மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கும் படம் ‘படை வீரன்’. இந்த படத்தில் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடிக்க, அம்ரிதா ஐயர் கதாநாயகி யாக அறிமுகமாகிறார். இவர்களுடன் முக்கிய பாத்திரம் ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா நடிக்க, இயக்குனர்கள் மனோஜ் குமார், கவிதாபாரதி மற்றும் நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசஃப், கன்யா பாரதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த தனுஷ் படத்தை பாராட்டியிருப்பதுடன் இந்த படத்தில் தன்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று கூறி, ‘லோக்கல் சர்க்கா… ஃபாரின் சர்க்கா…’ என்று துவங்கும் பாடலை கார்த்திக் ராஜா இசையில் பாடியுள்ளார். ஒரு பின்னணிப் பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பாடல் பாடுவது இதுதான் முதல் முறை என்கின்றனர் இப்படக்குழுவினர். இப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்த படத்திற்கு ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஸ்ரீனிவாசன் கவனிக்கிறார்.