இயக்கம் – பிருந்தா
நடிகர்கள் – துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ்.
கதை – கணவனின் அக்கறை மிகுந்த அன்பு டார்ச்சர் தாங்காமல் அவனை கழட்டி விட, ஒரு சைக்காட்ரிஸ்ட் பெண்ணை அணுகுகிறார், அதன் பின்னால் அவர்கள் பழகுவதில் இவருக்கு பொஸஸிவ் வர என்ன நடக்கிறது.
அர்ஜெண்டினாவில் உருவாகி கொரியாவில் ரீமேக்காகி இரண்டு நாட்டிலும் சக்கை போடு போட்ட படம், தமிழ் நாட்டுக்கு ஏற்றவாறு கதையை மாற்றியது தான் இதில் பிரச்சனை
ஒரிஜினல் கதையில் பொண்டாட்டி டார்ச்சர் தங்காத கணவன் அவளை கழட்டி விட செய்யும் சேட்டைகளை இங்கு பொண்டாட்டி புருசனை கழட்டி விடுவதாக மாற்றியிருக்கிறார்கள். அதனால் லாஜிக் எதுவும் செட்டாகாமல் பல்லைக்காட்டுகிறது.
கொஞ்சி கொஞ்சி பார்த்து கொள்ளும் கணவனை எந்த மனைவி பிரிய நினைப்பாள் என்பதிலேயே லாஜிக் ஒட்டாததால் படத்தோடு நாமும் ஒன்ற முடியவில்லை. காஜல் முகம் குண்டாகி ஒரு ஜாடையாக இருக்கிறார்.
he sinamika
அதிதி அருமையாக நடித்துள்ளார். துல்கர் வழக்கம் போல் அசத்தியிருக்கிறார் ஆனால் காட்சியில் திரைக்கதையிலும் உயிர்ப்பில்லாததால் படம் ஒட்டவில்லை
மியூசிக் தனியாக கேட்க நன்றாக இருக்கிறது படத்தில் அது தேவையில்லா ஆணியாக இருக்கிறது.
கேமரா அருமை அழகான காட்சிகள் மனதை கொள்ளை கொள்கிறது.
தொழில்நுட்பத்தில் மின்னினாலும் திரைக்க்தையாய் கவரவில்லை ஹே சினாமிகா.