2021ல்  சம்மர் ஸ்பெஷலுக்காக பிரமாண்டமாய் தயாராகும் ‘அரண்மனை 3’!

2021ல் சம்மர் ஸ்பெஷலுக்காக பிரமாண்டமாய் தயாராகும் ‘அரண்மனை 3’!

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை' சீரீஸ் படங்கள், முதல் இரண்டு பாகங்கள் பெரிய வெற்றி பெற்றன.அதன் தொடர்ச்சியாக இப்போது 'அரண்மனை3' உருவாகி வருகிறது. இப்படத்திற்காக சென்னை EVP ஃபிலிம் சிட்டியில் 2 கோடி செலவில் கலை இயக்குநர் குருராஜ்-ன் கைவண்ணத்தில் பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்பட்டு அதில் சண்டைக் காட்சி படமாகியுள்ளது. முதன்முதலில் சுந்தர்C யுடன் ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இணைந்துள்ள இப்படத்தின் உச்சக்கட்ட சண்டைக் காட்சி பிரமாண்டமாக பதினொரு நாட்கள் படமாக்கப்பட்டது. இதுவரை சுந்தர்சியின் படங்களில் “ஆக்ஷன்” action படத்தில் அதிக ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதன் பிறகு இந்தப் படத்தில் தான் மிக பிரமாண்டமாக ஸ்டண்ட் அமைத்துள்ளார்கள். இந்த பேய்ப்படத்துக்கு 2 கோடி செலவில் பிரமாண்டமான அரண்மனை செட் அமைக்கப்பட்டு அதில் 11 நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட்டுப் படமாகியுள்ளது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இக்காட்சியில், ஆர்யா, ராக்ஷி கன்னா, சுந்தர்C, சம்பத், மதுசூதன்…
Read More
இது வரை திரைக்கே வராத புத்தம் புதிய திரைப்படம்’ நாங்க ரொம்ப பிஸி’ – உங்கள் சன் டிவியில்!

இது வரை திரைக்கே வராத புத்தம் புதிய திரைப்படம்’ நாங்க ரொம்ப பிஸி’ – உங்கள் சன் டிவியில்!

சுந்தர் .சி யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பத்ரி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரசன்னா, ஷாம் , அஸ்வின் காக்கு மனு, யோகி பாபு, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு- கிச்சா, கலை- பிரேம், எடிட்டிங் -பென்னி, நடனம் - சந்தோஷ், சண்டைக்காட்சிகள்- பிரதீப் தினேஷ் .டீமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. இக்கதையில் நகைச்சுவை மேலோங்கியிருந்தாலும் ரொமான்ஸ், ஆக்ஷன் போன்றவையும் கலந்திருக்கும். கொரோனா காலத்தில் திரையுலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கும் சூழலில் அரசின் பாதுகாப்பு வழி முறைகளோடு தொடங்கப்பட்ட முதல் படம் இதுதான். அது மட்டுமல்ல  செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கப்பட்டு 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு கொரோனா காலத்திலேயே முடிக்கப்பட்ட படமும் இதுதான். முழுக்க முழுக்க சென்னையில் பல்வேறு இடங்களில் படமாகி உள்ளது. படம் பற்றி இயக்குநர் பத்ரி பேசும் போது,"கொரோனா காலத்தில் குறிப்பிட்ட முப்பதே நாட்களுக்குள்…
Read More