பத்திரிகையாளர் ஏக்நாத்தின் பாடல்  ஐஃபா 2017 சர்வதேச விருதுக்கு பரிந்துரை!

பத்திரிகையாளர் ஏக்நாத்தின் பாடல் ஐஃபா 2017 சர்வதேச விருதுக்கு பரிந்துரை!

விஜய் ஆன்டனியின் பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாட்டு 'நூறு சாமிகள் இருந்தாலும்....' பாடல் இன்னமும் கூட பலரது காலர் ட்யூனாக மனதை இதமாக்கிக் கொண்டுள்ளது.இந்தப் பாடலுக்கு இப்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2017-ம்இ ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கான (IIFA Awards 2017) பரிந்துரைகளில் இந்தப் பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுடன் போட்டியிடும் மற்ற பாடல்கள்: நெருப்புடா நெருங்குடா... (அருண்ராஜா காமராஜ் - கபாலி) இது கதையா... (பார்த்தி பாஸ்கர் - சென்னை 28 II) தள்ளிப் போகாதே (அச்சம் என்பது மடமையடா), நீயும் நானும்.. (நானும் ரவுடிதான்) - கவிஞர் தாமரை. பாடலாசிரியர் ஏக்நாத் இதற்கு முன் ஏராளமான பாடல்களை, பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எழுதியுள்ளார். நீயும் நானும்... (மைனா) கண்ணிரெண்டில் மோதி நான் விழுந்தேனே... (உத்தமபுத்திரன்) குக்குறுகுக்குறு... (ஒரு ஊர்ல ரெண்டு ராஜா) யாரோ யாரோ... (மீகாமன்) தேகம்…
Read More
நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி வெளியிட்ட ‘மாம்’

நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி வெளியிட்ட ‘மாம்’

தமிழ் தெலுங்கு ஹிந்தி என முன்று மொழிகளில் நடிகை ஸ்ரீதேவி நடிக்கும் மாம் (அம்மா)  ஏ.ஆர். ரஹமான் இசையமைக்கிறார் பல படங்களில் தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் வசீகரித்தவர் நடிகை ஸ்ரீதேவி. பல நடிகர் நடிகைகளின் கனவாக திகழும் ஸ்ரீதேவி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறுது காலம் ஒய்வு கொடுத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, 'புலி'  படங்களின் மூலமாக தனது நடிப்புக் கலையை தொடர்ந்த ஸ்ரீதேவி, தற்போது "மாம்" (அம்மா) எனும் படத்தில் முன்னனி கதாபத்திரத்தில் நடிக்கின்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க அறிமுக இயக்குனர் ரவி உதயவார் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியுடன், அக்ஷய் கண்ணா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்…
Read More
பத்மாவதி படக்குழு மீது மீண்டும் தாக்குதல்; ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தீ வைப்பு!

பத்மாவதி படக்குழு மீது மீண்டும் தாக்குதல்; ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தீ வைப்பு!

ஜெய்ப்பூரை அடுத்து  மகாராஷ்டிரா மாநிலத்திலும், பத்மாவதி படப்பிடிப்புத் தளத்திற்கு தீ வைத்து எரித்த கும்பல் ஒன்று, அங்கிருந்த படக்குழுவினரையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ரண்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பில் பத்மாவதி என்ற வரலாற்றுத் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம், முகாலய அரசன் அலாவுதீன் கில்ஜி, ராஜபுத்திர ராணி பத்மாவதி மீது ஒருதலை காதல் கொண்டு, அவரை அடைவதற்காக, போர் செய்த வரலாற்றுச் செய்தியை கதையாகக் கொண்டுள்ளது. ஆனால், இந்த படத்தை எடுக்க, ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் பத்மாவதி படத்திற்கு செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டு வந்தது. ஆனால், அங்கு திடீரென வந்த வன்முறையாளர்கள், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து, அங்கிருந்து படப்பிடிப்புத் தளம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. அங்குள்ள கோலாப்பூர்…
Read More
மரகத நாணயம் ஆடியோ ரிலீஸ் + ஆல்பம்+ ஸ்பாட் நியூஸ்!

