05
Jun
தளபதி 68 படத்தின் பூஜை ஜூன் மாதம் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுது. மேலும் ஜூலை மாதம் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பை துவங்கி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்துகிட்டிருக்குது. இந்நிலையில் தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளமாக கொடுக்கயிருப்பதாக செய்திகள் வருகின்றன.படத்திற்கு படம் விஜய் வசூலில் சாதனை படைத்து வருவதால் அவரின் சம்பளமும் படத்திற்கு படம் உயர்ந்து வருகின்றது. இதுஒருபக்கம் இருக்க தளபதி 68 படம் விஜய் படங்களில் இருந்து மாறுபட்டு வித்யாசமாக இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன்களின் மூலம் வெங்கட் பிரபு புதுமை படைக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன .பெரும்பாலும் வெங்கட் பிரபு படங்கள் என்றாலே வித்தியாசமானதாக இருக்கும். அதைப்போல இப்படம் வித்யாசமாக இருக்கும் என்றும், படத்தைப்போல படத்தின் ப்ரோமோஷன்களும் மிகவும் வித்யாசமாக இருக்கும் என்றும்…