15                                    
                                    
                                        Jan                                    
                                
                            
                        
                        
                    
                        சமீபத்த்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற புஷ்பா படத்தில், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்த ‘ஏ சாமி’ பாடல் கேரள கோவிலில் நாதஸ்வர கலைஞர்களாக வாசிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைத்துறையே திரும்பி பார்க்கும், பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது, ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் 'புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்த புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1 கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வெளியானது. கொரோனா காலகட்டத்தை கடந்து திரையரங்குகளில் கூட்டத்தை வரவைத்ததோடு தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் இந்தியா முழுதும் மிகப்பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசை மிக முக்கியமாக இருந்தது குறிப்பிடதக்கது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானதுடன் பெரும் பேசுபொருளாகவும் ஆனது குறிப்பிடதக்கது.…                    
                                            
                                    