மரகத நாணயம் ஆடியோ ரிலீஸ் + ஆல்பம்+ ஸ்பாட் நியூஸ்!

கற்பனை, சாகசம் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'மரகத நாணயம்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மார்ச் 15 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் ராம்குமார், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதுமட்டுமின்றி ஐந்து சிறந்த அறிமுக இயக்குநர்கள் - விஜயக்குமார் (உறியடி), இயக்குநர் நெல்சன் (ஒரு நாள் கூத்து), இயக்குநர் கார்த்திக் நரேன் (துருவங்கள் 16), இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (ரெமோ) மற்றும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்) ஆகியோருக்கு 'மரகத புதையல்' ஒன்றை அளித்து, அவர்களை கௌரவித்தார் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு. விமர்சையாக நடைபெற்ற மரகத நாணயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு, இயக்குநர் ஏ ஆர் கே…
Read More
விஜய் மில்டனின் ‘கடுகு’ ஆடியோ வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்!

விஜய் மில்டனின் ‘கடுகு’ ஆடியோ வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்!

"கடுகு" திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சூர்யா பாடல்கள் குருந்தகடை வெளியிட, கருணைவேல் - சொர்ணலட்சுமி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். இந்த மூவரும் தங்களது சேவைகள் மூலம் மக்களை ஈர்த்தவர்கள் ஆவார். சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அண்ணாதுரை, தனது ஆட்டோவில் வைபை உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்களை வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தவர் ஆவார்.சென்னை, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த போக்குவரத்து காவலரான குமார், பலவிதமான நடன அசைவுகளின் மூலமாக போக்குவரத்தை சீர் செய்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர்.கருணைவேல் - சொர்ணலட்சுமி தம்பதி ஈரோடு மாவட்டம் பெருந்துரை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது வீட்டில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்த ஓட்டலில் சாப்பிடுபவர்களிடம் பணம் ஏதும் வசூலிக்க மாட்டார்கள். சாப்பிடுபவர்கள் விரும்பும் தொகையை கொடுத்துவிட்டு செல்லலாம். கோவில் போல சேவையாக இவர்கள் நடத்தும் இந்த ஓட்டலில் 26 வகையான உணவு…
Read More
ரஜினி-யின் 2.0 திரைப்பட டி.வி. ரைட்ஸ்  ரூ 110 கோடி மட்டுமே?!

ரஜினி-யின் 2.0 திரைப்பட டி.வி. ரைட்ஸ் ரூ 110 கோடி மட்டுமே?!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.0. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 450 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான் என்பது உறுதியான தகவல். அதேசமயம் ஆசிய அளவில் அதிக பட்ஜெட்டில் உருவான படங்களில் இதுவும் ஒன்றாம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 90% நிறைவடைந்துள்ளதாம். இதை ஷங்கரே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பாடல் மற்றும் பேட்ச் வர்க் மட்டுமே மீதியுள்ளதாம். இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் மட்டும் ரூ. 110 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஜீ தொலைக்காட்சி நிறுவனம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கும் சேர்த்து இந்த டீலை முடித்திருக்கிறதாம்.இந்த தகவலை தயாரிப்பு நிர்வாகி ராஜூ மகாலிங்கமும் உறுதிப்படுத்தி உள்ளார்
Read More
”மகளிர் மட்டும்” இயக்குநர் பிரம்மா  பேட்டி!

”மகளிர் மட்டும்” இயக்குநர் பிரம்மா பேட்டி!

