துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

 

முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் (Jom Varghese) Wayfarer Films  சார்பில்  பெரும் பொருட்செலவில் தயாரிக்கும்  இப்படத்தை, நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) இயக்குகிறார்.

இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா (Sajeer Baba) , இஸ்மாயில் அபூபக்கர் (Ismail Aboobacker), பிலால் மொய்து (Bilal Moidu ) எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன் (Adarsh Sukumaran) , ஷஹபாஸ் ரசீத் (Shahabas Rasheed) ஆகியோர் எழுதியுள்ளனர்

‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்துக்கான மற்ற நடிகர்களின் போஸ்டர்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தன. இப்போது துல்கர் சல்மானின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியாகியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.

பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இந்த அதிரடி திரில்லர்  திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படம் துல்கர் சல்மானின் 40வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டனி வர்கீஸ், தமிழின் முன்னணி இயக்குநர்  மிஷ்கின், கதிர், பார்த் திவாரி  மற்றும் தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை, கபாலி, KGF, கைதி, விக்ரம், லியோ, சலார் போன்ற பான்–இந்தியா படங்களில் பணியாற்றிய அன்பறிவு மாஸ்டர்ஸ் வடிவமைக்கின்றனர். ‘RDX’ படத்தின் பிரமாண்டமான ஆக்சன் வெற்றிக்கு பிறகு, நஹாஸ் மற்றும் அன்பறிவு கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு  ஏற்பட்டுள்ளது.

தொழில் நுட்ப குழு விபரம்

ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித்
இசை – ஜேக்ஸ் பெஜாய்
படத்தொகுப்பு – சமன் சக்கோ
தயாரிப்பு வடிவமைப்பாளர் – அஜயன் சாலிசேரி
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர
ஆடை – மாஷர் ஹம்சா
புரொடக்ஷன் கன்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன்
இணை இயக்குநர் – ரோஹித் சந்திரசேகர்,
பாடல் வரிகள் – மனு மஞ்சித் , விநாயக் சசிகுமார்
VFX –  . தௌஃபீக் (எக்வொயிட்) (Taufeeq – Eggwhite)
போஸ்டர் டிசைன் – டென் பாயிண்ட்
சவுண்ட் டிசைன் – சிங்க் சினிமா
சவுண்ட் மிக்ஸிங் – கண்ணன் கணபத்
ஸ்டில்ஸ் – எஸ்.பி.கே
மக்கள் தொடர்பு – யுவராஜ்

 

Related posts:

ZEE5-ல், வெற்றிபெற்ற  “மிடில் கிளாஸ்” திரைப்படம்,  வரும் டிசம்பர் 24 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!

December 23, 2025

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் பட டீஸரை வெளியிட்டார் பாலா!

April 28, 2024

விஜய் ஆண்டனி சார் படத்திற்கு இசையமப்பது பெருமை ! வள்ளி மயில்” திரைப்பட டீசர்  வெளியீட்டு விழாவில் இச...

November 30, 2023

மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய படமான டைகர் நாகேஸ்வர ராவ்' படத்தின் டீஸர் வெளியானது!

August 18, 2023

புளூ சட்டையை போட்டுட்டு வந்து உன் படத்தை என்ன பண்றேன் பார் ; மாறனை அலறவைத்த பாரதிராஜா

October 9, 2021

”கட்சியாட்கள் எங்களை மிரட்டினார்கள்”! 'கற்பு பூமி' திரைப்பட பாடல் வெளியீட்டு நிகழ்வில் நக்கீரன் கோபா...

February 25, 2024