31
Jul
கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீஸானது விக்ரம் பிரபு – லக்ஷ்மி மேனன் நடிப்பில் ’கும்கி’. பிரபு சாலமன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனிலும் வசூல் மழை பொழிந்தாக கூறப்பட்டது. இதில் தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதனிடையே ‘தொடரி’ படத்தைத் தொடர்ந்து, ‘கும்கி 2’ படத்துக்கான நாயகியின் தேர்வில் கவனம்செலுத்தி வந்தார் இயக்குநர் பிரபு சாலமன். முதலில் நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானி ஒப்பந்தமாவதாகத் தகவல் வெளிவந்தது. ஆனால், அச்செய்தி வதந்தி எனத் தெரிவித்த பிரபு சாலமன் நாயகியைத் தேர்வுசெய்து வருவதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘கும்கி 2’ படத்துக்குக் நாயகியாக அதிதி மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். ‘பட்டதாரி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதிதி மேனன், தற்போது அமீர் இயக்கும் ‘சந்தனத்தேவன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பல நாயகிகள் தேர்வுக்குப் பிறகு,…