சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்க வரும் ‘கல்தா’

0
247

நம் நாட்டில் வியாதிகளுக்கு பஞ்சமே இல்லை. இந்நிலையில் அடை மாநிலங்களில் இருந்து மட்டுமில்லாமல் நம் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களில் இருந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவு களால் ஏகப்பட்ட தொற்று வியாதிகள் உருவாகின்றன் மருத்துவக் கழிவுகள் என்பது மருத்துவ மனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பிறகு, வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் ஆகும். அதாவது பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், கத்தி, ரத்தக் குழாய்கள், செயற்கை சுவாசக் குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை. சில நோய்களுக்கு உடல் உறுப்புகளையே அகற்ற வேண்டியுள்ளது. இப்படி பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகள் பெரும்பாலான இடங்களில், முறை யாக அகற்றப்படாமல் அப்படியே குப்பையில் கொட்டப்படுகின்றன. குப்பையில் சேரும் மருத்துவக் கழிவுகள் நோய் பரப்பும் கிருமிகளாக உருவெடுக்கின்றன. இதனால், ஒரு நோயாளியை குணமாக்கி யதன் காரணமாக வெளியேற்றப்பட்ட மருத்துவக் கழிவுகள் பத்து நோயாளிகள் உருவாகக் காரண மாகின்றன. இந்த அக்கிரமத்தை பற்றி பல்வேறு ஊடகங்கள் வெளிச்சமிட்டு காட்டினாலும் அவை தொடரும் நிலையில் இப்பிரச்னையை மையமாக வைத்தது ஒரு திரைப்படமே தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஆம் ‘கல்தா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இத்திரைப்படம் பெரும்பாலும் மருத்துவ கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆண்டனி(மேற்கு தொடர்ச்சி மலை) நாயகனாகவும், அய்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர் களுடன் சிவ நிஷாந்த் மற்றொரு கதாநாயகனாகவும், திவ்யா மற்றுமொரு கதாநாயகியாக வும் அப்புக்குட்டி, கஜராஜ், ராஜசிம்மன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முழுக்க சமூக சிந்தனையுடன் உருவாகி உள்ள இந்த ‘கல்தா’ திரைப்படத்தை செ.ஹரி உத்ரா இயக்கியுள்ளார். ஹரி உத்ரா இதற்கு முன்பு ‘தெரு நாய்கள்’ மற்றும் ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்துவும், வித்யாசாகரும் எழுத, தேவா, செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி, கார்த்திக் மற்றும் பலர் பாடல்களை பாட, K .ஜெய் கிரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை B .வாசு மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பினை செய்துள்ளார்.

விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் கல்தா பட இயக்குநர் செ. ஹரி உத்ரா மீடியாக்களை சந்தித்து பேசியபோது, இப்படம் ஒரு சமூக சிந்தனை கொண்ட படமாக இருக்கும். பல பத்திரிகை கள், யூ டியூப் போன்ற சேனல்கள் எடுத்துக் காட்டினாலும் தொடரும் அண்டை மாநிலங்கள் சட்ட விரோதமான முறையில் தமிழ்நாட்டில் கொண்டு வந்து கொட்டும் மருத்துவக் கழிவுகள் குறித்து இந்தப் படம் விவரிக்கிறது. இதற்கு துணை நிற்கும் சில ஊழல் அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டத் தவறவில்லை. தாங்கள் எதனால் பாதிக்கப்பட்டோம் என்பதுகூடத் தெரியாமல் மக்கள் எந்த அளவுக்கு உடல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் இப்படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

சமூக சிந்தனை கொண்ட படமாக இருந்தாலும், இப்படத்தில் நடனத்துடன் கொண்ட பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் இருப்பதால் ஒரு முழு நீள பொழுது போக்கு அம்சங்களும் நிரம்பிய திரைப்படமாக இருக்கும் அதே சமயம் எவ்வித ஆபாச காட்சிகளோ அல்லது அருவருக்கத்தக்க காட்சிகளோ இருக்காது.குடும்பத்தோடு திரையரங்கைள பார்க்கக்கூடிய திரைப்படமாக தான் இருக்கும் என்றார்.

‘கல்தா’ திரைப்படம் தற்போது தணிக்கை செய்ய அனுப்பப்பட்டு வரும்பிப்ரவரி மாதத்தில் ரிலீஸாக ஏற்பாடு நடப்பதாகவும் தெரிவித்தார்.