‘மகளிர் மட்டும்’ எமோஷனலான திரைப்படம். படத்தின் ஒவ்வொரு ஃபிரேம்மையும் நீங்க சிரிச்ச முகமாகவே பார்த்து என்ஜாய் பண்ணுவீங்க என்கிறார் இயக்குநர் பிரம்மா.  ‘மகளிர் மட்டும்’  கதை ரெடியானதும் ஜோதிகாவுக்கு பொருத்தமான கதையா இருந்துச்சு. அவங்ககிட்ட கதை சொல்லும் போது, சில இடங்கள்ல சீரியஸா கேட்டாங்க. நிறைய இடங்கள்ல சிரிச்சாங்க. அப்பவே எனக்கு கான்பிடன்ட் வந்திடுச்சு. அடுத்து சூர்யா சார்கிட்ட கதையை சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. ‘2டி’லேயே பண்ணிடலாம்’னு உற்சாகப்படுத்தினார். ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன்னு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை. ‘மகளிர்மட்டும்’ டைட்டில் கிடைச்சா ரீச் அதிகமா இருக்கும்னு நினைச்சேன். சூர்யா சார் உடனே கமல் சார்கிட்ட பேசி, இந்த டைட்டிலை வாங்கிக் கொடுத்தார். இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாசர் சார், லிவிங்ஸ்டன், பாவல், கோகுல்நாத் தவிர நிறைய புதுமுகங்கள் இருக்காங்க. முதல் படத்துல ரிகர்சல் சாத்தியமாச்சு. இந்தப் படத்துலேயே ஒரு மாசம் workshop வச்சிருந்தேன். இந்த மாதிரி…
Read More
‘கட்டப்பாவ காணோம்’  எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஒரு திரைப்படம்” – ஐஸ்வர்யா ராஜேஷ்

‘கட்டப்பாவ காணோம்’ எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஒரு திரைப்படம்” – ஐஸ்வர்யா ராஜேஷ்

சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி, 'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படத்தை வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று 'ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. 'கட்டப்பாவ காணோம்' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது தான் எனக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே இந்த படத்தை நான் மிகவும் அதிர்ஷ்டமான திரைப்படமாக கருதுகின்றேன். சிபிராஜ் மற்றும் இயக்குநர் மணி சேயோன் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்து இருக்கின்றது. இதுவரை நான் நடித்த…
Read More
குழந்தைகளால் தொடங்கி வைக்கப்பட்ட அறக்கட்டளை !

குழந்தைகளால் தொடங்கி வைக்கப்பட்ட அறக்கட்டளை !

குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும்"நாரோ மீடியா " என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  குழந்தைகளின் நல வாழ்விற்காக அதிலும் குறிப்பாக எய்ட்ஸ் என்கிற உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, கிரிக்கெட் உள்பட பல விதமான நல நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை இவர்கள் நடத்தியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக மனிதம் ஃபவுண்டேசன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதியிலிருக்கும் ஏழைக் குழந்தைகள் பயன் பெறவிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் அனைத்து பெண் குழந்தைகளும்,சாதி, சமய மற்றும் நிற வேற்றுமைகளைக் கடந்து, பயன்பெறும் வகையில் செயல்படத் திட்டமிட்டிருக்கிறார்கள். அத்துடன் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்களின் குழந்தைகளுக்கும் தேவையான உதவிகளை வழங்கவும் தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில், மிராக்கிள் பிலிம்ஸ் என்கிற பட நிறுவனம் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு படமாக தயாரித்த ‘நிசப்தம்’ படத்தினை, எட்டு வயது முதல் பதினைந்து…
Read More
ஆட்சியை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் ! – கமல் பேட்டி

ஆட்சியை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் ! – கமல் பேட்டி

தனியார் தமிழ் தொலைகாட்சி ஒன்றிற்கு நேற்று கமல் அளித்த பேட்டியில், நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக மட்டுமே என்னால் இருக்க முடியாது என்று கூறிய கமல்ஹாசன் அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்றார். அரசியல் வர்த்தகமாகிவிட்டது. எளிமையான அணுகுமுறையுடன் கூடிய தலைவர்கள் தற்போது தேவைப்படுகிறார்கள். அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் தனது முதல் தகுதி என்றும் குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது எரிமலையின் ஒரு நுனிதான். நான் வரி கட்டுகிறேன். ஊழலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அதை தைரியமாக சொல்வேன். ஊழல் என்பது வாக்காளர்களிடமிருந்தே தொடங்குவதாகக் கூறிய கமல்ஹாசன், வாக்குகளை விலைபேசும்போது கேள்விகளை எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன். காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும். மக்களின் தேவைக்கேற்ப பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய…
Read More