கர ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு ஸ்லோ பர்ன் திரில்லர் !!

 

கர திரைப்படம், தனுஷ் நடிப்பில் போர்த்தொழில் புகழ் விக்னேஷ் ராஜா இயக்கிஇயிருக்கும் ஒரு வித்தியாசமான ஹாலிவுட் ஸ்டஇல் திரில்லர் படம்.

1990களின் பின்னணியில் விவசாயிகள் சந்திக்கும் கடன் சுமை, குடும்ப பாசம், மனிதர்களின் அவசர முடிவுகள் போன்ற உண்மையான வாழ்க்கை பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நகரும் இந்த படம், ஒரு சாதாரண கதையை உணர்ச்சியுடன் கலந்து திரில்லராக சொல்ல முயற்சிக்கிறது.

ஹாலிவுட்டில் அதிக டிராமா கலந்து சொல்லப்படும் ஸ்லோ பர்ன் திரில்லர் வகையை தமிழில் முயற்சித்திருக்கிறார்கள். இந்த புதிய ரசிகர்களுக்கு புரிய நேரம் எடுத்துக் கொண்டாலும் இறுதியில் மிக அட்டகாசமான திரை அனுபவமாக அமைந்து விடுகிறது.

இந்த படத்தின் மிகப்பெரிய பலம் தனுஷின் நடிப்பே. அவர் “கரசாமி” கதாபாத்திரத்தில் நடித்திருக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். அப்பா–மகன் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் மிகவும் தாக்கம் ஏற்படுத்துகின்றன. ரசிகர்களும் விமர்சகர்களும் கூட அவரது intense performance-ஐ பெரிதும் பாராட்டியுள்ளனர். இதில் தன்னையே ஒரு நடிகராக அவர் புதுப்பித்து கொண்டிருக்கிறார்.

துணை நடிகர்களில் K. S. ரவிக்குமார் அப்பாவாக கவர்கிறார். சுராஜுக்கு தனுஷுக்கு இணையான வேடம் அதை சிறப்பாக செய்திருக்கிறார். கருணாஸ் உட்பட துணை கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். மமிதா பைஜு வித்தியாசமான கிராமத்து தோற்றத்தில் தோன்றினாலும், அவருக்கு திரைக்கதையில் அதிக இடம் இல்லை என்ற குறை இருந்தாலும், அவர் நடிப்பு கதைக்கு உதவுகிறது.

கதையின் ஆரம்பம் மிகவும் பரபரப்பாக தொடங்கி, பார்வையாளர்களை உடனே கதைக்குள் இழுக்கிறது. வங்கி கொள்ளை, போலீஸ் விசாரணை, அதிலிருந்து தப்பிக்கும் முயற்சி போன்ற திரில்லர் அம்சங்கள் பல இடங்களில் சுவாரஸ்யத்தை உருவாக்குகின்றன. குறிப்பாக முதல் பாதியின் திரில்லர் அம்சங்கள் இரண்டாம் பாதியில் நிறைய சுவாரஸ்யங்களை தந்து அதிகம் ஈர்க்கிறது.

படத்தின் உணர்ச்சி அம்சமும் முக்கியமான பலமாக இருக்கிறது. தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் மகனின் வலி, விவசாயிகளின் நிதி சிக்கல்கள் போன்றவை கதைக்கு ஒரு வலுவான அடித்தளத்தை தருகின்றன. இதனால் படம் ஒரு சாதாரண திரில்லராக இல்லாமல், மனதைத் தொட்டுச் செல்லும் அனுபவமாக மாறுகிறது.

இசை மற்றும் பின்னணி இசையில் G. V.பிரகாஷ் தனது பங்கினை நன்றாக செய்துள்ளார். பாடல்கள் மற்றும் BGM சில முக்கிய காட்சிகளில் உணர்ச்சியை உயர்த்துகின்றன .

மொத்தத்தில், கர ஒரு முழுமையான மாஸ் படம் அல்ல. ஆனால் ஒரு உணர்ச்சி மிகுந்த, மெதுவாக நகரும், வாழ்க்கை சார்ந்த கதையை கொண்ட அழகான படம்.

சில குறைகள் இருந்தாலும், தனுஷின் ஆழமான நடிப்பு, வலுவான உணர்ச்சி, மற்றும் சுவாரஸ்யமான திரில்லர் தருணங்கள் இணைந்து, இந்த படத்தை ஒரு பார்க்க வேண்டிய நல்ல அனுபவமாக மாற்றுகின்றன. 👍

Rating ⭐⭐⭐⭐☆ (4/5)