இன்றை ய கல்வி முறையில் உள்ள ஒரு சில குறைபாடுகளை சொல்ல வரும் படம் என்றால் அது பாடம். இந்திய அறிவியல் அறிஞர் அப்துல் காலம் அவர்கள் சொன்ன கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால் மிகை ஆகாது. இந்திய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் படமாக தான் இந்த பாடம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் அறிமுக நாயகனாக கார்த்திக் நாயகியாக மோனா முக்கிய கதாபாத்திரத்தில் விஜித், இயக்குனர் நாகேந்திரன், R.N.R. மனோகர்,நகைசுவை நடிகை மதுமிதா, யாசிகா,கவிஞர் பிறைசூடன் மற்றும் பலர் நடித்துள்ளனர் . இந்த படத்துக்கு இசை கணேஷ் ராகவேந்திரா ஒளிப்பதிவு மனோ.
படத்தின் இயக்குனர் ராஜசேகர் இவர் இந்த படத்தின் கதை திரைகதை எழதி இயக்கியுள்ளார், இந்த படத்தை ஜிபின்.P.S தயாரித்துள்ளார் . இந்த பாடம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையராங்கில் மிக விமர்சியாக நடந்தது இதில் முக்கிய விருந்தினர்களாக இயக்குனர் சீமான், அமீர், பாலாஜி மோகன், சீனுராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கவிஞர் பிறைசூடன் பொற்கோ, வேல்முருகன், கலந்துகொண்டனர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் படத்தில் இருந்து மூன்று பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரைலர் ஒளிப்பரப்பினர். இந்த பாடல்களும் ட்ரைலர் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. படத்தின் ட்ரைலரில் படத்தின் கருவை மிக தெளிவாக கூறியிருந்தார் இயக்குனர் .
இந்த இசை விழாவில் பேசிய இயக்குனர் பாலாஜி மோகன் இன்றைய பள்ளிகளில் பாடங்கள் மற்றும் மொழியும் திணிக்கபடுகிறது ஒரு மாணவனுக்கு எதில் ஆர்வம் இருக்கு என்று தெரிந்து அவனுக்கு அந்த பாடத்தை கற்பிக்கவேண்டும் என்பதை மிக தெளிவாக கூறினார். அந்த கருத்தை சொல்ல வரும் இந்த பாடம் நிச்சயம் மாணவர்களை கவரும் என்பதில் ஐயம் இல்லை, இந்த படம் மிக பெரிய வெற்றி பெறும் என்று வாழ்த்தினார்.
அடுத்து பேசிய இயக்குனர் சீனுராமசாமி “இன்றைய மாணவர்களின் கல்வி அவலநிலையை சொல்லும் படமாக தான் இந்த படத்தை நான் பார்கிறேன், காரணம் இன்று குழந்தைகள் பள்ளிக்கு செல்லவேண்டும் என்றால் தயங்குகிறார்கள் காரணம் அவர்கள் எடையை விட அவர்களின் பள்ளிகூட புத்தக எடை அதிகமாக உள்ளது அதோடு அவர்களின் எண்ணங்களுக்கு புறம்பாக உள்ளது. இதை மாற்றவேண்டும் இதை இந்த படம் நிச்சயமாக வலியுறுத்தும் என்று பேசினார் .
பின்னர் பேசிய இயக்குனர் அமீர் இன்றைய சூழ்நிலையில் பிற மொழிகள் கற்கவேண்டும் காரணம் ஒரு உணவு விடுதிக்கு சென்றால் அங்கு இருப்பவர்களுக்கு தமிழ் தெரியவில்லை அதை விட இன்று தமிழில் நடிக்கும் நாயகிகளுக்கு தமிழ் தெரியவில்லை அவர்களிடம் பேசவேண்டும் என்றாலும் ஆங்கிலம் தெரியவேண்டும் என்ற சூழ்நிலை தான் உள்ளோம் அது மட்டும் இல்லாமல் உலகில் வேறு எங்கு செல்லவேண்டும் என்றாலும் ஆங்கிலம் தெரியவேண்டிய சூழ்நிலை ஆகவே தமிழ் மொழியை மூச்சாக வைப்போம் ஆகிலத்தை தேவைக்கு பயன்படுத்துவோம் என்று கூறினார்.
பின்னர் இறுதியாக பேசவந்த இயக்குனர் சீமான் அமீருக்கு மாற்றான கருத்தை முன்வைத்தார்.
நாம் ஏன் பிற மொழிகளை கற்கவேண்டும்.மற்றவர்களை நாம் தமிழ் படிக்கவைப்போம் என்று கூறினார். அமெரிக்காவில் நான் தமிழில் தான் பேசினேன் எனக்கு மரியாதை கிடைத்தது எனவே நாம் அவர்களை தமிழ் பேச வைப்போம் என்றார்.
மொத்தத்தில் வந்தவர்கள் அனைவரும் படத்தின் மையை கருவை உணர்ந்து மிக அழகாக ஒரு பட்டிமன்றம் போல உரையாடினார்கள். இறுதியில் அனைவருக்கும் நன்றி உரை கூறினார் நடிகரும் இயக்குனரமான நாகேந்திரன்.