தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யான், நதியா, யோகி பாபு, இவானா!

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யான், நதியா, யோகி பாபு, இவானா!

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருமதி சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்டார். அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த திரைப்படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதன் போது திருமதி சாக்ஷி சிங் தோனி பேசுகையில்,“ நாங்கள் எங்களுடைய குழுவுடன் இங்கேயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது போன்ற அர்த்தமுள்ள கதைகள் வழங்குவதற்கும் ஆவலுடன் தயாராகயிருக்கிறோம்.” என்றார்.…
Read More
‘தாதா’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.

‘தாதா’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.

'தாதா' திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர். சினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அதன் நிர்வாகி துரைராஜன் என்கிற ராகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்து இருந்தார். அதில், தனது நண்பருடன் இணைந்து ஆர்.ஆர். சினி புரடெக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி மணி(Money) என்ற திரைப்படத்தை கடந்த 2016 ம் ஆண்டு தயாரித்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார். அந்த படத்தில் கதாநாயகனாக நிதின் சத்யாவும் மற்ற கதாபாத்திரங்களில் யோகி பாபு, நாசர், சிங்கமுத்து, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த நிலையில், படத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த கிஷோர் குமார் என்கிற கின்னஸ் கிஷோர், தனது தயாரிப்பு நிறுவனத்தில் 35 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்ததாக வழக்கு ஒன்றை அவர் பதிவு செய்து இருக்கிறார். பின் வேப்பேரி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், திரைப்படத்தின் ஹார்ட்…
Read More
யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’

யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’

அரவிந்த் வெள்ளைபாண்டியன் மற்றும் அன்புராசு கணேசன் வழங்கும், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’ மிகச் சில நகைச்சுவை நடிகர்கள் மட்டுமே நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல் தனித்துவமான கதாபாத்திர வேடங்களிலும் திறமையாக நடிக்கிறார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இப்போது அவர் கதையின் முக்கிய பாத்திரமாக நடிக்க இருக்கும் புதியப் படத்திற்கு ‘தூக்குதுரை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகை இனியா கதையின் நாயகியாக நடிக்கிறார். அட்வென்ச்சர் த்ரில்லர் படமான ‘ட்ரிப்’ படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். ’தூக்குதுரை’ திரைப்படம் 'PRE' (Period-Royal-Entertainer) ஜானர் வகையைச் சேர்ந்தது மற்றும் மூன்று விதமான காலங்களில் அதாவது 19ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடக்கிறது. யோகிபாபு'வுடன் - இனியா கதாநாயகியாக நடிக்கிறார்.மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின்,…
Read More
நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ (Ghosty) டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது!

நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ (Ghosty) டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது!

  கல்யாண் இயக்கத்தில் சீட் பிக்சர்ஸ் வழங்கும் காமெடி இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ திரைப்பட டீசர் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலே சொன்னது போல படம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக மனநல மருத்துவமனையை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கிறது. கதையில் சஸ்பென்ஸ் காமெடி என அனைத்து வயதினருக்கும் ஏற்றபடி திரையுலகின் முக்கிய நகைச்சுவை நடிகர்களையும் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இறுதியில் நடிகர் யோகிபாபுவுக்கும் படத்தில் வரும் குழந்தைக்கும் இடையில் வரக்கூடிய வசனங்கள் நிச்சயம் பார்வையாளர்களுக்கு பிடித்த வகையில் அமையும். திரையரங்குகளில் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லே, தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, சத்யன், ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி, சாமிநாதன், தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு அருணாச்சலம், லிவிங்ஸ்டன், சந்தான…
Read More
கூகுள் குட்டப்பா திரைவிமர்சனம்

கூகுள் குட்டப்பா திரைவிமர்சனம்

  இயக்கம்: சபரி, சரவணன் இசை: ஜிப்ரான் நடிகர்கள்: கே எஸ் ரவிக்குமார், தர்ஷன், லோஸ்லியா, யோகிபாபு, பூவையார் கூகுள் குட்டப்பா வயதான தன் தந்தையை பார்த்துகொள்ள ரோபோவை பணியமர்த்தும் மகன், ரோபோவை மகனாக பாவிக்கும் தந்தை இவர்களுக்கிடையே நிகழும் சம்பவங்கள் தான் கதை. மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த கூகுள் குட்டப்பா. மலையாளத்தில் ஏற்படுத்திய பாதிப்பை தமிழ் பதிப்பு ஏற்படுத்தவில்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோடியாக நடித்துள்ள தர்ஷன் மற்றும் லோஸ்லியா உடைய நடிப்பு ஈர்க்கும் படியில்லை. அவர்களுக்கிடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் சரி, உரையாடல் காட்சிகளும் சரி பாதிப்பை ஏற்படுத்தாமல் காட்சியை தொய்வுபடுத்துகிறது. படத்திற்கு ஆறுதலான இரு விஷயங்களில் ஒன்று கே எஸ் ரவிகுமார் நடிப்பு. தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கான நடிப்பை கொடுக்க, தனது முழு பங்கையும் அளித்துள்ளார். மற்றொன்று இசை, படத்தில் இரு பாடல்கள் கேட்கும் படி உள்ளது. மற்றபடி…
Read More
வீரமே வாகை சூடும் எப்படி இருக்கிறது ?-திரைவிமர்சனம்

