30
Mar
இயக்குனர் - அருண் குமார் நடிகர்கள் - விக்ரம் , எஸ் ஜே சூர்யா, சுராஜ், துஷாரா இசை - ஜி வி பிரகாஷ் குமார் தயாரிப்பு - ரியா ஷிபு- ஹெச் ஆர் பிக்சர்ஸ் தொடர் தோல்வியில் சிக்கித் தவிக்கும் சீயான் விக்ரமுக்கு நிம்மதி தரும் வகையில், ரசிகர்களுக்கு ஆக்சன் விருந்தாக வந்துள்ளது வீர தீர சூரன். சித்தா படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அருண் குமார் விக்ரமை இயக்குகிறார் என்றவுடனே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடிவிட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகச்சரியாக புரிந்துகொண்டு, அவர்களுக்கு விருந்து வைத்துள்ளது படக்குழு! வழக்கமாக முதல் பாகம் வெளியான பின்னரே இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால், வீர தீர சூரனை பொறுத்தவரை புது முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். இதனாலேயே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த பெரிய குடும்பத்துக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை காரணமாக…
