ரஜினிக்கு லதாவுடன் திருமணம் நடந்த முழுக் கதை &  திரைக்கதை!

ரஜினிக்கு லதாவுடன் திருமணம் நடந்த முழுக் கதை & திரைக்கதை!

ரஜினி, புகழின் சிகரத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த நேரம். அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அவருடைய ஸ்டைலில் மனதைப் பறிகொடுத்த பெண்கள் - குறிப்பாக கல்லூரி மாணவிகள், அவருக்கு காதல் கடிதங்கள் எழுதுவார்கள். தினம் தினம் இப்படி நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து குவியும். ரஜினியுடன் நடித்த நடிகைகள் சிலரும், ரஜினியை மணக்க விரும்பினர். ஆனால், ரஜினியின் மனதில் காதல் மலரவில்லை. அவர் மனதை எந்தப் பெண்ணும் கவரவில்லை. ரஜினி 30-வது வயதில் அடியெடுத்து வைத்தபோது, மன்மதனின் மலர்க்கணை அவர் மீது பாய்ந்தது! ஆம்.. 1980-ம் ஆண்டு மத்தியில், கே.பாலசந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா நிறுவனத்தின் "தில்லுமுல்லு'' படம் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நடிகை சவுகார் ஜானகியின் வீட்டில் நடந்து கொண்டிருந்தபோது, எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு வந்தனர். அவர்களில் லதாவும் ஒருவர். கல்லூரியின் சிறப்பிதழுக்கு பேட்டி காண வந்திருப்பதாக ரஜினியிடம் கூறினார். பேட்டிக்கு ரஜினி சம்மதித்தார். லதா தமிழிலும்,…
Read More
ஜாகுவார் தங்கம் இல்லத் திருமண விழா !

ஜாகுவார் தங்கம் இல்லத் திருமண விழா !

பிரபல சினிமா சண்டை பயிற்சியாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் , நடிகருமான ஜாம்பவான் ஜாகுவார் தங்கம் - சாந்தி ஜாகுவார் தங்கத்தின் வாரிசும், வளரும் நடிகருமான ஜா.விஜய ஜாகுவாருக்கும் , வட பழனி ஆறுமுகம் - கீதா ஆறுமுகம் தம்பதியரின் மூத்த மகள் ஏ.நிவேதாவிற்கும் இன்று (25-4-2018) காலை ,வடபழனி - முருகன் கோவிலில் பெற்றோர், உற்றார், உறவினர் புடைசூழ வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவில் கலைப்புலி எஸ்.தாணு ராஜ்கிரண் , ராமராஜன், சீனு ராமசாமி , சமுத்திரகனி உள்ளிட்ட சினிமா பிரபலங்களுடன் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட அரசியல் மற்றும் நாடார் சங்க பிரமுகர்களும் , மிகத் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வந்திருந்த அனைவரையும் மணமகனின் தந்தை ஜாகுவார் தங்கமும் , சகோதரர் ஜெய் ஜாகுவாரும் வரவேற்று உபசரித்தனர்.
Read More