24
Sep
விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’, விஜய் ஆன்டனி நடித்த ‘சலீம்’ படங்களை தயாரித்தவர் ஸ்டுடியோ-9ஆர்.கே.சுரேஷ். இவர் சாட்டை, தாரைதப்பட்டை, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களையும் வெளியிட்டுள்ளார். இவரின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதால் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் வில்லனாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாலா. அதை தொடர்ந்து ‘மருது’ படத்தில் வில்லனாக நடித்த இவர் தற்போது விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச், உதயநிதியுடன் ஒரு படம், ஹரஹரமஹாதேவகி, பள்ளிப்பருவத்திலே ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அத்துடன் பில்லாபாண்டி, வேட்டை நாய், தனிமுகன் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வரும் இவர் மேலும் பல படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். பில்லாபாண்டி படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடந்த போது தான் பெப்ஸி பிரச்சனை உருவானது குறிப்பிடத்தக்கது. தற்போது படு பிசியாக இருக்கும் ஆர்.கே. சுரேஷ் தனக்கு கல்யாணம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து…