இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், அபிராமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து இருக்கும் ஜாலியோ ஜிம்கானா படம்.
இயக்குநர் சக்தி சிதம்பரம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படங்களையே இதுவரை தந்துள்ளார். அவருக்கு தீவிரமான கதை சொல்லல் பாணியெல்லாம் சரி பட்டு வராது. முழுக்க முழுக்க கலாட்டா காமெடியுடன் சிரிக்க சிரிக்க கதை சொல்லி அசத்தி விடுவார். அந்த வகையில் இந்த படம் திருப்தி செய்கிறதா ?
படத்தில் பவானியின் குடும்பம் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு எம்.எல்.ஏவிடமிருந்து ஒரு பெரிய ஆர்டர் கிடைக்கிறது. அதை இவர்களும் சிறப்பாக செய்து கொடுக்கிறார்கள். அதை அதற்கான பணத்தை கொடுக்காமல் எம்எல்ஏ ஆட்கள் ஏமாற்றுகிறார்கள். இதைக் கேட்க போன பவானியின் தாத்தாவையும் அவர்கள் தாக்கி விடுகிறார்கள். இதனால் பவானியின் தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும், பவானியின் தாத்தா ஹாஸ்பிடலில் இருப்பதால் இவர்களால் கடையை நடத்த முடியாமல் தவிக்கிறார்கள். உடனே தாத்தா, வழக்கறிஞர் பூங்குன்றனை சந்தித்து பிரச்சனையை சொல்ல சொல்கிறார். ஆனால், அங்கு அவரை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். அந்த கொலை பழி தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற பயத்தில் அவருடைய உடலை மறைத்து வைக்க பவானி குடும்பம் முயற்சிக்கிறது. இது தான் படத்தின் கதை
ஆட்டத்தில் மாஸ் காட்டும் பிரபுதேவா இப்படம் முழுதும் சடலமாக நடித்திருக்கிறார். ஆனால் தனக்கு கொடுத்த வேலையை கணக்கச்சிதமாக பிரபுதேவா செய்து அசத்தியிருக்கிறார்.
ஜான் விஜய், ரோபோ சங்கர், எம்எஸ் பாஸ்கர் எல்லோருமே சிரிக்க வைக்க ரொம்பவே மெனக்கட்டு இருக்கிறார்கள். நாயகி மடோனா அவருக்கு தந்த ரோலை சிறப்பாக செய்துள்ளார். அபிராமி நடிப்பு அருமையாக வந்துள்ளது. மடோனாவை விட அபிராமி தான் படத்தின் பல இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
அஸ்வின் விநாயகமூர்த்தியின் உடைய இசை சிறப்பு. சர்ச்சையை கிளப்பிய போலீஸ்காரனா கட்டிக்கிட்டா பாடல் எல்லோரையும் ஆட்டம் போட வைத்திருக்கிறது. யோகிபாபு காமெடி வழக்கம் போல் ஒர்கவ்யுட் ஆகியுள்ளது.
சக்தி சிதம்பரம் படங்களில் லாஜிக் வேலை செய்யாது அவர் சொல்ல வரும் மேஜிக்கை ரசித்தால் வயிறு வலிக்க சிரிக்கலாம், இந்தப்படமும் அந்த வகை தான். திரைக்கதை சொதப்பலாக நகர்ந்தாலும் காமெடி காப்பாற்றுகிறது. காமெடி பட ரசிகர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்.