பிரதர் ஆடியோ லாஞ்சில் ஜெயம்ரவி சொன்ன ஹீலிங் – டீடெய்ல் ரிப்போர்ட்!

ஜெயம்ரவியின் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாக உள்ள பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.இதில் கதாநாயகன் ஜெயம்ரவி, கதாநாயகி பிரியங்கா, இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டாய்ங்க

நிகழ்ச்சியில் நாயகன் ஜெயம்ரவி பேசியது :

“ரசிகர்கள் கொடுக்கும் எனர்ஜியில் தான் என் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.எனது முதல் படத்தில் என்ன எனர்ஜியை கொடுத்த்தீர்களோ அதே எனர்ஜியை கடைசி படம் வரை கொடுப்பீர்கள் என்று தெரியும்.மக்களை சந்தோஷப்படுத்துவது தான் எனது வேலை. குழந்தை போல என்னை வழி நடத்துவது ஊடகம் தான்.பிரதர் என்ற தலைப்பை நான் தான் படத்திற்கு வைத்தேன்.அக்காவுக்கும் தம்பிக்குமான அழகான திரைக்கதை தான் பிரதர் படம்.  பிரதர் படத்தின் பாடல்கள் பிடிச்சிருந்துச்சா. நீங்கள் எல்லோரும் சொல்றதுக்கு முன்னாடி, முட்டி ஸ்டெப் ஆட வரல. சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த என் பையன் ஆரவ், என்னப்பா.. வயசாகிடுச்சா.. அப்படின்னு கேட்டான். தாங்கவே முடியல. ஒரு இரண்டு நாள் கழிச்சு, நல்லபடியா பண்ணுனேன். அதைப்பார்த்துட்டு, நீங்க செய்து காட்டுட்டீங்கன்னு போனான்..

இந்த படம் அக்காவுக்கும் – தம்பிக்குமான ஒரு அழகான ஸ்டோரி. அந்த அக்கா பூமியை விட அழகாக இருக்க நம்ம பூமிகா அக்கா தான். பல வருஷமாக பார்த்திட்டு இருக்கோம். அழுக்காத முகம், அவங்களோட முகம். எப்போதுமே அந்தப் புன்னகை, அழகு இரண்டுமே இருக்கும் அவங்களுக்கு. என் ஃபிரெண்ட்ஸ்கள் கிட்ட பூமிகா அக்கா, எனக்கு அக்காவை நடிக்குறாங்கன்னு சொன்னதும், யாரு அக்கா அவங்கள அக்கா ஆக்கிடுவியான்னு கத்துனாங்க. இதே மாதிரி தான் எம்.குமரன் படத்தில் நதியா மேம்.. எனக்கு அம்மாவாக நடிக்கப்போறதா சொன்னதும் கத்துனாங்க. இந்தப் படத்தில் அவங்களோட ஃபெர்ஃபார் மான்ஸ் எக்ஸலண்டாக இருக்கும். நாங்க சூட்டிங் ஸ்பாட்டில் நிறைய பேசுவோம். அவங்களால் எனக்கு நிறைய அறிவு கிடைச்சது. அதற்கு நன்றி மேடம்.”என தெரிவித்தார்.

பின்னர் வழக்கம் போல் வழி மறித்து மைக்கை நீட்டும் சோ கால்ட் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த சேதி :

ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். வாழு அல்லது வாழ விடு.என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீர்கள்.ஏதேதோ பெயரையெல்லாம் சொல்லி ஏதேதோ செய்கிறார்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கட்டும். கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிரை காப்பாற்றிய ஒரு ஹீலர் . வருங்காலத்தில் நானும் கெனிஷாவும் சேர்ந்து ஹீலிங் சென்டரை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். என்னையும் கெனிஷாவையும் தவறாக பேச வேண்டாம். எங்களுடைய நோக்கம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான். அதை யாரும் கெடுக்காதீர்கள்.அதை யாராலும் கெடுக்கவும் முடியாது என ஜெயம் ரவி தெரிவித்தார்.

அது சரி ஹீலிங் அப்படீன்னா?

“ஹீலிங்” என்பது மருந்து இன்றி மாத்திரை இன்றி ஒரு மனிதனின் பிராண ஆற்றலை கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறையாகும்.அதாவது :உயிர்வாழ அனைத்து உயிர்களுக்கும் பிராண சக்தி மிகவும் அவசியம். இந்த பிராணம் விலகும் போது நோய் நம் உடலை தாக்குகிறது. உடலில் கழிவுகளை தங்க வைத்து நோயாளிகளாக மாற்றி உயிரை பறித்தும் விடுகிறது.பிராண சக்தியை உடலில் செலுத்தி கழிவுகளை அப்புறப்பத்தினால் நோயில் இருந்து விடுபட முடியும். அதைதான் ஹீலிங் அப்படீங்கறாய்ங்க

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதானால் நமது பண்டைச் சித்தர்கள், மனிதர்களின் உடல் மன பாதிப்புகளைக் களைய அக்காலங்களில், வெறும் பார்வையினாலும், பிராண ஆற்றலை அவர்களின் கைகளின் வழியே, உடல் நலம் பாதிக்கப்பட்ட பாகங்களில் செலுத்தியும், மக்களின் வியாதிகளை குணமாக்கி வந்தார்கள். இந்தக் கலையே, நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி, பின்னர் அங்கிருந்து, பிராணிக் ஹீலிங் என்ற பெயரில், பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி, மீண்டும் நம்மிடம் வந்திருக்கிறது.

