வெள்ளித்திரையின் தனிப்பெருங்கவி- ரகுவரன்: பிறந்த நாளின்று!

திரைப்பட ரசிகர்களின் மனவெளியில் ஒருபோதும் மங்காத தனித்துவமான பிம்பம் ரகுவரன். வெறும் நடிகராக மட்டுமல்லாமல், தனது ஆழ்ந்த கவிதை மனம், தனித்துவமான இசை ரசனை, மற்றும் அழுத்தமான உடல்மொழி ஆகியவற்றால் தலைமுறைகளைத் தாண்டியும் ஈர்க்கும் அபூர்வக் கலைஞன் அவர். இன்று டிசம்பர் 11, அந்தக் கலை ஆளுமையின் பிறந்த தினம்.  வில்லனுக்கும் ஒரு ஆத்மா உண்டு ரகுவரனின் நடிப்பு எல்லைகள் அற்றது. அவர் வில்லனாகத் திரையில் தோன்றியபோது, அது வெறும் வில்லத்தனமாக மட்டும் இருந்ததில்லை; அது புத்திசாலித்தனம், வலி, இயலாமை, மற்றும் துரோகம் ஆகிய உணர்வுகளின் சிக்கலான கலவையாக இருந்தது. குறிப்பிட்டு சொல்வதானால் வில்லன் என்றால் காட்டுத்தனமாக கத்த வேண்டும், முரட்டு லுங்கி, அழுக்குப் பனியன், கடா மீசை, கையில் பாட்டில், வாயில் புகை என்ற செட்டப்புக்குள் வராத ஒரே வில்லன் ரகுவரன் மட்டுமே கோட்சூட் அணிந்து ஹைடெக் வில்லனாக வலம் வந்து சாதித்தவர் ரகுவரன் மட்டுமே . புதிய பரிமாணம்:…
Read More
தமிழ், தெலுங்குத் திரையுலகிற்கு மாபெரும் நிவாரணம்! ₹3,000 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய ‘iBomma’ கிங்பின் கைது!

தமிழ், தெலுங்குத் திரையுலகிற்கு மாபெரும் நிவாரணம்! ₹3,000 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய ‘iBomma’ கிங்பின் கைது!

பிரபலமான திரைப்படத் திருட்டு இணையதளங்களான 'iBomma' மற்றும் அதன் கிளைத் தளங்களின் முதன்மை நிர்வாகி எனச் சந்தேகிக்கப்படும் இம்மாடி ரவி (Immadi Ravi) என்ற தில்லாலங்கடி கேடியை, நவம்பர் 15, 2025 அன்று ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. தென்னிந்தியத் திரைப்படத் துறைக்கு ₹3,000 கோடிக்கும் மேல் இழப்பை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் இந்த மாபெரும் சைபர் குற்றவாளியின் கைது, திரையுலகிற்குப் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. யார் இந்த ரவி இமாண்டி? அடையாளம்: ரவி இமாண்டி, 2019 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் iBomma கும்பலின் 'கிங்பின்' ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்தியப் படங்களை அவற்றின் வெளியீட்டு நாளிலேயே அல்லது OTT வெளியீட்டுக்குப் பின் உடனடியாக உயர் தரத்தில் (HD) பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் இலவச இணையதளங்களை இயக்கி வந்துள்ளார். சாம்ராஜ்யம்: இவருக்குச் சொந்தமான 65க்கும் மேற்பட்ட மிரர் சைட்கள்…
Read More
கமல் நடிப்பில் வெளியான ‘குணா’ ரிலீஸான நாள்!

கமல் நடிப்பில் வெளியான ‘குணா’ ரிலீஸான நாள்!

சில படங்களை நெனச்சு பக்கம் பக்கமாக எழுதலாம். கமலின் குணா அப்படியொரு படம். 34 ஆண்டுகளுக்கு முன் 1991 இதே நவம்பர் 5 ஆம் தேதி இதே நாளில் குணா ரிலீஸாச்சே பார்வையாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் ஆச்சரிய அலையை ஏற்படுத்திச்சு. அதேநேரம் பொதுப்பார்வையாளர்களை படம் சென்றடையுமா என்ற கேள்வியும் எழுந்துச்சு. மாஸ் ஹீரோ படத்திற்கென ஒரு ஃப்ரேம் உண்டு. அவன் எவராலும் வெல்ல முடியாதவன், தீமைகளை அழிப்பவன்... இப்படி. ஆனா குணா அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கதை, கதாபாத்திரங்கள், காட்சிகள் அம்புட்டும் அதுவரை தமிழ் சினிமா அறியாத தளத்தை, வண்ணத்தை கொண்டிருந்துச்சு..அந்த வகையில் குணாவின் கதையும் காட்சிகளும் பல வருடங்களாக இன்னிக்கும் பேசப்பட்டும், வியந்து போற்றப்பட்டும் வருது. குணா படத்தின் பின்னணி தகவல்களும் அதேயளவுக்கு ஆச்சரியம் கொண்டவை. மலையாளத்தின் சிறந்த இயக்குநர்களை தமிழில் பயன்படுத்தோணும் அப்படீங்கற விருப்பம் கமலுக்கு முன்பே இருந்துச்சு. பரதன், சிபி மலையில், பாலச்சந்திர மேனன் என பலருடன் இணைஞ்சு படம்…
Read More
கோடம்பாக்க சார்லி சாப்ளின் சந்திரபாபு  பர்த் டே!

கோடம்பாக்க சார்லி சாப்ளின் சந்திரபாபு பர்த் டே!

ஒரு ஆக்டர் என்பவர், எல்லா விதத்திலும் நடிக்கோணும். அதாவது முகத்தால் நடிக்கோணும். கண்களால் நடிக்கோணும். கை அசைவுகளால் நடிக்கோணும். நடையிலும் ஓட்டத்திலும் நடிக்கொணும். இதைத்தான் ‘பாடி லாங்குவேஜ்’ என்று கொண்டாடுவாய்ங்க ரசிகர்களுங்க. மிகச் நடிகரின் அங்க அசைவுகளும் பார்வைகளும் மெளனங்களும் முகபாவனைகளும் சேஷ்டைகளும் கோணங்கித்தனங்களும் மட்டுமே நமக்குள் வெடிச்சிரிப்பைக் கொடுத்துவிடும். வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிப்போம். மூச்சுமுட்டச் சிரிப்போம். கண்களில் நீர் வரச் சிரிப்போம். அதேசமயம், அந்த மனிதரின் வாழ்வின் சோகங்களை நினைத்து நினைத்து விகசிப்போம். கண்ணீர்விடுவோம். சார்லி சாப்ளின் நம்மைச் சிரிக்கவைத்தார். அவரின் வாழ்க்கையோ நமக்கு துயரத்தைக் கொடுத்தது. நம்மூரிலும் அப்படியொரு நடிகரைச் சொல்லலாம். நம்மவரும் ஓடுவார். தடக்கெனக் குதிப்பார். பரபரவென பாய்வார். இல்லாத சேட்டைகளையெல்லாம் செய்வார். அவர் செய்வதெல்லாம் இருக்கட்டும். அந்தக் கண்களை வைத்துக்கொண்டு உருட்டினாலே குபுக்கென்று சிரித்துவிடுவோம். அப்பேர்பட்ட பண்பட்ட நடிகர்தான்... சந்திரபாபு. முத்து நகரம் என்று போற்றப்படுகிற தூத்துக்குடியில் பிறந்த திரைமுத்து சந்திரபாபு. அவரின் தந்தை சுதந்திரப்…
Read More