு குளிர்ச்சியா ஒளிப்பதிவு செய்துள்ளார் வினோத்ராஜேந்திரன். புனித்தின் கதை களத்திற்கும் வினோத்தின் ஒளிப்பதிவிற்கும் இணைந்து காவியமாய்  அமைந்துள்ளது.சிந்துகுமாரின் இசை. தமிழ்குமரனின் எடிட்டிங் ஏனோ வானிலை மாறியதை எதார்த்தமாய் காட்யிருக்கிறது. இந்த ஒட்டு மொத்த குழுவின் உன்னத உழைப்பு மக்களின் ஆதரவிலும் படத்தின் தரத்திலும் தெரிகிறது. இன்று இணையத்தை  ஆட்கொண்டிருக்கும்  "ஏனோ வானிலை மாறுதே" இளைஞர்கள்   மனதில்  "அழகாய் காதல் தூதே" ஏனோ வானிலை மாறுதே குறும்படம்  தலர்களை  காதலுக்கும் கடத்தி செல்லும் கவிதை.வெளியிட்டதிலிருந்து 9 நாட்களில்  18 லட்சத்திற்கும் மேல் பார்வை களை   பெற்றுள்ள ஏனோ வானிலை மாறுதே,  இன்னும் ஒரு நாளிள் அது 20 இலட்சம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதலும் காமெடியும் கலந்த கதம்பம், இந்த மாதிரி ஒரு காதல் நம்ம வாழ்க்கையிலும் வரனும்னு ஆசைப்படுற அளவுக்கு அழகாய் இருக்கிறது படம். பேபி மனுஸ்ரீ கொஞ்சி கொஞ்சி நடிச்சிருக்காங்க, நக்ஷத்த்ராவும் அருணும் காதலை கண்ணியமா பிடிச்சிருக்காங்க. எப்ப வரும் எப்படி  வரும்னு தெரியாத காதலை இந்த படம் Youtube ல் வந்து அழகாய் சொல்லிருக்கு. காதலை கண் குளிரும் தரத்தில், காதலை காதலின் நிறத்தில், சொல்லிய அழகிய குறும்படம் "ஏனோ வானிலை மாறுதே" நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் விவரங்கள் :- நடிப்பு  : அருண், நக்ஷத்ரா நாகேஷ், கல்லூரி மதன் எழுத்து & இயக்கம் : புனித் இசை : சித்துகுமார் ஒளிப்பதிவு : வினோத் ராஜேந்திரன் படத்தொகுப்பு : தமிழ் குமரன் பாடல்கள் : அஜித் சாய் , விக்னேஷ் ராமகிருஷ்ணன் Vfx - Naren And Manikanda Prabhu Design - Yuvaraj and Saba Singers - Rahul Hariharan, Ananthu Nair , Joe Yamini G Mixed and Mastered - Abin Pushpakaran Helicam - Anand Light Unit - Raj…
Read More