நாம் சுவாசிக்கும் மூச்சே, நமக்கு உயிர்வாழத் தேவையான ஆக்சிஜன் எனும் பிராண வாயுவை உடலுக்கு அளித்து, உடல் சீராக இயங்க வழிவகை செய்கிறது, என்பதை நாம் அறிந்திருப்போம். உடலில் பிராண வாயு நிரம்பி உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது, உடலைச்சுற்றி, ஒரு ஒளிவட்டம் தோன்றி, வியாதிகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது என்கிறது, இந்த பிராணிக் ஹீலிங் சிகிச்சை முறை.

உடலில் ஏதாவது பாதிப்பினால், வியாதிகள் உருவாகும் நிலை ஏற்படும் போது, இந்த ஒளிவட்டம் பாதிப்படைகிறது. அப்போது, நம்மைத் தொடாமல், அவர்களின் பிராண சக்தியைப் பயன்படுத்தி, பாதிப்புகளை நீக்கி, இந்த ஒளிவட்டத்தை, சீரடைய வைப்பார்கள். இதன்மூலம், உடலின் ஒளிவட்டம் மீண்டும் முழுமையடையும்போது, உடலில் ஏற்பட்ட வியாதிகளின் பாதிப்புகள் யாவும் விலகுகிறது.

இந்த பிராணிக் ஹீலிங் சிகிச்சைகளின் மூலம், நாள்பட்ட இதய வியாதி, இரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு, மன நிலை பாதிப்பு, புற்று வியாதிகள் மற்றும் சுவாசக் கோளாறு களையும் எளிதாக குணப்படுத்த முடியும் என்கிறார்கள். மேலும் நாள்பட்ட வியாதிகள் உள்ளவர்கள், எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி, எக்ஸ்பிரஸ் வேகத்தில், குணமடையலாமாம்

அதே சமயம் மருந்து என்பது மறு-உந்து சக்தி ஆகும். அதை தொடர்ந்து பயன்படுத்துவது தவறு. மனித உடலில் இயல்பாகவே உந்து சக்தி உள்ளது. நாம் தொடர்ச்சியாக சிறு சிறு விஷயங்களுக்கும் மருந்துகளை தேடி செல்லும்போது நம்முடைய உடல் அந்த குறிப்பிட்ட மருந்திற்காக செயல்பட ஆரம்பித்துவிடும் குறிப்பாக ‘அல்லோபதி’ மருத்துவம். இவ்வாறு நாம் தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொள்ளும் போது நம்முடைய உடல் உந்து சக்தியை இழந்து விடும். இன்னும் எளிமையாக கூறவேண்டுமென்றால், ஒவ்வொரு நோயையும் எதிர்க்கும் தன்மை நம்முடைய உடலுக்கு இயற்கையாகவே உண்டு. ஆனால், தொடர்ச்சியாக உட்கொள்ளும் மருந்துகளின் மூலம் அந்த எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகின்றது.

மேலும் ,மருந்தினைப் பயன்படுத்த வேண்டிய நேரங்களில் பயன்படுத்திதான் ஆகவேண்டும். ஏனென்றால், பல ஆண்டுகளாக நம்முடைய உடல் அல்லோபதி மருத்துவத்திற்கு அடிமையாக உள்ளது. சிறு வயதிலிருந்தே அல்லோபதி மருத்துவத்தை எடுத்துக்கொண்ட உடல் திடீரென நாம் மேற்கொள்ளும் புதிய பயிற்சிகளையோ மருத்துவத்தையோ ஏற்றுக்கொள்ளாது. நம்முடைய உடல் நாம் எடுத்துக்கொள்ளும் புதிய பயிற்சிக்கு இணங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும்.

நம்முடைய முன்னோர்கள் யாரும் ‘அல்லோபதி’ மருந்துகளை பயன்படுத்தவில்லை, அவர்கள் யாருமே மருத்துவமனை செல்லவில்லை என்று கூறினால் அது தவறு! சிறிது சிந்தித்து செயல்பட வேண்டும். நம்முடைய முன்னோர்கள் வாழ்க்கை முறைக்கும், நம்முடைய வாழ்க்கை முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. பிரசவித்தும் ஒன்பது மாதம் வரை வயக்காடுகளில் சுற்றித்திருந்த நம்முடைய முன்னோர்களிடம், டிவி ரிமோட்டை எடுக்கக் கூட மற்றவரின் உதவியை நாடும் நாம் போட்டிபோடக்கூடாது.

நாகரீகத்தின் வேகமான வளர்ச்சியால் நம்முடைய முன்னோரின் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யலாமே தவிர, நம்மால் முழுமையாக அவர்களுடைய வாழ்க்கையை வாழ முடியாது. அப்படி இருக்கும் போது, அவர்களுடைய சிகிச்சை முறையை மட்டும் கையாள்வது எந்தவிதத்தில் சரியாக இருக்கும்! ஆபத்தில் தான் முடியும்.

ஹீலிங் பயிற்சி தவறென கூறமுடியாது. அதே வேளையில் அனைத்து நோய்களுக்கும் ஹீலிங் சரியான தீர்வாகவும் அமையாது என்பதும் குறிப்பிடத்தக்கது .