வீரமே வாகை சூடும் எப்படி இருக்கிறது ?-திரைவிமர்சனம்

இயக்கம் - து ப சரவணன் நடிகர்கள் - விஷால், யோகிபாபு, ரவீனா ரவி தங்கையை கொன்ற வில்லனை தேடி பழிவாங்கும் நாயகன் இது தான் கதைக்கரு. எஸ் ஐ ஆவதற்காக தயாராகிகொண்டிருக்கிறார் நாயகன் விஷால், அப்பா போலீஸ், அன்பான தங்கை என அழகான குடும்பம் இதில் ஒரு காதலி வேறு, நியாயம் தர்மம் என பேசிக்கொண்டு திரிகொண்டு திரிகிறார். இடையில் சில ரௌடிகளால் தங்கைக்கு தொல்லை ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் இன்னொரு பெண்ணுக்கு வீடியோ எடுத்து மிரட்டும் இளைஞர்களின் பிரச்சனை. அது இல்லாமல் இன்னொரு பக்கம் பேக்டரியை மூட சொல்லும் போராளிக்கும் அரசியல் வாதி வில்லனுக்கும் பிரச்சனை இந்த மூன்று கதைகளும் எப்படி இணைகிறது என்பது தான் படம். கதையை சொல்லும் போது நன்றாக தான் இருக்கிறது ஆனால் படம் தான் கொடூர அனுபவத்தை தருகிறது விஷால் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் குடும்பத்திற்காக பழி வாங்குவார் என தெரியவில்லை.…
Read More
சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்!

சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்!

ஜனரஞ்சக திரைப்படங்களை இயக்குவதில் திறமை வாய்ந்தவர் சுந்தர் சி . சமீபத்தில் இவர் இயக்கிய அரண்மனை3 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது .அரண்மனை3 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி இயக்கம் புதிய படத்தை அவ்னி சினி மேக்ஸ் தயாரிப்பு நிறுவனம் பென்ஸ் மீடியா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்கள் .அவ்னி சினி மேக்ஸ் தயாரிக்கும் 6வது படமான இத்திரைப்படத்தில் ஜீவா, ஜெய் ,ஸ்ரீகாந்த் ஆகியோர்கள் கதாநாயர்கள்களாக நடிக்கிறார்கள்.இவர்களுக்கு ஜோடியாக  மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐய்யர்,ஐஸ்வர்யா தட்டா, ரைஷா வில்சன் ஆகியோர் நடிக்கிறார்கள் . முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு , கிங்ஸ்லி, பிரதாப்  போதன்,சம்யுக்தா ஷண்முகம் ,திவ்யா தர்ஷினி  மற்றும் பல நட்சத்திர பட்டாளமே  இணைந்து  நடிக்கிறார்கள் . யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 19 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி - யுவன்சங்கர் ராஜா கூட்டணி சேரும் படம் இது . E .கிருஷ்ணசாமி  ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி…
Read More
ட்ரிப் – விமர்சனம்!

ட்ரிப் – விமர்சனம்!

பொழுதுபோக்க உதவும் சினிமாக்களில் காமெடிக்கு என்று தனி இடமுண்டு. எல்லா டைப்பி லான சினிமாவிலும் காமெடிக்கு தனி இடம் ஒதுக்கும் சில நிலையில் முழுக்க காமெடியாக உருவாகும் படங்கள் கொஞ்சம் குறைவுதான். அந்த குறையைப் போக்க நினைத்து வந்திருக்கும் படம்தான் ‘ட்ரிப்’. ஆனால் படத்தைப் பார்த்தப் பிறகு ‘எந்த டயலாக்காவது சிரித்தோமா? என்று யோசனை செய்தபடி திரும்ப வைத்து விட்டார்கள் என்பதே உண்மை. இதன் கதை பல இங்கிலீஷ் மூவிகளிலிருந்து திருடியதாக்கும் என்று தம்பட்டம் போட்டிருப்பது மட்டும்தான் புதுமை.. ஆனால் எடுத்துக் கொண்ட ஸ்டோரி என்னவென்றால் காட்டுப்பகுதி ஒன்றுக்கு நாயகன் பிரவீன், நாயகி சுனைனா மற்றும் அவரது நண்பர்கள் சுற்றுலா செல்கிறார் கள். அப்போது வழியில் இரத்தக்கரையில் இருக்கும் யோகிபாபு, கருணாகரனை பார்த்து இவர்கள் நர மாமிசம் தின்போஎகள் என்றெண்ணி பயப்படுகிறார்கள். அதனால் காட்டிலிருந்து தப்பித்து போகும் வழியில் யோகி பாபு, கருணாகரனிடம் சுனைனா சிக்க, அவரை காட்டு பங்களாவிற்குள் தூக்கி…
Read More