எதற்கும் துணிந்தவன் – திரை விமர்சனம்

எதற்கும் துணிந்தவன் – திரை விமர்சனம்

  இயக்கம் - பாண்டிராஜ் நடிப்பு - சூர்யா, பிரியங்கா மோகன்,சத்யராஜ்,வினய் கருணை இல்லா மனித மிருகங்களால் சூரையாடப்படும் பெண்களை போராடி மீட்கும் நாயகனின் கதை தான் எதற்கும் துணிந்தவன், நன்றாக வாழும் இரண்டு கிராமங்களில் பெரிய மனிதன் போர்வையில் வலம் வரும் வினய் அவரது இச்சைக்காக ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி, பல தவறூகளை செய்கிறார். இதனால் சில உயிர்களும் பறிபோகின்றன. அதை அறியும் நாயகன் சூர்யா, வில்லனை முறியடித்து அப்பாவிகளை எப்படி காக்கிறார் என்பது தான் கதை. ஜெய்பீம் படத்திற்கு பிறகு மீண்டும் சமூக நோக்கிலான படம் செய்ததில் கவர்கிறார் சூர்யா, ரசிகர்களுக்கு ஏற்ற மசாலா காமெடியும் கலந்து ஒரு குடும்ப படமாக ரசிக்க வைத்திருக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவுக்கு திரையில் வந்திருக்கும் படம் ரசிகர்களின் மொத்த ஏக்கததையும் போக்கும் வகையில் ஆடல் பாடல் ஆக்சன் காமெடி கருத்து எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். பஞ்ச் வசனம் காமெடி…
Read More
“தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்பட விமர்சனம்

“தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்பட விமர்சனம்

இந்திய தலைநகர் டெல்லியில் 2012ல் நடந்த நிர்பயா பாலியல் கூட்டு வன்புணர்வு, 2017 உன்னாவ் சிறுமி கூட்டு வன்புணர்வு, 2018 கத்துவா சிறுமி கூட்டு வன்புணர்வு, 2019 ஹைதராபாத் கால்நடை மருத்துவர் வன்புணர்வு, 2020 ஹத்ராஸ் தலித் சிறுமி வன்புணர்வு இவையெல்லாம் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான மிருகத்தனமான பாலியல் குற்றங்களின் கொடூரமான யதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. 2020 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் தினமும் சராசரியாக 95 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவானதாகச் சொல்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau-NCRB) தரவுகள். அதே ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் உட்பட பதிவான வழக்குகள் 5 லட்சத்துக்கு அதிகம். இதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் NCRB சொல்கிறது. 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 28,046 (தினப்படி சராசரி 81) வன்புணர்வு வழக்குகள் பதிவானதாக சொல்லும்…
Read More