விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘வெங்கி 75’

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகவிருக்கும் 'வெங்கி 75' எனும் திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்துடன் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 'ஹிட்' எனும் பெயரில் வெளியான முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கி வெற்றிப் பெற்ற இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் 'வெங்கி 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் கதையின் நாயகனாக நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கிறார். 'எஃப் 3' எனும் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறார். 'ஷியாம் சிங்காராய்' எனும் திரைப்படத்தை தயாரித்த நிஹாரிகா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் 'வெங்கி 75' பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஜனவரி 25ஆம் தேதி…
Read More
த்ருஷ்யம் 2 திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

த்ருஷ்யம் 2 திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

தெலுங்கு க்ரைம்-த்ரில்லர் ’த்ருஷ்யம் 2’க்கான டிரெய்லரை Amazon Prome Video இன்று வெளியிட்டது, தெலுங்கில் வெளிவந்த வெற்றிப் படமான த்ருஷ்யத்தில் நடித்த இதில் வெங்கடேஷ் டக்குபதி தனது பாத்திரத்தை இப்படத்திலும் தொடர்கிறார். மீனா, கிருத்திகா, எஸ்தர் அனில், சம்பத் ராஜ் மற்றும் பூர்ணா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கின்றனர். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் சுரேஷ் புரொடக்ஷன்ஸின்D.சுரேஷ் பாபு, ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் ராஜ்குமார் சேதுபதி, மேக்ஸ் மூவிஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவரும் ’த்ருஷ்யம் 2’ நவம்பர் 25 அன்று Amazon Prime \ Video-இல் இந்தியாவிலும் உலகெங்கிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும். முதல் படமான திருஷ்யம் முடிந்த இடத்திலிருந்து துவங்கும் த்ருஷ்யம் 2, ராம்பாபுவின் (வெங்கடேஷ் டக்குபதி) குடும்பம் கடந்த கால நிகழ்வுகள் பற்றிய விசாரணையால் அச்சுறுத்தப்படுவதன் தொடர்ச்சியாகப் பார்வையாளர்களை ரோலர் கோஸ்டர் பயணத்தில் அழைத்துச் செல்கிறது. வரவிருக்கும் Amazon…
Read More