விஜய் டிவி பிரபலமான நடிகர் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

விஜய் டிவி பிரபலமான நடிகர் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  J4 ஸ்டூடியொஸ் சார்பில் T ஜெபா ஜோன்ஸ் மற்றும் S. ராஜரத்தினம் தயாரிப்பில், இயக்குநர் J சுரேஷ் இயக்கத்தில், குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஜூ கீப்பர். ஒரு புலி வளர்க்கும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, ஒரு அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு புதங்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நாயகி ஷ்ரீன் பேசியதாவது.. இந்தப்படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. என்னை நம்பி வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனருக்கு என் நன்றிகள். புகழ் வாழ்த்துக்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. இயக்குநர் சுரேஷ் பேசியதாவது.. இப்படத்தை சிறப்பாக கொண்டுவரக் காரணமாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு என் முதல் நன்றிகள். சூரி என் நண்பர் மிக மிக அடக்கமானவர்…
Read More
விஜய் டிவி புகழ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘துடிக்கிறது மீசை’ படத்தின் தொடக்க விழா!

விஜய் டிவி புகழ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘துடிக்கிறது மீசை’ படத்தின் தொடக்க விழா!

  யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் 'துடிக்கிறது மீசை' படத்தின் தொடக்க விழா இன்று ஆம்ப்பில் யார்டு ஓட்டலில் பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இப்படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி புகழ்,முருகதாஸ், சந்தானம் படங்களின் மூலம் பிரபலமான மாறன்,இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட படக்குழுவினரும் , சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் நடிகர் கே.ராஜன், நடிகர் செந்தில், இயக்குநர் பேரரசு , மது. தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.   'துடிக்கிறது மீசை'படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஜே. இளன் பேசும்போது, "நான் இயக்குநர் எஸ்.டி.சபா அவர்களிடம் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி தாணு அவர்களிடமும் பணியாற்றி சினிமாவில் பல துறைகள் பற்றியும் அறிந்து அனுபவம் பெற்று இருக்கிறேன். படத்தின் கதை என்னவென்றால்,காதல் தவறில்லை. ஆனால்,காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை வீணடிப்பதைத் தவறு என்று சொல்கிற கதை…
Read More
சபாபதி படத்தில் எங்கேயும் சந்தானம் என்ற நடிகர் தெரியவே மாட்டார்!

சபாபதி படத்தில் எங்கேயும் சந்தானம் என்ற நடிகர் தெரியவே மாட்டார்!

சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘சபாபதி’. நாளை (நவம்பர்) 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் சந்தானம் திக்கித் திக்கிப் பேசுபவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, முனீஸ்காந்த், மதுரை முத்து, ‘குக் வித் கோமாளி’ புகழ், வம்சி, சாயஜி சிண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கியுள்ளார்.  சாம்.சி.எஸ்.  இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்ய, லியோ ஜான் படத் தொகுப்பு செய்துள்ளார். ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.ரமேஷ்குமார் தயாரித்துள்ளார். மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’சபாபதி’ திரைப் படம் நாளை 19ஆம் தேதி திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் நாயகன் சந்தானம் பேசியது. ’சபாபதி’ சந்தானத்தின் படம் அல்ல, சபாபதி என்ற கதாபாத்திரத்தின் படம். இதில் எங்கேயும் சந்தானம் என்ற நடிகர் தெரியவே மாட்டார், சபாபதி என்ற கதாபாத்திரம்…
Read More