17
Jul
ரேட்டிங்: 3/5 ⭐⭐⭐☆☆ இயக்கம்: பாரி இளவழகன் நடிப்பு: பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் இசை: பரத் சங்கர் இயக்குநர் பாரி இளவழகன், ஜமா படத்தின் மூலம் தனது திரைக்கதை சொல்லும் விதத்தாலும், இயல்பான நடிப்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அதனால், அவரது அடுத்த படமான “அன்பே டயானா” மீது இயல்பாகவே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஜமா அளவுக்கு இன்னொரு மனதைத் தொடும் படைப்பை அவர் கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றால், அந்த எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேறுகிறதா என்றால், பதில் கொஞ்சம் கலவையாகத்தான் இருக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலம் அதன் களம். பெரம்பூரை வெறும் படப்பிடிப்பு இடமாக மட்டும் பயன்படுத்தாமல், அங்குள்ள வாழ்க்கை முறையையே ஒரு கதாபாத்திரமாக மாற்றியிருக்கிறார் பாரி. ஆங்கிலோ-இந்தியர்கள், தலைமுறைகளாக வாழும் குடும்பங்கள், ஆந்திராவிலிருந்து வந்து குடியேறிய தெலுங்கு மக்கள், தமிழ் பேசும் மக்கள் என பல…
