நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் விஜய்சேதுபதி!

நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் விஜய்சேதுபதி!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து தயாரிக்கும் 'மைக்கேல்' என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார். இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியானது. 'புரியாத புதிர்', 'ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' மற்றும் விரைவில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மைக்கேல்'. இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது. இதில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள்…
Read More
மாஸ்டர் – விமர்சனம்!

மாஸ்டர் – விமர்சனம்!

மூன்று நாள்களில் “மாஸ்டர்” உலகெங்கிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக செய்தி. கொரோனா பொதுமுடக்கத்தால் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திரையரங்குகளில் உச்ச வரிசை நாயகரான விஜய் படம் வெளியாகியிருக்கிறது. பொதுமுடக்க காலத்தின் இழப்புகளாலும் தொடரும் மனஅழுத்தங்களினாலும் “மாஸ்டர்” வந்தால் திரையரங்கில் பார்த்துவிட வேண்டும் என்ற உளவியல்ரீதியான முன்முடிவில் இருந்த மக்கள் படையெடுத்திருக்கிறார்கள். படம் எப்படி இருக்கிறது என்பதைவிட, படத்தை திரையரங்கில் பார்க்கிறோம் என்பதே இன்றைய நிலையில் “பெரிய என்டர்டெயின்மென்ட்” ஆக மாறியிருக்கிறது. கூடவே பொங்கல் விடுமுறை, வணிகரீதியாக போட்டிப் படங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதில் வியப்பேதுமில்லை. திரையரங்குகள் வாயிலாக மீண்டும் தமிழ்த் திரைப்பட வர்த்தகம் பொதுமுடக்க காலத்துக்கு முந்தைய நிலையை எட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அது நிறைவேறியிருக்கிறதா? முன் கள திரை வர்த்தகர்களுக்குத்தான் தெரியும். சரி. படம் எப்படி இருக்கிறது? இது விஜய் படமா அல்லது விஜய் சேதுபதி படமா என்ற…
Read More
பாலிவுட்டில் கமலுக்கு சவால் விடப் போகும் விஜய்சேதுபதி!

பாலிவுட்டில் கமலுக்கு சவால் விடப் போகும் விஜய்சேதுபதி!

தமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரலபலமான முகங்களில் ஒருவருமான விஜய் சேதுபதி, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகரின் 'காந்தி டாக்ஸ்' திரைப்படத்தின் மூலம் தனது தடத்தை பாலிவுட்டில் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகில் தயாராகப்போகும் மவுனத் திரைப்படம் இது. இந்தப் படத்தைப் பற்றி பேசியிருக்கும் இயக்குநர், 19 வருடங்களாக இந்தச் சவாலான கதையை தயார் செய்தது குறித்தும், தனது கனவை 'காந்தி டாக்ஸ்' மூலம் நனவாக்கி யது குறித்தும் பகிர்ந்துள்ளார். 1987ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'புஷ்பக விமானா' என்கிற திரைப்படமே பாலிவுட்டில் கடைசியாக உருவான மவுனப் படம். இந்தப் படத்தில் ஏன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிவெடுத்தேன் என்று பேசியிருக்கும் இயக்குநர் கிஷோர், "இந்தப் படம் உணர்ச்சி ரீதியாக என் இதயத்துக்கு நெருக்கமான படம். ஒரு நடிகரும் அந்த யோசனை மற்றும் அதே உணர்ச்சிகளோடு தன்னை தொடர்புபடுத்திக்…
Read More
‘பரோல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி!

‘பரோல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி!

ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே "காதல் கசக்குதய்யா" படத்தை இயக்கியவர். ’பரோல்’ படத்தில் பீச்சங்கை படத்தில் நடித்த கார்த்திக் ஆர். ஸ் மற்றும் சேதுபதி & சிந்துபாத் படத்தில் நடித்த லிங்காவும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மோனிஷா மற்றும் கல்பிக்கா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் வினோதினி, ஜானகி சுரேஷ், டி.கே.ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் ’பரோல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். படத்தின் போஸ்டரும், மோஷன் போஸ்டரும் வரவேற்ப்பை பெற்றது மட்டுமன்றி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. ’பரோல்’ படத்தை பற்றி இயக்குனர் துவாரக் ராஜா கூறுகையில், “இது நான் ரெண்டாவது முறையா இயக்குற முதல் படம். ஒரு 48 மணிநேரத்துல வியாசர்பாடில ஆரம்பிச்சு திருச்சி, மதுரை போயி திரும்பி விக்ரவண்டி, சேலையூர், வியசார்பாடின்னு வந்து முடியுற கதைல…
Read More
என் வாழ்க்கையே சர்ச்சைகள் நிரம்பியதுதான் – 800 திரைப்படம் குறித்து முத்தையா முரளிதரன்!

என் வாழ்க்கையே சர்ச்சைகள் நிரம்பியதுதான் – 800 திரைப்படம் குறித்து முத்தையா முரளிதரன்!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையின் விளையாட்டு சாதனை வரலாற்றை படமாக 800 என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கவும் அதில் விஜய் சேதுபதி நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார். ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் முத்தையா முரளிதரன், ராஜபக்சேவின் இன்னொரு முகம் எனவே அவர் குறித்து படத்தில் நடிக்கக் கூடாது என பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடங்கி ஏகப்பட்ட விஐபி-க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முத்தையா முரளிதரன் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்க அறிக்கையில், "இது நாள் வரை நான் என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய…
Read More
சர்ச்சைகளைச் சட்டை செய்யாமல் முரளிதரனாக மாறும் விஜய் சேதுபதி!

சர்ச்சைகளைச் சட்டை செய்யாமல் முரளிதரனாக மாறும் விஜய் சேதுபதி!

ஒரு சினிமா படம் குறித்த அறிவிப்பே உலகளவில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை உருவாக்குவது ரொம்ப அபூர்வம். சர்வதேச அளவில் தலைசிறந்த ஆளுமைகளின் பயோபிக் சிலபல் அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்க்கி உள்ளது. அப்படித்தான் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், மிகப்பெரிய ஆளுமையான முத்தையா முரளிதரன் பயோபிக்கை அறிவிப்பதில் மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் பெருமிதம் கொள்கிறது. முன்னொரு காலத்தில் தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்க அழைத்து செல்லபட்டு அங்கு தினக்கூலிகளாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் மிகவும் ஏழ்மையிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கஷ்டப்பட்டுப் படித்து, வளரும் போது கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்கிறான். அப்போது அவருக்கு சமூகத்திலிருந்து ஏற்படும் இன்னல்களை வெற்றிகரமாக கடந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார். அதற்குப் பிறகு அவரை வளரவிடாமல் தடுக்க தடைகள் வரும் போது, ஒவ்வொரு தடையையும்…
Read More